(Reading time: 9 - 18 minutes)

வள் சமையல அறையில் வேலை!. அவன் விருந்தினர் அறையில் இருந்தான்.

அங்கிருக்கும் மேசையில், அவளது கைப்பையின் அருகே பழக்கமான ஒரு பற்றுச்சீட்டு தெரிகிறது, அதை எடுத்துப் பார்க்கிறான்.

அவன் இரவு எழு மணிக்கு பத்தாம் இலக்க மேசைக்கு பரிமாறியதற்கான அதே பற்றுச்சீட்டு!.  

அவனுக்கு தலை சுற்ருகிறது! அங்கிருந்து அவளுக்குச் சொல்லாமல்  கதவைச்  சாத்தி விட்டு நகர்ந்தான்.

பதவி, காசு, சுகவாழ்க்கை இவற்றுக்காக அவள் என்னவும் செய்வாள் என்று அவன் கடைசிவரை நினைக்கவில்லை. அந்த சில நிமிடங்களில் பெண்களிடமே அவனுக்கு  வெறுப்பு வந்துவிட்டது!.

அவள் பால்கனியில் இருந்து கண்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்க்கிறாள்!. அவன் தூரத்தில் தடுமாறித் தடுமாறிப் போவது தெரிகிறது. அவளது வாழ்க்கையிலிருந்து அவன் மறைவது தெரிகிறது!

பெனெடிக்டும், அவளும், அவளுடைய அரேபிய அதிகாரியும் சேர்ந்து சுனிலுளுடைய  நன்மைக்காக நடாத்திய  நாடகம், என்பது அவனுக்குத் தெரியாது!.   

சுனிலை அவள் அதன்பின் சந்திக்கவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்பதே அவளுக்குத் தெரியாது.

ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. சமீனா இன்னும் திருமணம் செய்யவில்லை.    

அவள் விடுமுறையில் ஸ்ரீ லங்கா வந்திருந்தாள். தம்பியைக் கூட்டிக் கொண்டு கண்டி புறப்பட்டாள். வழியில் கார் பழுது. திருத்துவதற்கு சிறிது நேரம் செல்லும் என்று டிரைவர் சொன்னான்.

நேரத்தை போக்குவதற்கு, பக்கத்திலிருந்த பௌத்த விகாரையை நோக்கி நடந்தாள்.

விகாரைக்கு அருகில் சல சல என்று சத்தமிட்டவண்ணம் ஓடும் அழகான ஆறு, ஆற்றின் கரையில் பெரிய நீன்ற மரங்கள், அழகான மலைகள், பச்சைப் பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்களில் வளைந்து வளைந்து போகும் அழகான தெருக்கள். அந்த சூழல் அவள் நெஞ்சுக்கு இதமாக இருந்தது.

விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர், அந்தப் பெரிய புத்தர் சிலையின் கீழ்,  நீண்ட தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

வெள்ளைச் சேலை அணிந்த வயோதிபப் பெண்கள் சிலர் அவரை வணங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.   

அவளும் அவர் அருகில் சென்றாள். அங்கு அவள் கண்ட காட்சி  அவளை நிலைகுலைய வைத்தது பௌத்த பிக்குவாக தியானத்தில் அமர்ந்திருந்தது  வெறு யாருமல்ல அது சுனில்தான்.

கொண்டுவந்த தாமரைப் பூவை அவர்முன் வைத்து விட்டு அங்கிருந்து அமைதியாக காரை நோக்கிச் சென்றாள்.

டிரைவரிடம் அந்த பிக்குவைப்பற்றி கேட்டாள்.

அவர் காதலில் ஏமாற்றப்பட்டவர் என்று அவன் சொல்லித்தானா அவளுக்குத் தெரிய வேண்டுமா?  

காதலின் மகிமை தெரியாமல் அவனுக்கு நன்மை செய்வதாக நினைத்து  அவள் செய்த பெரும் தவறை அப்போதுதான் உணர்ந்தாள்!

காதலா? சமயமா? எது முக்கியம்? அதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் கடவுள்தான்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.