(Reading time: 6 - 12 minutes)

வேலை, வேலை - வின்னி

workaholic

ந்து மணி! வேலைக் களைப்பு!.  வீட்டுக்குப் போக ஆயத்தமாகிறேன். கணினியின்  சக்தியை நிறுத்துகிறேன். தொலைபேசி ஏன்தான் இந்த நேரத்தில் அடிக்கிறதோ! எடுக்க மனமில்லாமல் எடுக்கிறேன். டொரோண்டோ, கனடாவில் உள்ள அந்த ஹோடேலில் வேலை தொடங்கிய நாள் முதல் வீட்டுக்கு, நேரத்துக்குப் போன நாள் குறைவு. இன்று பிள்ளைகளை ஹோக்கி மாட்ச்சுக்கு கூட்டி செல்வதாக வாக்களித்திருந்தேன். பல முறை என்னிடம் ஏமாந்த அவர்களுக்கு என்னிடம் அவ்வளவு  நம்பிக்கை இல்லை. எதோ ஓர் அர்ப்ப நம்பிக்கையில் பள்ளிக்கூடம் போய் விட்டார்கள்       

அந்த ஐந்து நட்சத்திர ஹோடேல், 1385 ம் அறையிலிருக்கும் ஒருவருக்கு நெஞ்சு வலி!. எல்லாவற்றையும் விட்டு விட்டு வேகமாக அந்த பதின்மூன்றாம் மாடிக்குப் பறக்கிறேன். கதவைத் தட்டினால் ஒரு சத்தமும் இல்லை!.மாஸ்டர்கீயைப் போட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.

நெஞ்சைப்பிடித்தபடி ஒருவர் தரையில்கீழே விழுந்திருந்தார். டெலிபோனில் அம்புலன்சை அழைத்துவிட்டு. முதல் சிகிச்சையை ஆரம்பித்தேன். சிலநிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது. நோயாளியை  மருத்துவமனையில் சேர்த்து விட்டு, வீடு நோக்கி புறப்பட்டேன்.

ல்லாம் முடிந்து வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிட்டது. ஹோக்கி மாட்சை மறந்துவிட்டேன். வீட்டில் எனக்காக மூன்று மணி நேரம் காத்திருந்து மூன்று  பிள்ளைகள். சாப்பிட்டு விட்டு தமது அறைகளில் போய்ப் படுத்து விட்டார்கள்.  

"என்ன நடந்தது? " “ஏன் இவ்வளவு நேரம்”,  கோபத்தில் மனைவி கத்தினால். நான் சொல்வதை கேட்கும் மன நிலையில் அவளில்லை. நான் மூன்று நாலு மணி கழித்து வருவது ஒவ்வொரு நாளும் நடக்கும் விஷயம் தானே!.

காலையில் எழுந்ததும் முதலில் தோன்றியது அந்த நோயாளிக்கு என்ன நேர்ந்திருக்கும்  என்ற எண்ணம்தான்! மருத்துவமனைக்கு நேராக விரைந்தேன். “நோயாளிக்கு சத்திர சிகிச்சை செய்கிறார்கள்”. “இப்ப பார்க்கமுடியாது” என்றார்கள்! 

மூன்று பிள்ளைகளும் அடுத்த நாள் முழுக்க என்னுடன் பேசவில்லை. அவர்களுக்கு நேற்று ஹொக்கி மேட்ச் போகவில்லை என்ற கோபம்!. நான் என்ன செய்வது, என் வேலை அப்படி. மனைவிக்குத் தெரியும்! பிள்ளைகளுக்குத் தெரியுமா?. மனைவி, மன்னித்து விடுவாள். ஆனால் பிள்ளைகள் மன்னிப்பார்களா! 

என் எண்ணமெல்லாம் அந்த ஹோட்டல் விருந்தாளியை பற்றித்தான்!.

