(Reading time: 1 - 2 minutes)

பேய் - கிருஷ்ண பாபு

Lorry

"பேய்,பிசாசு எல்லாம் ஹம்பக்"

'உன்னை பயமுறுத்துனா என்னடா தருவே?'

'அஞ்சு பவுன் செயின் பெட்'

'ஓகே'

ஒரு வாரம் ஆனது.

செயினைக் காணோம்.

வீடு பூரா தேடினான்.

கடைசியில் அதைப் பார்த்ததும் திகிலானான்.

நண்பனின் போட்டோவில் தொங்கியது.

'ஆன்ட்டி!எப்ப பார்த்தீங்க அவனை கடைசியா?'

'ஒரு வாரமாச்சுப்பா! ஒருநாளும் இப்டி பண்ணதில்ல,போலீஸ்ல சொல்லிருக்கோம்!'

'செத்தாடா என்னை பயமுறுத்துவ?லூசுப்பயலே!'

புலம்பினான்.

பின்னாலிருந்து வந்தது குரல்.

'ப்ப்ப்ப்பூ!பயந்துட்டியா? எல்லாம் டிராமா!அஞ்சு பவுன்னா சும்மாவா?! கொடு,நேரமாச்சு!'

விசிலடித்து வாங்கியபடி ரோட்டைக் கடக்கையில் திடுமென ஒரு லாரி………

கிறீச்ச்ச்ச்.

ம்ஹூம். ஏறிஇறங்கியது.

போஸ்ட்மார்ட்டம் ரூம்.

'சார்,செயினை உள்ளங்கைல எப்டி இறுக்கிப் பிடிச்சிருக்கான் பாருங்களேன்!'

‪பின்ன? உயிரைக் கொடுத்து சம்பாதிச்சதுல்ல?!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.