(Reading time: 8 - 16 minutes)

வாழ்க்கை வாழ்வதற்கே - வின்னி

Life

நான் அந்த அமெரிக்க கம்பனியின் வன்கூவர் கிளையின் பிராந்திய மேலாளர். கிரிஸ்டீன் எனது காரியதரிசி. அவள்என்னிடம் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள்.  வேலையில் கடின உழைப்பாளி. நான் கொடுக்கும் பணிகளை எனது எதிர் பார்ப்புகளை விட மேலாகச் செய்து விடுவாள்.   

கனடாவில் பிறந்த, இருபத்து ஐந்து வயதான, அவள் மிகவும் அழகானவள். அவள் தோளை வருடிய வண்ணம்  இருக்கும் கட்டையாக வெட்டிய பொன்னிற தலைமுடி, கருத்த மை பூசிய அழகான அவள் புருவங்கள், அதன் பின்னே மறைந்திருக்கும் அழகிய கண்கள், கனிவாகப் பார்க்கும் பார்வை, பட்டுப்போன்ற அழகான கைகள், வெள்ளையான சருமம்.

என் நண்பர்கள் அவளைப் போல் ஒரு காரியதரிசி கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம் என்பார்கள். அவள் அழகைப் பார்த்து, “பெண்களைத் தெரிவு செய்வதில் இருக்கும் உனது ரசனை எங்கள் ஒருவருக்கும் இல்லையே” என்று ஏங்குவார்கள்.

நீங்கள் நினைப்பது சரி!!

என் காரியதரிசி பற்றி, அதுவும் ஒரு பெண்ணைப் பற்றி, இப்படி வர்ணிப்பது அநாகரீகம்! ஆனால் ஒரு பெண்ணின் அழகை வர்ணிப்பதில் என்ன தவறு?   

ஒரு பெண்ணை மணந்தால் அவளைப்போல் ஒருவளை மணமுடிக்க வேண்டும் என்று என் நண்பன் ராஜுக்கு நான் சொல்வதுண்டு.

அவள் பல தொண்டு நிலையங்களில் தொண்டாற்றுபவள். கடவுள் பக்தியுள்ளவள். இரத்த தானம் செய்பவள். எனக்குத் தெரிந்தவரை அவளிடம் ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.

“அழகான அவளுக்கு ஏன் இன்னும் ஒரு காதலன் இல்லை?” என்று ராஜ் கேட்பான். எனக்கும் அவளிடம் கேட்க வேணும் போலத் தோன்றும். ஆனால் அவளது சொந்த விடயத்தில் தலையிட எனக்கு விருப்பமில்லை.  

அன்று நான் வேலைக்கு வர சிறிது தாமதமாகி விட்டது. எனது காரியாலயத்தில் நுழைந்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!  

கிறிஸ்டீன், பிரதம கணக்காளர் ராபர்டிடம், ஆத்திரமாகக் கத்திக்கொண்டு இருக்கிறாள். அவள் இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை!. அவள் கையில் மேசையில் இருந்த விளக்கு, ராபர்ட்டை நோக்கி அடிப்பது போல் குறி வைத்தபடி இருந்தது. அதை நான் அவளிடம் இருந்து பறித்தெடுத்தேன்.

ராபர்ட் என்னைக் கண்டதும் அதிர்ச்சியில் நின்றார்!   

அவரை அவரது அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு கிறிஸ்டீனை எனது அறைக்கு அழைத்துச் செல்கிறேன். கதவை சாத்தி விட்டு, கோபத்தில் இருக்கும் அவளை என்னெதிரில் அமரச் சொல்கிறேன். ஆறுதல் கூறுகிறேன். டிசுவைக் கொடுத்து கண்ணீரை துடைக்கச் சொல்கிறேன். “என்ன நடந்தது” என்று கேட்கிறேன்.

“ராபர்ட் இறுகக் கட்டிப் பிடித்து, என்னை விரும்புவதாகக் கூறினார். எனது உதடுகளில் முத்தமிட்டார். அதுதான் நான் கோபப்பட்டேன், அவரை அடிக்க மேசை விளக்கை எடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.  

ராபர்ட் அந்த கம்பெனியில் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், எனக்கு நம்பிக்கையானவர், மணமாகி மனைவியை இழந்தவர். அவர் ஏன் இப்படிக் கேவலமாக நடந்தார்? எனக்கு குழப்பமாக இருந்தது!

கிரிஸ்டீன் கூறுவது உண்மை என நிரூபிக்க பட்டால், ராபர்ட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேணும். அது அவர்கள் மேலதிகாரியான எனது கடமை! எனக்கு என்ன செய்வது என்று புரியாமல், சியாடலில் இருக்கும் தலைமை காரியாலயத்தின் மனித வள மேலாண்மை அதிகாரியை தொலைபேசியில் அழைத்து, விஷயத்தை விளக்குகிறேன்.

கிரிஸ்டீன் ராபர்ட்டுக்கு எதிராக புகார் செய்தால், அங்கு நடந்தவற்றை இருவரிடமும் தனித்தனியே விசாரித்து, விவரங்களை அவர்கள் கைப்பட எழுதி தனக்கு அனுப்பும்படி கூறினாள்.

கிரிஸ்டீன் விசாரணைக்கு சம்மதித்தால்தான் தொடர்ந்து விசாரணை செய்ய முடியும்.

அங்கு நடந்தவை இரகசியமாக இருப்பது அவசியம் என்றாள். அவளுக்கு  கம்பனியின் பெயர் கெட்டுவிடுமே என்ற கவலை.

கிரிஸ்டீனிடம் மட்டுமே விசாரித்தது எனக்கு ஞாபகம் வந்தது. அந்த நிகழ்வைப் பற்றி விவரம் ஒன்றும் ராபர்டிடம் இருந்து கேட்கவில்லை என்ற எனது தவறு புரிந்தது.  

இருவருக்கும் அதிகாரியான நான் ஒரு பக்க சார்புள்ளவனாக மாறி விட்டேனோ?

அது அவளிடம் நான் வைத்திருந்த அளவுக்கு அதிகமான நம்பிக்கையா அல்லது அவள் ஒரு பெண் என்பதாலா? அவள் அழுவதாலா அல்லது அவள் அழகானவள், எனது காரியதரிசி, என்பதாலா?

ராபர்ட்டின் காரியாலயத்துக்குப் போகிறேன். அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கிறேன். தனது மனைவியின் பிரிவு தன்னை வாட்டி வதைப்பதை என்னிடம் கூறினார். கிரிஸ்டீனை ஒவ்வொரு நாளும் பார்க்கும் போது தனது மனைவியின் ஞாபகம் வருவதையும், மனைவியுடன் வாழ்ந்த அந்த இரண்டு வருட நினைவுகளும் தன்னை அப்படிச் செய்ய வைத்து விட்டது என்று என்னிடம் கூறினார். “கிரிஸ் டீனிடம் இருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

அவரது மனைவி கற்பமாக இருந்த பொது  ஒரு வாகன விபத்தில் இறந்தது எனக்கு ஏற்கனவே தேரியும். அவரை நம்ப முடியுமா? அவர் கூறுவது எனது அனுதாபத்தை பெறுவதற்காகவா?

நான் இன்னும் மணமுடிக்காதவன். எனக்கு எங்கே புரியும், மணம் முடித்து மனைவியை இழந்தவனின் மனோநிலை! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.