அம்மா பிள்ளை - கிருத்திகா

எனக்கு என் கணவர் மீது மிகுந்த கோபம் பின்ன எப்போ பாத்தாலும் அம்மா பிள்ளையாகவே இருந்தா யாருக்குதாங்க வராது ????
அவங்க அம்மா சொன்னபேச்சை தட்டவே மாட்டார் ... இதனால எங்களுக்குள்ள நிறையசண்டை வரும் நான் எவ்ளோ திட்டினாலும் சிரிச்சிகிட்டே அம்மா சொன்னா சரியாய் இருக்கும்னு சொல்லிடுவார் ...
ஒரு முறை என் மாமியார் ஊரில் இருந்து வந்திருந்தாங்க அப்போ இது பத்தி பேசிட்டு இருக்கும் போது என் மாமியார் " அம்மாடி இவன் இப்போதான் என் பேச்சை கேக்கறான் முன்னாடியெல்லாம் நான் எதை சொன்னாலும் கொபிதுக்கொள்ளுவான் "
எனக்கு ஒண்ணுமே புரியலங்க சரி இந்த மனுஷன் வந்த உடனே கேக்கலாம்னு விட்டுட்டேன் ...அவர கேக்கும்போது நடந்தத சொன்னார் ..
சே ...வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.அம்மா எப்போ பார் ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.’
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திலும் என்னை நச்சரித்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று எனக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வெளியூர் போய்விட வேண்டும். அம்மாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டேன் .
நேர்காணலுக்கு கிளம்பினேன் . “கேட்கிற கேள்விக்கு தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தாள் அம்மா.
அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் கதிரவன் .
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடும்படி இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்.
மெதுவாக மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அம்மாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் அனிச்சை செயலாக படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த குமாருக்கு ஒரே திகைப்பு. “நமக்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது குமரனுக்குத் தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி, “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் கதிரவன் .
”என்ன கதிரவன் யோசிக்கிறீர்கள்? நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
அம்மாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அம்மாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது.
அன்று முதல் நான் அம்மா பேச்சை தட்டுவதில்லை என்றார் ... நானும் அமர்ந்து யோசிச்சேன் எங்க அம்மா எப்போவும் சொல்லும் பல விஷயங்களை உடனே எதிர்த்தாலும் நிறைய முறை அது சரியாக இருந்தது நினைவு வந்தது ...
அம்மாவின் மீதும் மாமியார் மீதும் தனி மரியாதை வந்தது ..
பெரியவர்கள் அனுபவசாலிகள் அவர்களுக்கு படிப்பறிவு இல்லை எனினும் அனுபவ அறிவு மிகவும் அதிகம் ...அதை பயன்படுத்திக்கொள்வது நமக்கு நன்று ...
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.