(Reading time: 9 - 18 minutes)

காதலா? சமயமா? - வின்னி

love or religion

துபாய் போகும் எயர் லங்கா விமானம் புறப்படத் தயாராகிறது. சமீனா ஒரு  கையில் கைப்பையும் மறு கையில் கடவுச்சீட்டும், டிக்கெட்டுமாக விமான நிலையத்தில் நிற்கிறாள். அப்பா, அம்மா, பதினெட்டு வயது தங்கை, தம்பி  எல்லோரும் அவளை சூழ்ந்துகொண்டு கவலையாக நிற்கிறார்கள்.

கண்களை துடைத்துவிட்டு தனது கவலையை மற்வர்களுக்குக் காட்டாமல், அம்மாவின் கைகளைப் பிடித்தவண்ணம், சுவரில் இருக்கும் பெரிய கடிகாரத்தை அடிக்கடி நோட்டம் விடுகிறாள் சமீனா.

ஆகாயத்தில் பறந்து முதன்முதல் வெளிநாடு போகிறோம் என்ற பயம் ஒருபுறம், தனது குடும்பப் பொறுப்புக்களை நீக்குவதற்கு ஒரு வழி பிறந்திருகிறது என்ற சந்தோசம் மறுபக்கம்.

மனதில் ஒரு தடுமாற்றமான நிலை!

பொறுப்பில்லாத அண்ணன், அவளை வழியனுப்ப வரவில்லை!

தூரத்தில் யாரோ தெரிந்த முகம். அவள் கண்களில் ஆச்சரியம் பொங்கி வழிகிறது. ஒரு கையில் பூச்சரம் மறுகையில் அவளுக்குப பிடித்த அல்வாவுமாக அவளை நோக்கி வேகமாக வருகிறான் சுனில். அவள் சந்தோசத்தில் பூரித்துப் போனாள்.

அவள் கையில் பூச்சரத்தையும், அல்வாவையும் கொடுக்கிறான். அவர்கள் விரல்கள் ஒன்றோடு ஒன்று உரசுகின்றன. அவளை அணைக்க வேண்டும் போல ஒரு உணர்வு, ஆனால், உறவினர்களுக்கு எதிரில் அதை எப்படிச் செய்வது? கலாச்சாரத்துக்கு ஒத்துவராதே!    

சமீனா. தனது சேலையால் தலையை சிறிது மூடிக்கொண்டு, "சுனில் எப்படி இருக்கிறாய்?" என்று கேட்கிறாள்.  

சமீனா எவ்வளவு  அழகாக இருக்கிறாள்! இப்போதுதான் முதல் தடவை அவளைப் பார்ப்பது போல உன்னிப்பாக பார்க்கிறான். அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு முன் எப்படிச் சொல்வது?

இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தன. அவர்கள் கண்களில் ஏக்கம் தெரிகிறது. சுனில் அவளது அங்க அசைவுகளை ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டான்.

அவர்கள் வேறு உலகத்தில் இருந்தார்கள்! மனதில் பல விதமான கடந்தகால  நினைவுகள். அவர்கள் தனியே இருந்திருந்தால் இந்நேரம் ஒருவரை ஒருவர்  கட்டி அணைத்திருப்பார்கள்.

சுனில் அங்கிருந்த அவளது  உறவினர்களை "எப்படி சுகமாக இருக்கிறிர்களா?” என்று சிங்களத்தில் நலம் விசாரித்தான். அவர்கள் அவனை வரவேtற்றதாகத் தெரியவில்லை.

சுனில் வங்கி அதிகாரி. சமீனா அவன் கீழ் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர். அவன் சிங்கள பௌத்த மதத்தை சேர்ந்தவன்.  அவள் மலே, இஸ்லாம் மதத்தை  சேர்ந்தவள்.

பல வருடங்களாக ஒன்றாக வேலை செய்பவர்கள்.

இன்னும்  சில நிமிடங்களில்  அவள் அங்கிருந்து போய்விடுவாள். அவளைப் பிரிந்து இரண்டு வருடங்கள் வாழ  வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கு.

அவர்கள் எண்ணங்களில் ஆயிரம் ஆயிரம் கடந்த கால நினைவுகள்!

அங்கே சில நிமிடநேர மௌனம். ஒருவரும் பேசவில்லை!

சமீனா அவர்களது மௌனத்தை கலைப்பதுபோல், “அம்மா! சுனிலுடன்  கதை"  என்று மலே பாசையில் கூறினாள்.

அம்மா அவனை அலச்சியப்படுத்திவிட்டு, மகளை நோக்கி “துபாய் போனதும் டெலிபோன் செய்” என்று கூறினாள்.

சமீனா சிங்களம்,ஆங்கிலம், தமிழ்,  மலே, என்ற  நாலு பாசைகளும் நன்றாகப் பேசுவாள். வங்கி வாடிக்கையாளர்களிடம் பிரபலமானவள்.

நாட்டை விட்டு அவள் போவது சுனிலுக்கு விருப்பமே இல்லை. என்னைத் திருமணம் செய் என்று கேட்பதற்கும் அவனுக்குத் துணிவில்லை.  

சாதி, மதம், மொழி, பெற்றோர்களின் சம்மதம், பொருளாதாரம், கலாச்சாரம் இப்படி எத்தனையோ தடைகள்.

அவர்களுக்கிடையே இருந்த ஒரு ஒற்றுமை  நீண்ட கால உறவும், காதலும்தான். ஆனால் அவர்கள் காதலை மற்றவர்களிடம் வெளியிட அவர்களால் முடியவில்லை!

குடும்பக் கடனை அடைக்க வேண்டும். தகப்பனுக்கு கான்சர் அறுவை சிகிச்சை செய்ய பணம் வேண்டும். அவள் எடுக்கும் சம்பளமோ வீட்டுச்  செலவுக்குத் தான் போதும். அண்ணன் மணம் முடித்ததும் குடும்பத்தை கவனிப்பதில்லை. இந்த நிலையில்  அவள்  எடுத்த  முடிவுதான் துபாய் செல்வது.

சுனில் நல்லவன் அவள் சம்மதித்தால் உடனே அவளைத் திருமணம் செய்து விடுவான். ஆனால் அவனது பெற்றோரிடம் இருந்து அவனைப் பிரிக்க அவளுக்கு மனமில்லை.  

மீனா துபாய் வந்து ஒரு வருடமாகிவிட்டது. அவளை உயர் அதிகாரிக்கு பிடித்து விட்டது. அவளுக்குப் பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு, இருப்பதற்கு நல்ல வீடு. இன்னும் எத்தனையோ சலுகைகள். அதெல்லாம் அவள் உழைப்புக்குக் கிடைத்த   சன்மானம்!           

அவளது வீ ட்டுக் கடன்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருகின்றன, அப்பாவின் சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.

எப்ப வீட்டுக்கு வருகிறாய்? எப்ப கலியானம் செய்யப் போகிராய்? என்று அம்மா ஒரே நச்சரிப்பு. அவளுக்கு மகளின் வயது ஏறிக்கொண்டு போகிறதே என்ற  கவலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.