நடந்ததை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பெருமாள் தனது பேரன் தேம்பி தேம்பி முழுவதையும் ஒரு தாத்தாவாக தன் இயலாமையையும் நினைத்து மிகுந்த வேதனை பட்டார். தான் இதுவரை தனது பேரனுக்காக பெரியதாக ஏதும் செய்யாததை எண்ணி வருந்தினார், பொழுது விடிந்தது வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றார் பெருமாள். அன்று வேலை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு மருந்து வாங்குவதற்காக பெருமாளும் நாராயணனும் புறப்பட்டு சென்றனர். தனது பேரனின் அழுகை சத்தம் பெருமாளின் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருந்தது, திடீரென மனதை மாற்றிக்கொண்ட பெருமாள் தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாகவும் மருந்தை நாளைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் சொல்லி நாராயணனனை அனுப்பி வைத்து விட்டார்.
தன்னிடம் உள்ள பணத்தில் தனது பேரனுக்கு சைக்கிள் வாங்கி தர முடிவு செய்தார், நேராக கடைக்கு சென்று ஒரு சைக்கிள் வாங்கி வந்து தன் பேரன் முன்பு நின்றார், இதை சற்றும் எதிர்பாராத அன்பு சந்தோஷத்தில் தாத்தா....!!!! என்று கத்தியபடி பெருமாளின் மீது ஏறிகொண்டான், அவன் பெருமாளை தாத்தா என்று சொல்வதும் பெருமாளை கட்டியணைப்பதும் அதுவே முதல் முறை, பெருமாள் சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்றார். பல வருடங்கள் கழித்து பெருமாளின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது, அவர் கண்கள் மகிழ்ச்சி நீர் வடித்தன.;
அன்பு சைக்கிள் ஓட்டி விளையாட சென்றான் இதை கண்ட சீதா இப்போது இருட்டி விட்டதால் நீ காலை விடிந்ததும் சைக்கிள் ஓட்டலாம் என்று சொல்லி சைக்கிள் ரூமில் வைத்து பூட்டிவிட்டால், அன்பு இரவு முழுக்க தூங்காமல் சந்தோசத்தில் பொழுது விடுவதற்காக காத்திருந்தான். அன்று இரவு பெருமாளிற்கு இருமல் சற்று அதிகமாவே இருந்தது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பேரனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் உறங்கிவிட்டார். பொழுது விடிந்தது ராமகிருஷ்ணன் வேலைக்கு செல்வதற்காக ஆட்டோவை துடைத்து கொண்டிருந்தான், 8 மணி ஆகியும் தனது அப்பா எழுந்திரிக்காததை கவனித்தான், அப்பா...அப்பா..!!! என பல முறை அழைத்தான், பதில் வரவில்லை, என்ன ஆயிற்று என பார்க்க உள்ளே சென்று பார்த்த பின்பு தான் தெரிந்தது, பெருமாள் உயிருடன் இல்லை என்று,
தகவல் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொல்லப்பட்டது, இறுதி மரியாதைக்காக பெருமாளின் உடல் வைக்க பட்டிருந்தது, நாராயணனும் வந்திருந்தார், பெருமாள் இறந்ததை கூட அறியாமல் அன்பு சீதாவிடம் அந்த சைக்கிள் ஓட்ட தனக்கு எடுத்து தருமாறு கேட்டு அடம் செய்து கொண்டிருந்தான் . அதனை கவனித்த நாராயணன் அன்புவிடம் அவன் அழுவதற்கான காரணத்தை கேட்க அதற்க்கு அன்பு தனக்கு தாத்தா நேற்று புது சைக்கிள் வாங்கி கொடுத்ததாகவும் அதை ஓட்டி விளையாட தருமாறு கேட்டு அவன் அழுவதை அறிந்து கொண்டார்.
பெருமாள் மருந்து வாங்க வைத்திருந்த பணத்தில் தனது பேரனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்திருப்பதை நாராயணன் புரிந்து கொண்டார். உடனே அந்த ரூமில் இருந்து அந்த சைக்கிள் எடுத்து அன்புவிடம் கொடுத்து நீ போய் விளையாடு என்றார், சைக்கிள் வாங்கிய சந்தோஷத்தில் அன்பு தாத்தாவையும் எழுப்புங்க நான் சைக்கிள் ஓட்டுவதை அவரும் பாக்கட்டும் என்றான், அதற்க்கு நாராயணன் நீ போய் ஓட்டு தாத்தா உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றார். அன்புவுக்கு புரியவில்லை இருந்தாலும் சைக்கிள் ஓட்டி விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிவிட்டான். தன்னிடம் இருந்த பணத்தில் சரியாக மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துருந்தால் பெருமாள் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்துருப்பார், அனால் சந்தோசமாக இருந்துருப்பாரா என்று தெரியாது, பேரனின் ஆசையை நிறைவேற்றியதன் மூலம் அவர் இறந்தாலும் சந்தோஷமாகவே அவர் உயிர் பிரிந்தது,
அன்றிலிருந்து பெருமாள் தினமும் அன்பு சைக்கிள் ஓட்டி விளையாடுவதை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார் தாத்தாவாக அல்ல தெய்வமாக.....
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.