(Reading time: 7 - 14 minutes)

போகப் போகப் புரியும் - வின்னி

nature

ரு தனிமையான நீண்ட ஒடுங்கிய தெரு. வீடுகள் ஒன்றும் அருகில் இல்லை. காற்று வேகமாக அடிக்கிறது, ஆனால் கொளுத்தும் வெயில். பரீட்சை முடிந்து வீட்டுக்கு நடக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும், எட்டு வயதான எனக்கு இரண்டு மைல் நடப்பது அவ்வளவு கஷ்டமில்லை.

உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுகிறது. உடம்பிலிருந்து வரும் வேர்வை எனது வெள்ளைச் சேர்ட்டில் ஊறி ஊத்தையையும், நாற்றத்தையும் சேர்ட்டில் இருத்திவிட்டு, காற்றோடு கலந்து போகிறது. வெயிலும் காற்றும் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரியவில்லை.

தூரத்தில் ஒரு தனி மரம் வேகமாக நடக்கிறேன். அம்மா “குடை கொண்டுபோ” என்று காலையில் சொன்னது ஞாபகம் வருகிறது. பெண்கள் மாதிரி குடை பிடிக்க எனக்கு விருப்பமில்லை! எனக்கு ஒரு தொப்பி வாங்கித் தரலாமே?

தூரத்தில் பறைமேள ஒலி கேட்கிறது. யாரோ இறந்து விட்டார்! நான் என் வேகத்தைக் குறைத்து, மெதுவாக நடந்து அருகில் இருந்த உயரமான தனி மரத்தின் கீழ் அமர்கிறேன். நிழல் சுகமாக இருக்கிறது.

சவ ஊர்வலம் சுடுகாட்டை நெருங்குகிறது. ஊர்வலத்தில் பதினைந்து இருபது பேர். ஆண்கள் மட்டும்தான். பெண்களோ அல்லது வயது குறைந்தவர்களோ இல்லை.

”ரங்கா”! என்னை யாரோ ஊர்வலத்திலிருந்து அழைப்பது கேட்கிறது. "இங்கே என்ன செய்கிராய்? வீட்டுக்குப் போ!" பக்கத்து வீட்டுத் தாத்தா கத்துகிறார்.

தாத்தாவுக்கு என் மேல் அலாதி பிரியம்.அவர் சொல்வது எல்லாம் என் நன்மைக்குத்தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஏன் என்று புரியாது.

அவரிடம் கேட்டால் "உனக்குப் போகப் போகப் புரியும்" என்பார். அவருடைய அறிவும், எனக்குச் சொல்லித்தரும் தனது வாழ்க்கையின் அனுபவங்களும் அதன் தத்துவங்களும் , நான் கிளிப்பிள்ளை போல பாடப்புத்தகங்களில் படிப்பதை விட எவ்வளவோ மேல்.

உடனே என் நடையைத் தொடர்ந்தேன். இறந்தவர் தன கடைசிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

நாட்கள் பறந்தன. நான் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. முடித்து விட்டு மாஸ்டர்ஸ் செய்வதற்காக நியூயோர்க் போகத் தயாராகிறேன். எனது மாமா நியூயோர்கில் இருப்பதால் என்னை அங்கு வந்து தன்னோடு இருந்து படிக்கச் சொன்னார்.

எனக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை. ஆனால் இந்தச் சந்தர்பத்தைத் தவற விடாதே என்று அம்மா வற்புறுத்தியதால் போகத் தீர்மானித்தேன்.

தாத்தாவுக்கு நான் அமெரிக்கா போவது சந்தோசம். என்னை வாழ்த்தி அனுப்பி விட்டார். போகும் போது தன்னிடம் இருந்த புதுத் தொப்பி ஒன்றை "என் நினைவாக வைத்திரு" என்று தந்தார்.

அமெரிக்காவில் எம்.பீ .ஏ முடித்து விட்டேன். எனக்கு மத்திய கிழக்கில் உள்ள ஒரு பெரிய கம்பனியில் வேலை. நான் இந்த பிரெஞ்ச் கம்பனியில் பெரிய பதவியில் இருப்பதால், நல்ல சம்பளம், குடும்பத்தோடு இருக்க வசதி.

எனது உயர் அதிகாரி எனக்கு பதவி உயர்வு தந்த பொது "ரங்கா நீ இந்தியாவில் இருந்து வந்த காரணத்தினால் உனக்கு பிரெஞ்சு காரருக்குக் கொடுக்கும் சம்பளத்தை விடக் குறையத் தரமாட்டேன்” என்று கூறியது என்னைக் கவர்ந்தது.

அங்கு வேலைசெய்யும் பலருக்கு மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் விட்டு தனிமையில் இருக்கும் விரக்தி! எவ்வளவு வசதிகளும் சம்பளமும்இருந்தாலும் குடும்பத்துடன் இருப்பது போல் வருமா?

வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள் வேறு மொழிகள் பேசுபவரகள், பல சமயங்களைப் பின்பற்றுபவர்கள், வித்தியாசமான சாப்பாடுகள், இப்படிப் பல பல வேறுபாடுகள்.

தொழிலாளிகளைப் பேணும் கடமை என்னுடையது.

ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், அவர்கள் அனுப்பும் காசை நம்பி ஊரில் வாழும் குடும்பங்கள், தமது நாட்டை விட்டு இங்கு வந்து கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள், படித்தவர்கள், தமது நாடுகளில் பெரிய உத்தியோகங்கள் பார்த்துவிட்டு, காசுக்காகத் தமது தகுதிக்கும் குறைந்த வேலை செய்பவர்கள், அவர்கள் எல்லோரும் மனம் தளராமல் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்ய வைப்பது எனது கடமை.

அந்த ஊர் பணக்காரர்களுக்கு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. பிள்ளைகள் வீட்டில் இருந்தால் கெட்டு விடுவார்கள் என்று தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கு வேலை தேடுவது அவர்களுக்கு அவ்வளவு சிரமமில்லை.

இப்ராகிம். காலையில் தனது விலையுயர்ந்த காரில் வேலைக்கு வந்து விடுவான். ஆனால் இரண்டு மாதங்கள் சென்றும் ஒரு வேலையும் பழகவில்லை. சம்பளம் வெளிநாட்டிலிருந்து வந்தவனை விட மிக அதிகம். தான் நினைத்த நேரத்துக்கு வருவான், போவான். அவனுடைய தகப்பனுக்கு இருக்கும் காசு அவன் வாழ் நாட்களை சந்தோசமாகக் கழிக்கப் போதும் .

அவனை பலமுறை மேல் அதிகாரிகளுக்கு முறையிட்டும் அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவனை நானே வேறு பிரிவுக்கு மீண்டும் ஒரு முறை வேலை பழக இடமாற்றம் செய்தேன்.

அடுத்த நாள் எனக்குத் தொழில் அமைச்சின் அலுவகத்தில் இருந்து ஒரு தொலைபேசி. பேசியவர் அமைச்சின் காரியதரிசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.