(Reading time: 6 - 11 minutes)

நான்  கைகளால் அவனைத் தடுக்க முற்பட்ட  போது  திடீரென ரத்து ஐயா  நுழைகிறான். அந்தக் குண்டனின் முதுகில் பலமாகக் குத்துகிறான். ரத்து  ஐயாவின் பக்கம் வாள் திரும்பி அவன் தலையை வெட்டுகிறது. தலையில் பெரிய காயம் . எல்லா இடமும் இரத்தம்.

காடையர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.

அயலவரும், அந்த அம்மாவும் ரத்து ஐயாவை தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.  

எனக்கு என்ன நடக்குமோ என்ற  பயத்தாலும், ரத்து ஐயாவுக்கு ஏற்பட்ட காயத்தாலும் நான் நிலை தடுமாறிப் போ ய் விட்டேன்!  ரத்து ஐயா உயிருடன் இருப்பானோ என்ற பயம்.

ஒரு சிங்களவனாக இருந்தும் என் உயிரைக் காக்க, அவன் செய்த  தியாகத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. எப்படியோ அங்கிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்தேன்.            

"சார் உங்களுக்கு இன்னுமொரு பியர் கொண்டு வரவா" என்ற கேட்டான்”.

“உனக்கும் ஒன்று கொண்டு வா” என்றேன்.

“ஐயோ சார் நான் இப்பொது அதெல்லாம் குடிப்பதில்லை. எனக்கு இப்ப கான்சர்

வைத்தியம் செய்ய  என்னிடம் காசில்லை”.

அவன் தலையில் இருக்கும் பெரிய வடுவை நோக்கிறேன். என்னால் அவனுக்கு ஏற்பட்ட காயம். அவனுக்கு நன்றி கூடச் சொல்லவில்லையே என்ற வருத்தம்.

அவன் கொலை செய்தது அவனுடைய காதலியோடு கள்ளத் தொடர்புடைய அவனுடைய நண்பனை. அந்தக் கொலைக்கான காரணம் ஒருவருக்கும் தெரியாது. அவன் தன காதலியின் நடத்தையை என்னைத் தவிர ஒருவருக்கும் சொல்ல விரும்பவில்லை. அவள் மீது அவனுக்கு அளவுகடந்த அன்பு   

எனக்கு இன்னும் ஒரு வேலைதான் பாக்கி, என் செல் போனை எடுக்கிறேன். கொழும்பிலிருக்கும் என் டாக்டர் நண்பரைக் கூப்பிடுகிறேன். அவர் ஒரு கான்சர் ஸ்பெசலிஸ்ட். அவரிடம் ரத்து ஐயாவுக்கு சிகிச்சை செய்ய ஒழுங்கு செய்கிறேன் எல்லாச் செலவையும் நானே ஏற்கிறேன். அதை விட வேற என்னதான் நன்றிக் கடன் என்னால் செய்யமுடியும்?  

ரத்து  ஐயாவிடம் டாக்டரை போய் சந்திக்க சொல்கிறேன். அவன் “மிக்க நன்றி ஐயா என்று சொல்லிக்கொண்டே என் காலில் விழுந்தான்”.

அவன் எழுந்திருக்கவேயில்லை! 

ஒரு நல்லவனின் உயிர் பிரிந்து விட்டது!. அவனுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.