(Reading time: 15 - 29 minutes)

காதலே கரம் சேர வா - ஆதித்யா சரண்

திகாலை சூரிய உதயத்தின் எழுச்சி அவனது மனதை ஈர்க்கவில்லை.

இரவெல்லாம் உறக்கமும் இல்லாமல்,விழிகள் மூடவும் முடியாமல் துடித்துப் போனான் அவன்.அவன்...அசோக்!!

இன்று மதியம் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும்!!நினைக்கும் போதே அடிவயிற்றில் பகீரென்ற ஓர் உணர்வு!!புரண்டு படுத்தான்.

மனதில் எழுந்த அச்சம் சற்றும் குறையவில்லை..

எப்படி சமாளிக்கப் போகிறேன்!நிச்சயம் அவளை பார்க்க நேரிடும்!!என்ன செய்வது??என்று சிந்தித்தான் ஒரு நேரம்.அவள் எப்படி இருப்பாள்??என்னை நினைவு வைத்திருப்பாளா??இந்நேரம் திருமணம் செய்திருப்பாள் அல்லவா??என்ற சிந்தனை சிலநேரம்!!இந்தியா திரும்பாமல் தப்பிப்பதற்கும் வழி இல்லை.

பல சிந்தனைகள் மனதை கலங்கடித்தன.

அவன் சிந்திக்கட்டும்...

அதற்குள் அவனை குறித்து கூறுகிறேன்!!

அவன் பெயர் அசோக்!தஞ்சையின் அருகே ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் தான்!!வீட்டிற்கு ஒரே மகன்!!

அவன் பிறந்த உடன்,அவனது தாய் காலமாகிப் போனார்.தந்தையின் கடின உழைப்பின் வேர்வையில் துளிர்விட்ட செடி தான் இவன்.சிறு வயது முதல் சந்தித்த வறுமையே இவனது திறமை விஸ்வரூபம் எடுக்க காரணமாகியது!!

ஆறு வருடங்களுக்கு முன்பு,பிரபல தனியார் அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தான்.எதிலும் நேர்மை!கொடுக்கும் பணியை சீராக செய்து முடிப்பதில் தனித்துவம் மிக்கவன்.

எதிலும்,தனித்துவம் வாய்ந்தவன்.அவனது திறமையை அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.இன்று அமெரிக்காவில் ஒரு முக்கிய திறமையான கணிப்பொறியாளர்களுள் இவனும் ஒருவன்!தன்னை வளர்த்துவிட்ட தந்தையை தலைநிமிர வைத்து,சமூகம் போற்றும் அளவு கொண்டு வந்துவிட்டான்.எனினும் அவனது மனதின் கவலை ஒன்று அவனை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது!!என்ன அது??கூறுகிறேன்..!

மணி எட்டானது என்பதை அடித்த அலாரம் கூறியது!!இதற்கு மேலும் இது சரிவராது என்று எண்ணியவன்,எழுந்தான்!தலையை உலுக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்று தனது கடமைகளை முடித்துக் கொண்டு வந்தான்.

"லூசி!"-இன்டர்காமில் அழைத்தான்.

"யா அசோக்!"-என்று உள்ளே வந்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.

"இந்தியா கிளம்புறேன்!வரும்போது அப்பாவையும் இங்கேயே கூட்டிட்டு வந்துடுவேன்!"-அமெரிக்காவில் அவனது வீட்டின் அனைத்து பொறுப்பும் லூசியின் தலையில் தான்!!இந்த ஆறு வருட இடைவெளியில் அவருக்கு நன்றாக தமிழும் கற்றுக் கொடுத்துவிட்டான் அவன்.

"ஓ.கே!"

"அப்போவோட சிட்டிசன்ஷிப் விஷயமா சாம் வருவான்!அவனை எனக்கு போன் பண்ண சொல்லுங்க!"

"ஓ.கே.அசோக்!உனக்கு எப்போ ப்லைட்?"

"1 மணிக்கு!"

"ஓ.கே.டேக் கேர் டியர்!"-அசோக் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு,தனது உடைமைகளை ஒரு பெட்டியில் அடைக்க ஆரம்பித்தான்.

இந்தியா....

சோழவந்தான்புரம்..

தனது வயலில் ஆட்கள் வேலை செய்வதை பார்த்தப்படி அமர்ந்தார் செந்தில்நாதன்.

ஒரு காலத்தில் இதே கூலி வேலைக்காக பகலிரவு பாராமல் உழைத்தது எல்லாம் நினைவு வந்தது!!இன்று அனைத்தையும் தனது மகன் மாற்றிவிட்டான் என்னும் உண்மை அவரை கர்வம் கொள்ள வைத்தது!!

"ஏம்மா..!வனரோஜா!இப்படி வா!"-அவர் அழைத்ததும் ஓடி வந்தார் அந்த பெண்.

"என்னங்க ஐயா?"

"உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன!வேலைக்கு வந்திருக்க?"

"காய்ச்சல் பரவாயில்லை ஐயா!"

"உடம்பு சரியாச்சா இல்லையா?"

"இல்லைங்க.."

"போத்தா..!வீட்டுக்கு கிளம்பு!புள்ளையை கவனித்தா!போ!"

"பரவாயில்லையா..!வீட்டில அத்தை இருக்காங்க!"

"அட வயசான கிழவி என்ன குழந்தையை பார்த்துக்கும்?போ!"-என்று தன் கையிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாளை அவளிடம் திணித்து அனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து...

"செந்தில் ஐயா!!"-என்று கூவியப்படி ஓடி வந்தான் மாணிக்கம்.அவரது இல்லத்தில் பணிபுரியும் ஓட்டுநர்.

"ஐயா!'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.