டுத்தநாள் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு விரைந்தேன்.சிகிச்சை முடிந்து விட்டது, அவரது சுகம் விசாரித்தேன். அவர் எனக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டு," எனக்கு இன்னுமொரு உதவி செய்வீர்களா?" என்று கேட்டார். " மனைவி இன்னும் சில மணி நேரத்தில் லண்டனில் இருந்து வருகிறாள்"  என்னுடைய  அறையில் இருந்து சில பொருட்களை எடுக்க வேண்டும் என்னுடைய அறைக்ககுப் போய்  என்னைக் கூப்பிடுங்கள் என்றார். ஒரு நாளைக்கு  முன்நூறு கனடியன் டாலர் வாடகை கொடுப்பவருக்கு அது கூட  செய்ய முடியாதா?

அவரது அறைக்கு விரைந்தேன். விலைமதிப்புள்ள பெட்டியில் அழகழகாக அடுக்கி வைத்திருந்த கியூபா நாட்டு சுருட்டுகள், பாதியில் குடித்து விட்டு வைத்திருந்த சுருட்டு ஒன்று , விலைமதிப்புள்ள ‘சிவாஸ் ரீகள்’ விஸ்கி.  ஒரு கிலாசில் பாதி விஸ்கி,, பாதி கடித்தும் கடிக்காமலும் பொரித்த கோழி , பிளே பாய் இதழ் ஒன்று , ஆபாசப் பட சீடி,, பத்துப் பதினைந்து ஆபாசப் புத்தகங்களும்,  அறை  முழுவதும் அடுக்கி வைக்கபட்டிருந்தன.

அவர் எதை எல்லாம்  மனைவியிடம் இருந்து மறைக்க போகிறார் என்று எனக்குப் புரிந்தது!

விளையாட்டு சம்பந்த பட்ட புத்தகங்கள்! எழுதியும் எழுதாமலும் இருந்த வெள்ளைக் காகிதத் தாள்கள்!.  அவரது வியாபார அட்டையை பார்க்கிறேன்.அவர் ஒரு பிரபல  நிருபர்! ஆங்கில தொலைகாட்சியில் பார்த்த ஞாபகம்!. ஐஸ் ஹொக்கியில் நல்ல அறிவுள்ளவர், ஹொக்கி பிரியர்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். ஆங்கிலத்தில் சரளமாக எழுதுவார்! ஆங்கிலேயர் அல்லவா! 

நானும் பிள்ளைகளும் ஓய்வு நேரம் கிடைத்தால் பார்ப்பது ஐஸ் ஹொக்கிதான். பிள்ளைகளுக்கு ஹொக்கி என்றால் பைத்தியம். எனக்கு அவர்கள் வயதில் கிரிக்கெட்டில் இருந்த பையித்தியம் போல!. அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவருக்கு நான் எந்நேரமும் கிரிக்கெட் விளையாடுவதில் விருப்பமில்லை. நன்றாக படித்து டாக்டராகவோ ஒரு லாயாரகவோ வர வேண்டும் என்ற ஆசை.

இந்தியாவில் எல்லா பெற்றோருக்கும் உள்ள ஆசைதான்!. ஆனால் நானோ ஹோடேலில் சேரவேண்டும், உலகம் சுற்ற வேண்டும் என்று வேறு கனவிலிருந்தேன். எனது கனவு பலித்தது. ஒரு நண்பர் மூலம் கனடாவில் ஒரு ஹோடேலில் மனேஜராக வேலை கிடைத்தது. ஆனால் அம்மாவோ எனக்கு திருமணம் செய்து வைக்க வேணும் என்ற வேறு ஒரு ஆசையில் இருந்தாள். அப்பாவை வெல்ல முடியும் அம்மாவை வெல்லமுடியுமா?, வேலை கிடைத்த கையோடு கல்யாணமும் முடிந்தது. அத்தை மகள் அழகானவள், படித்தவள், என்னோடு நன்றாக பழகியவள் வேறு என்ன வேண்டும் எனக்கு.     

ஒரு கார்ட்போர்ட் பெட்டியை எடுக்கிறேன். அவர் சொன்ன எல்லாவற்றையும் பெட்டியில் போட்டு . பெட்டியை எனது ஆபீஸ் அறையில் கவனமாக வைக்கிறேன். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.