(Reading time: 6 - 11 minutes)

ரத்து ஐயாவின் நன்றிக்கடன் - வின்னி

nandri kadan

ஸ்ரீ  லங்காவின்  தெற்குக்  கரையோரம். நான் தங்கி இருப்பது ஒரு உல்லாச  ஹோட்டல். முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு அங்கு வந்திருக்கிறேன். அங்கு ஐந்து வருடம் வேலை செய்துவிட்டு துபாயில் வேலை எடுத்து சென்று விட்டேன். 

மனைவி  விமானத்தில் வந்த களைப்பில் அறையில் தூக்கத்தில் இருக்கிறாள்.  பிள்ளைகள் நீந்தப் போய் விட்டார்கள்.

அந்த கடற்கரையில் இருந்த நீண்ட கதிரையில் ஒரு போத்தல் பியரை கையில்வைத்துக்கொண்டு சாய்ந்து படுத்திருக்கிறேன்.

என் நினைவெல்லாம் ஐந்து வருடங்கள் நான் அந்த ஊரில் இருந்தபோது நடந்தவைதான்.

இதமான கடல் காற்று. கடல அலைகளின் இனிமையான ஓசை. மைல் கணக்காக நீண்டிருக்கும் அழகான கடற்கரை, அதன் அருகில் கண்ணுக்குத் தெரியும் வரை காற்றினால் தள்ளப்பட்டு அறுபது பாகையில் சரிந்திருக்கும் உயரமான தென்னை மரங்கள்.

கடற்கரையில் தங்கியிருக்கும் இரண்டு கட்டுமரங்கள், வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் சோடி சோடியாக கடலில் நீந்துவதும், கரையில் வந்து படுப்பதும்,  இளநீர், அன்னாசி விற்கும் பையன்கள் அவர்களை நோக்கி படை எடுப்பதையும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்குத் தூக்கம் வந்தது தெரியவில்லை.

" மகாத்தயா"  யாரோ கூப்பிடுவது போல் தோன்றியது எனது அரைத்  தூக்கத்தில் கண்ணைத் திறக்கிறேன். “சார் என்னைத் தெரியவில்லையா”? நான் தான் "ரத்து ஐயா". அந்த பெயரைக்கேட்டதும் துள்ளி எழுந்தேன். அந்த வயோதிபரை கட்டி தழுவினேன். அவர் கைகளைக் கட்டியபடி என்னை உன்னிப்பாகப் பார்த்தபடி நின்றார்.

"எப்படி இருக்கிறாய் "ரத்து ஐயா"? என்று எனக்குத் தெரிந்த கொஞ்ச சிங்களத்தில் கேட்டேன்.      

“எதோ "உங்களுடைய ஆசீர்வாதத்தால நல்லாக இருக்கிறேன் சார்" என்றான்.

 "ரத்து ஐயா" அவனுடைய உண்மையான பெயரல்ல அவனுடைய உண்மையான பெயர் பந்துல. சிங்களத்தில் "ரத்து  " என்பது சிவப்பு.  “ஐயா” என்பது அண்ணன். அவன் ஒரு கொலை செய்து விட்டு பத்து வருஷம் மறியலுக்குப் போய் வந்தவன். என்பதால் அவனை எல்லோரும் "இரத்த அண்ணா" என்று பொருள்பட"ரத்து ஐயா"என்று கூப்பிடுவார்கள்.

அவனிடம் எல்லோருக்கும் பயம் அவனை அணுகவே தயங்குவார்கள். அவன் சிறையிலிருந்து வந்ததும், அவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் அவனுக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை.. அவன் சிறையில் தச்சு வேலை பழகியபடியால் அவனுக்கு, மற்றவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், வேலை கொடுத்தேன். அவன் அந்த நன்றியை ஒரு போதும் மறக்கவில்லை.  

அவன்  சிறையில்  இருக்குபோது அவனுடைய காதலி வேறு ஒருவனை மணமுடித்து அக்கிராமத்தை விட்டுப் போய்விட்டாள்.

முப்பத்தெட்டு வருட செய்திகளை முப்பத்தெட்டு நிமிடங்களில் சொல்லி முடித்து விட்டான். என்னைச் சந்தித்ததில் அவனுக்கு ஆனந்தம்.

ஆகஸ்ட் 12, 1977 என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள்! சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக சிங்களக்  குண்டர்கள், முன்னூறு தமிழரைக் கொன்ற இனக்கலவரம்.

தமிழருக்கு இனக்கலவரங்கள் புதிதல்ல. ஆனால் எனக்கு அதுதான் முதல் அனுபவம். நான் இருப்பதோ தமிழர் இல்லாத ஓர் கிராமத்தில், படிப்பறிவு குறைந்த மக்கள் வாழும் இடம்.

எனக்குத் தெரிந்ததோ அவ்வூர் மக்களோடு பழகி அவர்களிடம் பயின்ற, சிறிதளவு சிங்களம்.

இரவு ஒன்பது மணி நான் இலங்கை வானொலியில் கலவரங்கள் தொடர்பான செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கதவை யாரோ வேகமாகத் தட்டுவது கேட்கிறது. ஜன்னலைத் திறந்து பார்க்கிறேன்.

பக்கத்து வீட்டு அம்மா. "இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கோ காடையர்கள் உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கத்துகிறாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!

அடுத்த பாதுகாப்பான இடம் கொழும்பு. இருபது மைல்களுக்கு அங்கு காரில் செல்வது பயங்கரம்.

வழியில் வாகனங்களை மறித்து, தமிழர்களைத் தேடி பஸ்களிலும், கார்களிலும் இருந்து இறக்கி, அடிப்பதும், வாளால் குத்துவதுமாக இருக்கிறார்கள் என்று  சற்று முன்னர்தான் வானொலியில் கேட்டேன். 

ரத்து ஐயாவை அழைத்துவா என்று அவளிடம் கூறிவிட்டு, கதவுகள்  எல்லாவற்றையும்  இறுக்கிப்  பூட்டிவிட்டு, கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தேன்.

மீண்டும் கதவில் பலமான தட்டல்! பயத்தில் கதவைத் திறக்கவில்லை.   

கதவை உடைத்துக்கொண்டு ஐந்து பேர் உள்ளே நுழைகிறார்கள். நான் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வருகிறேன். அவர்களில் ஒருவன்  என் வீட்டில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக அடித்து  உடைக்கிறான். இன்னொருவன் என் கைக்கடிகாரம்,ரேடியோ, மோதிரம்  மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கையில் அள்ளிக்கொள்கிறான். இன்னொருவன் நீண்ட வாளுடன் என்னை நோக்கி வருகிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.