துன்பங்கள் எல்லாம் துன்பங்கள் இல்லை
இன்பங்கள் எல்லாம் இன்பங்கள் இல்லை
நிகழ்வுகளின் மீதான நம் எண்ணங்களின்
முரணான கருத்துகளே கலவரமென,
பலவித பரிணாம கோட்பாடுகளாய்
நம்மிடையேயான உரையாடல்கள்
இருட்டிலும் விடிவெள்ளியாய் இன்றும்...
நீயும் நானும் இரு வெவ்வேறு
பிம்பமாகி போனாலும்
மன ஈர்ப்பு விசையின் தாக்கத்தால்
அலைவரிசையில் ஒன்றாகி போன திருநாள்,
நம்மியலில் ஒரு நேச பிரதிபலிப்பு…
சிறிதொரு வேளை சினம்
கொண்ட போதும், சிரம்
தாழ்த்த மறவாத என்னவளாய் நீயும்,
மலரும் போதெல்லாம் உன்
கூந்தல் கோதி என் மடி சாய்த்து,
கோடை நிழல் தரும் உன்னவனாய் நானும்,
வரம் பெற்றோம்...
உனக்கென நானும்
எனக்கென நீயும் மட்டுமே
இருந்த நாட்கள்…
விருந்து வைக்க உறவில்லாமல் போனாலும்
அதை மறக்க வைத்த நட்புகளால்
நம் வாழ்வாதாரம் பெற்றோம்…
உன் அழகின் திமிர் அகற்ற
என் ஆளுமை ஆட்டம் கொள்ள
என் தாயுமானவள் தாயான செய்தி...
ஓர் நொடி அந்த நொடி வயிற்றில்
கரம் தொட்டு உந்தன் பார்வையிலே
பிரசவித்து போனேன் நானும்…
மாதங்கள் நகர நகர
மாற்றங்கள் கண்டோம்
மதிமயக்கத்தில்
மழலையின் துள்ளல்…
கருவில் இருந்தும் கரம்
தொட்டு உறவாடிய
பிஞ்சு ஐந்து விரல்கள்
பத்திரமாய் பதித்து வைத்தோம்…
உலகம் காணும் முன்னே
அனைத்தும் அகம் கொட்டி
பக்குவமாய் பத்தே மாதத்தில்
உலகறிய செய்தோம்…
என் உயிரை உன் உருவமாக்கி
பொத்தி வளர்த்த நீயும்,
வளர்த்த உன்னை நானும்
வாயடைக்க செய்ய,