(Reading time: 3 - 5 minutes)

இது ஒரு வாட்சப் கதை - கிருஷ்ண பாபு

Whatsapp

ங்கே செம குளிரு! அங்கே எப்பிடி?'

'ஒரேவெக்கை. ஃப்ரிட்ஜை திறந்து வச்சுகிட்டுதான் சமையலே பண்றேன்!'

'ஆமா,இப்பலாம் ரொம்ப நேரம் வாட்ஸப்ல இருக்கறாப்ல தெரியுதே!'

'ஹேய்!எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கபா! நாலஞ்சு குரூப்ல இருக்கேன். பொழுது போகணும்ல? நீங்க?'

'எனக்கு தடித்தடியா நாலஞ்சு பயலுகதான் ஃப்ரெண்ட்ஸ்! ரத்தத்துலயே நாலு குரூப்தான். ஆனா இவனுக வார்த்தைக்கு ஒரு குரூப் ஆரம்பிச்சு என்னையும் கோர்த்து விட்டுருவானுக!'

'ம்ம்!அப்புறம்?'

'சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. போனவாரம் 'Men hate of wearing underwear'னு ஆரம்பிச்சு என்னை உள்ள நுழைச்சிட்டானுக!'

'அச்சச்சோ! பிறகு?'

' அடேய் நான் அப்படிலாம் இல்லடா! நல்ல பையன்னு புரூஃப்க்கு போட்டோ வேற எடுத்து அனுப்பி தப்பிச்சு வர்றதுக்குள்ள டவுசர் கழண்டுருச்சு!'

'haha!'

'ஆமா உங்களுக்கு இந்த இம்சைகள்லாம் உண்டா?'

'நானே ஒரு terror creatorதான். கவிதை குரூப், காரக்குழம்பு குரூப், கோல குரூப், கொசு பேட் குரூப்னு ஆரம்பிச்சு ஒவ்வொருத்தி தலைல கட்டிருவேன். காச்மூச்னு கத்துவாளுக! மஜாவா இருக்கும்!'

'பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'

'என்னிக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு பெண் தைரியமா பேஸ்புக்,ட்விட்டர், வாட்ஸப்ல நடமாட முடியுதோ அன்னிக்குதான் உண்மையான பெண் சுதந்திரம் கெடைச்ச நாள்!'

'ஆஹா! நீங்க ஒரு வாழும் காந்திங்க!'

'நீங்க ரொம்ப பேசுறீங்க! பேசாம கோட்சே குரூப்னு ஆரம்பிச்சு உங்களை அட்மினா போட்டுற வேண்டியதுதான்!'

'ஐயையோ! நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்ங்க! ப்ளீஸ்!'

'ஓகே.பொழச்சுப் போங்க. சரி,நீங்க சாப்பிட்டீங்களா?'

'இல்ல,என் ஒய்ப் தண்டனைய ரெடி பண்ணிட்டு இருக்குறா! நீங்க?'

'நான் இவருக்காக தோசை ஊத்திக்கிட்டு இருக்கேன்!'

'பெண் சுதந்திரம்,சம உரிமைனு பேசிட்டு இப்ப தோசை சுடுறீங்களே! காந்தி பூந்தி சாப்பிட போய்ட்டாரா?'

'ஹலோ!என் hubby தங்கமான மனுஷர்ங்க! எனக்காக சட்னி எல்லாம் அரைச்சு உதவி செய்யப் போறார் தெரியுமா?'

'அட!இப்படி ஐஸ் வச்சா நான் மயங்கிருவேனாக்கும்? எனக்கு தோசையே வேணாம்! தோசை சுடுற பொண்ணு மட்டும் போதும் என் டார்லிங்கு டம்பக்கே!'

ஏ.சி.பெட்ரூமில் இருந்து அடுக்களை நுழைந்து பின்புறமாக இறுக்கி அணைத்துக்கொண்டே கூறினான் இவ்வளவு நேரம் அவளோடு வாட்ஸப்பிய அவள் hubby!

'சும்மா டைம்பாசுக்கு விளையாடினா என் டிபன் தண்டனையா?கரண்டி வச்சு மண்டைலயே தட்டிருவேன் படவா! இன்னிக்கு எலலா விஷயத்துலயும் பட்டினிதான் உனக்கு!'

அரட்டிவிட்டு செல்லச் சிணுங்கலுடன் விடுவித்துக் கொண்டு  ஓடினாள் பெட்ரூமுக்கு!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.