விட்டில் பூச்சி !!!!!!!!!!!!!!!! - கிருத்திகா

இது ஒரு அவளை பற்றிய கதை .. அவள் பெயர் அவசியம் இல்லை ஏன் எனில் அவளை போல் இன்னும் பலர் இருகிறார்கள் .. விட்டில் பூச்சிகளாய்...
அது ஓர் அழகிய கிராமம்... அவளும் ஒரு மிக அழகிய பெண் ... ஊரில் பெண்கள் எல்லோரும் அவளை ஹீரோயின் மாதிரி இருகிறாய் என்று சொல்லி சொல்லி அவள் கனவிலும் நினைவிலும் அதையே நம்ப தொடங்கி விட்டாள்
அதட்டிய தந்தையும் அண்ணனும் எதிரியாக மாரிபோயினர் அடைகாத்த தாயிடம் இருந்து தப்பி சென்னை என்னும் விளக்கை நோக்கி வந்தது அந்த விட்டில் பூச்சி ...
வாய்ப்பு தன்னை தேடிவரும் என இருந்தவள் வாய்ப்பை தேடி அலைந்தாள்
பல ராத்திரி வீட்டில் இருந்த நாட்களை எண்ணி மருகுவாள்
அண்ணனுடன் சண்டையிட்டு அம்மாவின் மடியில் அமர்ந்து உண்ட நிலாச்சோறு நியாபகம் வந்தது அன்று சண்டையின் போது இதுஎல்லாம் ஒரு சோறா என்று தட்டிவிட்டது இப்போது அமுத விருந்தாக இனித்தது
ஆனால் அந்தோ பரிதாபம் வாய்ப்புக்காக இவளே விருந்தானால் பலபேருக்கு
இவளின் உடல் மன வேதனயும் தாண்டி சினிமா கனவு இவளை இங்கே பசைபோல் ஒடிஎருக்க செய்தது
நாட்கள் வருடமாகின இவள் கனவும் மாறியது அம்மா... அப்பா என மனம் ஏங்கியது ...
இதோ முடிவெடுத்துவிட்டாள் போனால் வீட்டில் ஏற்றுகொள்வார்கள் என்றும் நம்பினாள் ...
ஒருமுறை பையை சரிபார்த்துவிட்டு வீட்டை பூட்டும் பொது வந்தான் அந்த அச்சிச்டன்ட் டைரக்டர் ..
ஒரு பெரிய டைரக்டர் படத்தில் ஏதோ தங்கை வேடம் கிடைத்துள்ளதாகவும் இவள் கண்டீப்பாக வரவேண்டும் என்றும் சொன்னான் .....
இவளோ பையை பார்த்தாள் அவனை பார்த்தாள் சரி காத்திருதது இருந்தோம் பொய் பார்த்து விட்டு இல்லையென்றால் ஊருக்கு போகலாம் என நினைத்தாள் ..
விதி அவளை பார்த்து சிரித்தது ...
அவளின் கனவை சிதைக்கும் எமன் லாரி ரூபத்தில் வந்தான் ... வானத்தில் பறந்து கிழே விழும்போது அடிமனதில் ஒரு நிம்மதி அம்மா என் அவலநிலை கண்டு அழமட்டால் என் பிரிவு தந்த துன்பம் மட்டும் தான் அவளுக்கு இருக்கும் என்று
நடந்ததும் அதுதான் ...
இவள் சவ ஊர்வலம் சென்றது கதறிய அவள் தாயை பார்த்து வருத்தப்பட்டது .....
கனவுகளுடன் வீட்டைவிட்டு வந்த அடுத்த விட்டில் பூச்சி
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.