(Reading time: 1 - 2 minutes)

க்ளோன் - கிருஷ்ண பாபு

Clone

ப்ரொபசர் தான் ரகசியமாக வடிவமைத்த தனது க்ளோனை அழைத்தார்.

'உன் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சிறிய டெஸ்ட்… தயாரா?'

'சொல்லுங்கள். முயற்சிக்கிறேன்.'கையை கட்டி பணிவாய் சொன்னான்.

'ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் எத்தனை?'

'in decimal 2…

in binary 10…

in geneticsல் ஒன்றோடு எத்தனை ஒன்றை சேர்ந்தாலும் mutation இல்லாதவரை விடை 1தான்.'

'Ooops! நான் கூறிய அதே விடைகள்.' தட்டிக் கொடுத்தார்.

நன்றி சொல்லி அவரைத் தழுவியபடி பதிலைத் தொடர்ந்தான்..

'in survival ethics ஒன்றோடு மற்றொன்று சேர்வது அதை வீழ்த்துவதற்காக கூட இருக்கலாம்!'

மெல்ல அவரை இறுக்க்க்க்கக்க ஆரம்பித்தான்.

ப்ரொபசரின் நெஞ்செலும்புகள் உடையத் தொடங்கின..

'Ooops!நான் செய்த அதே துரோகம்!'

முணுமுணுத்து அடங்கினார்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.