(Reading time: 3 - 5 minutes)

ரத்தம் வரணும் கிச்சாமி - ஸ்ரீநிவாஸ்

This is entry #87 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

mail

ஞாயித்துக்கிழமை தானே என்று எட்டு மணிக்குத்தான் எழுந்தான் கிருஷ்ணசுவாமி. நண்பர்களுக்கு அவன் கிச்சாமி ஆகிவிட்டான். அவனுடைய அப்பா, அம்மாவுக்கு அவன் என்றைக்கும் கிருஷ்ணா தான்.

ஆஜாணுபாஹுவான தோற்றம். நல்ல சிவப்பு நிறம். நீளமான மூக்கு. மூக்கின் கீழே மிளகு சைசில் மச்சம். உடற்பயிற்சி செய்து உடம்பு திண் என்றிருந்தது அவன் அப்பாவும், அம்மாவும் ஒரு கல்யாணத்திற்காக பெங்களூர் போயிருக்கிறார்கள். வரும் புதன்கிழமை அன்று தான் திரும்புகிறார்கள்.

பல் துலக்கிவிட்டு பால் பாக்கெட்டை எடுக்க கதவை திறந்தவன் கிழே ஒரு தபால் கார்டு இருப்பதை பார்த்து அதைகையில் எடுத்தான். அந்த கார்டின் மேல் இருந்த குண்டூசி அவன் விரலை பதம்பார்ததில் லேசாக ரத்தம் வந்தது. அதில் ஓரே ஒரு வாசகத்தைத் தவிர வேறு எதுவம் இல்லை. அதில் ரத்தம் வரணும் கிச்சாமி என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

அதை யார் எழுதினார்கள்? எதற்காக எழுதினார்கள்? எழுதியன் ஏன் தன் பெயரை எழுதவில்லை? யாருக்கு ரத்தம் வரணும்? கிச்சாமிக்கா அல்லது வேறு யாருக்குமா? எதற்காக ரத்தம் வரணும்? என்று பல விடை தெரியாத கேள்விகளோடு வீட்டிற்குள்ளே நுழைந்தவன்,  முன்னும் பின்னும் புரட்டி பார்த்தவன், தபால் கார்டை பார்த்தான். ஓரே ஒரு வாசகத்திற்காக தபால் வீணடித்தவன் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் தபால் கார்டை முன்னும் பின்னும் புரட்டி அதில் முகவரி ஏதாகிலும் இருக்குமோ என்று பார்த்தான். கார்டு மொட்டையாகவே இருந்தது..

ஆனாலும் அவனால் அலட்சியமாக இருக்கமுடியவில்லை. ஏனென்றால் அவன் பெயர் சம்பந்தப்பட்டு இருக்கிறதே? நன்றாக யோசித்தான். நேற்று இரவு அப்பா அம்மா வை ரயில் ஏற்றி விட்டு வந்தபோது மணி பதினொன்று. அப்போது எதுவும் தபால் இல்லை. அப்படியானால் இன்று காலையில்தான் யாராவது போட்டுசென்றிருக்கவேண்டும்.

யாரடா இது காலங்கார்த்தால குடைச்சல் குடுப்பது, என்று யோசித்தவண்ணம் காப்பியை அருந்திக்கொண்டே கணினியைத் தட்டி தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை திறந்தான். அதிலும் ஒரு புது மின்னஞ்சல் முகவரிஇலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதிலும் ரத்தம் வரணும் கிச்சாமி என்றே இருந்தது. This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரியில் இருந்து வந்திருந்தது. அதுவும் அவனுக்கு பரிச்சயமில்லாத முகவரி.

யாராடாயிது?

தபாலில் அனுப்புஹிரான், இ மெயிலில் அனுப்புகிறான், யார் என்று தெரியவில்லையே?, நாணாவை கூப்பிட்டு கேட்கலாமா என்று நனைத்து எழுந்தவன் தலையில் தினக் காலண்டர் அட்டை இடித்தது.

அதில் இருந்த தேதியைக் கிழித்தவனுக்கு ஏப்ரல் 1 என்று தேதியை பார்த்தபோது எல்லாம் விளங்கிப்போனது. ஒ!!! இன்று முட்டாள்கள் தினத்தில், என்னை நிஜமாகவே யாரோ முட்டாளாக்கி விட்டார்களே என்று புலம்பிக்கொண்டே தன் அதுத்த வேலையை பார்க்கப்போனான் கிச்சாமி.

This is entry #87 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.