(Reading time: 2 - 4 minutes)

வேலை - அதி

Job

ட்...கட்... ஹீரோயின் பேஸ்ல நல்லா வெளிச்சம் பட்ற மாதிரி லைட்ட அட்ஜஸ்ட் பண்ணு.

ச்ச ஒரு வேலை உருப்படியா பண்ண மாட்டானுங்க, என்று அந்த புதுமுக டைரக்டர் கத்திக் கொண்டிருந்தான்.

ராஜா..ராஜா..என்று குரல் கேட்கவும் இப்போ யாருடா என்று துயில் தெளிந்தான்.

ராஜா எதிரில் அம்மா.. ஐயோ இவ்ளோ நேரம் எல்லாம் கனவா, ஒரு கனவ கூட உருப்படியா வர விட மாட்டிங்களே, என்னமா இவ்ளோ சீக்கிரமா என்னை எழுப்பறிங்க?

 என்னது..சீக்கிரமா மணியை பாரு.. ஒன்பது ஆச்சி, பத்து மணிக்கு ஏதோ இன்டெர்வியூ கு போணும்னு சொன்னியே.

 ஏன்மா நேத்தே சொல்லிட்டு தான தூங்கினேன் , காலைல சீக்கிரமா கிளம்பனும்னு , இவ்ளோ லேட்டா எழுப்பறிங்க.o

 அம்மா முறைத்த முறைப்பில், அப்டியே அம்மா கூட கன்வெர்சஷன் கு ஒரு என்ட் கார்ட் போட்டுட்டு இன்டெர்வியூ கு கிளம்ப ஆரம்பித்தேன் .

இந்த ஜாப்ப்பும் புட்டுக்க போகுது, இந்த ட்ராபிக் ல எப்போ கம்பெனி போயி சேர்றது.

அங்க என்னடா முனங்கிகிட்டே கிளம்புற.. நீயும் இன்ஜினியரிங் முடிச்சி ஒரு வருஷம் ஆக போகுது ஒரு வேலை உருப்படியா கிடைக்குதா?

நல்ல வேலை உனக்கு அப்றம் பொண்ணுங்க ஏதும் பிறக்கல, இல்லாட்டி உன்ன நம்பிட்ட்டு அதுங்களுக்கு வருஷ காலம் கல்யாணம் பண்ணாம வச்சிருக்க வேண்டியது தான்.  உன் கூட படிச்ச முக்கால்வாசி பசங்களுக்கு வேலை கிடைச்சிட்டு. எப்பவும் நான் இன்டெர்வியூ கிளம்பும் போது சொல்லும் அதே டயலாக்.

ஏம்மா நீ டெய்லி ஒரே டயலாக்க திரும்ப திரும்ப சொல்றதுக்கு பதிலா, ஒருக்கா சொல்லும் போது ரெகார்ட் பண்ணி வச்சிக்கோயேன்.

 உனக்கு நா சொல்றது எல்லாம் நக்கலா தெரியுதா? என்று அம்மா என்னை முறைக்க தொடங்கவும்..

ஏம்மா என்ன முறைக்கிற நானா உங்கள இன்ஜினியரிங் படிக்க வைக்க சொன்னேன், ப்ளஸ் டூ முடிச்ச உடனே  பிலிம் டிரெக்ஷன் கோர்ஸ் முடிச்சிட்டு சினி பீல்ட் கு போறேன்னு தானமா சொன்னேன்.

நீங்க தான என்ன இன்ஜினியரிங் படிக்க வச்சீங்க, இப்போ வேலை கிடைக்கலன்னு சொன்னா அதுக்கு நானா பொறுப்பு?

உங்கள மாதிரி பெத்தவங்க இருக்க போயி தான் நாட்ல வேலை தட்டுப்பாடே வருது.. ஒரே பீல்ட் ல எல்லா எல்லா பசங்களையும் கொண்டு திணிச்சா எவ்ளோ பேருக்கு தான் வேலை கிடைக்கும்?

இன்னிக்கு இந்த வேலை யாருக்கு குடுத்து வச்சிருக்கோ?  என்று விதியை நொந்து கொண்டு, இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண ஆயத்தமானேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.