(Reading time: 7 - 14 minutes)

தாத்தா - ஆனந்தன்

Thatha

பெருமாளுக்கு வயது 60 இருக்கும் சேலம் தாசில்தார் ஆபீஸ் வெளியில் பத்திரம் விண்ணப்பம், படிவம் எழுதும் எழுத்தாளராக உள்ளார்   நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரை வருமானம் கிடைக்கும் அவருடைய மனைவி அலமேலு இறந்து 4 வருடமாகிறது, அவருடைய மகன் ராமகிருஷ்ணன் ஆட்டோ டிரைவர், ராமகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான் பெயர் அன்பு. ராமகிருஷ்ணன் தனது மகன் மனைவியோடு சிறிய வீட்டில் வசிக்க அந்த வீட்டை ஒட்டி ஒரு சிறிய குடிசையில் பெருமாள் வசித்து வருகிறார். தினசரி காலை 8 மணிக்கு தனது மகனை பள்ளியில்  விட்டுவிட்டு பணிக்கு செல்லும் ராமகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கு மது அருந்துவது வழக்கம்.

ராமகிருஷ்ணனின் மனைவி சீதா, ராமகிருஷ்ணனும் அவன் மனைவி சீதாவும் பெருமாளிடம் பெரிதாக பேசுவதோ அவரை கவனிப்பது இல்லை, பெருமாள் ஆஸ்துமா நோயாளி என்பதால் தங்களது மகனையும் பெருமாளோடு பேச பழக விடுவதில்லை தினமும் காலை மற்றும் இரவு பெருமாளிற்கு உணவு கொடுக்க மட்டும் அன்பு பெருமாளின் குடிசைக்கு செல்வான், சாப்பாடு தட்டினை குடிசையின் வாசலில் வைத்துவிட்டு வந்து விடுவான், ஆஸ்த்துமா காரணமாக தினமும் இரவு தொடர்ச்சியான இருமலால் தூங்குவதற்க்கே பெருமாள் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார், மனைவியின் இழப்பு, இந்த வயதானவயதான நோய் வாய் பட்ட நேரத்திலும் தன்னை கண்டு கொள்ளாத மகன், தான் இருப்பதை பாரமாக நினைக்கும் மருமகள் தன்னிடம் கிட்ட வருவதற்க்கே பயப்படும் பேரன் என தன் நிலைமையை எண்ணி பெருமாள் தலையணை நினைக்காத நாட்களே இல்லை, பெருமாளிற்கு இருக்கும் ஒரே ஆதரவான விஷயம் அவருடைய நெடு நாள்  நண்பர் தற்போது அவரோட சேர்ந்து பத்திர எழுத்தாளராக வேலை பார்க்கும் நாராயணன். 

பெருமாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆஸ்துமாவிற்க்கான மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார் , இருந்த போதிலும் அரசு மருத்துவமனையில் தரும் மருந்து தற்காலிக தீர்வாக இருந்ததே தவிர முழுவதுமாக பலனளிக்கவில்லை, ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டி பெருமாள் தனது வைத்திய செலவுக்காக சிறிது சிறிதாக பணம் சேமிக்க தொடங்கினார். பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவித்தாயிற்று அன்பு தினமும் தன் தெருவில் உள்ள சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து வந்தான்.

அன்புவின் நண்பர்கள் பலர் புதிதாக சைக்கிள் வாங்கிவிட்டனர், அவர்கள்  சைக்கிள் ஒட்டி விளையாடுவதால் இப்போதெல்லாம் யாரும் கிரிக்கெட் விளையாட வருவதில்லை, இதனால் அன்புவும் ஒரு சைக்கிள் வாங்கி அவர்களோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டான். அன்று திங்கள் கிழமை, வழக்கம் போல தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள மரத்தடியில் பெருமாளும் நாராயணனும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தனர் வெயிலின் தாக்கம் சற்று  அதிகமாகவே இருந்தது. பெருமாள் தொடர்ச்சியாக இருமிக்கொண்டிருந்தார், அவர் வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. இதை பார்த்த நாராயணன் உடனே பெருமாளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கே பெருமாளின் உடலை பரிசோதித்த மருத்துவர் பெருமாளின் உடல் நிலை ரொம்ப மோசமாக உள்ளதாகவும் உடனே ஒரு சில மருந்துகளை அவர் தொடர்ச்சியாக சாப்பிட்டால் மட்டுமே இனிமேல் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்றும் சொல்லி ஒரு மருந்து சீட்டை கொடுத்தார். அந்த மருந்தின் விலை தோராயமாக ரூ 1000 இருக்கும் .

நிலமையை உணர்ந்த நாராயணன் பெருமாளிடம் இனிமேலும் யோசித்தால் வேலைக்கு ஆகாது நான்  உடனடியாக உன் மகன் ராமகிருஷ்ணனிடம் சொல்லி உன்னை கவனிக்க சொல்ல போகிறேன் என்றார். அதை விரும்பாத பெருமாள் நாராயணனை தடுத்து தான் தன் மருத்துவ செலவுக்காக  சிறிது பணம் சேமித்து வைத்துள்ளதாக சொல்லி அந்த பணத்தில் தான் மருந்தினை வாங்கி கொள்வதாகவும் கூறினார். நாராயணன் தன் நண்பனின் உடல் நிலை கண்டு மிகவும் வருந்தினார். இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த பெருமாள் தனது உண்டியலை எடுத்து அதில் உள்ள பணத்தை எண்னினார், சரியாக 1000  இருந்தது அதை எடுத்து பத்திரமாக தனது வேட்டியில் முடிந்து கொண்டு படுத்துவிட்டார், அன்று இரவு ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தவுடன் அன்பு மெல்ல தயங்கி தனது நண்பர்கள் அனைவரும் சைக்கிள் வைத்திருப்பதாகவும் அதே போல தனக்கும் ஒரு சைக்கிள் வாங்கி தருமாறும் கேட்டான். அன்று நாள் முழுக்க சரியான வருமானம் இல்லாமல் விரக்தியில் இருந்த ராமகிருஷ்ணன் தன்னிடம் இப்போது பணம் இல்லை அடுத்த மாதம் வாங்கி தருகிறேன் என்று சொல்ல உடனே அன்பு சத்தமாக அழ தொடங்கினான், ஏற்கனவே விரக்தியில் இருந்த ராமகிருஷ்ணனுக்கு அன்பு அழுவது கோவத்தை உண்டாக்கியது பலமுறை சொல்லியும் அன்பு அழுவதை நிறுத்தவில்லை,அன்புவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்து தனது கோவத்தை காட்டினான் ராமகிருஷ்ணன். வலி தாங்காமல் அன்பு அன்று இரவு முழுக்க  தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.