(Reading time: 14 - 27 minutes)

திருவிளையாடல் ரிட்டர்ன்ஸ் - மது

Thiruvilaiyadal

டம்: கைலாச பர்வதம்

அன்று சிவபெருமான் இல்லமான கைலாச பர்வதத்தில்  தேவலோகமே திரண்டு இருந்தனர்.

நான்முகக் கடவுள் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி, காக்கும் நாயகன் நாராயணன், செல்வங்களின் தேவி மஹாலக்ஷ்மி, தேவலோக அதிபதி இந்திரன் மற்றும் தேவர்கள் அஸ்வினி குமாரர்கள் யாவரும் ஒன்றாக கூடி அதி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்...

“நாராயணா… பீப்…  நாராயணா” என்று அனிருத் ஸ்டைலில் தனது கி போர்டு சகிகதம் அங்கு வந்து சேர்ந்தார்  நாரதர்.

நாராயணன்: நாரதா ஏற்கனவே இந்த "பீப்"பினால் பூலோகத்தில் அல்லோலகதி ஆனது போதாதா.. இங்கு வந்து என்னை வேறு மாட்டி விடுகிறாயா...

நாரதர்: நாராயணா நாராயணா... ஸ்வாமி மூன்று உலகங்களிலும் ரௌண்ட்ஸ் போய் லேட்டஸ்ட் ஹப்பனிங் அறிந்து கொண்டு வரும் சாதாரண ஐ டி ( information technology) ஊழியன் நான்.

பார்வதி: என்ன நாரதா இன்று என்ன வைரஸ் கொண்டு வந்திருக்கிறாய்... நாரதர் என்றால் கூடவே வைரஸும் வரும் என்பது மூவுலகும் அறிந்த ஒன்றல்லவா...

நாரதர்: அகிலாண்டேஸ்வரி தாயே...  எப்படி பட்ட வைரஸ் ஆனாலும் “டீ பக்” செய்ய சர்வேஸ்வரன் இருக்கையில் என் வருகையினால் கவலை கொள்ளலாகுமா

சிவபெருமான்: அப்போது இன்று அதி தீவிர வைரஸ் கொண்டு வந்திருக்கிறாய் என்று சொல்.

நாரதர்: தேவா சம்போ மஹாதேவா... ஒரு அரிய ஞானபழரசம் ஒன்று கிடைக்கப் பெற்றேன்... அதை தங்களிடம் சேர்ப்பிக்கவே வருகை புரிந்தேன்..

விநாயகர்: ஞான பழரசமா...என்ன அது

நாரதர்: பூலோகத்தில் மக்கள் யாவருமே இணைய வலையில் தான் தங்கள் தலையை எந்நேரமும் நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சில விஷக் கிருமிகள் சைபர் கிரைம் என்ற பெயரில் நஞ்சை பரப்பி மனித குலத்திற்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

பிரம்மா: ஆம். நன்மை அளிக்கும் என்று மக்களுக்கு இந்த நுட்பத்திறனை அவர்கள் நியூரானில் வைத்துப் படைத்தேன்... ஆனால் அதையே சிலர் தவறான வழியில் பயன்படுத்தி மற்றவர்களுக்குத் துன்பம் தருகிறார்கள்.

சரஸ்வதி: உண்மையே!!! குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும்படியான குற்றங்களே அதிகம் பாதிப்பை விளைவிக்கின்றன.

மஹாலக்ஷ்மி: சமீபத்தில் கூட அப்படி குற்றங்களால் இளம் பெண்கள் உயிரையே இழந்திருக்கிறார்கள்.

நாராயணன்: கலியுகத்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் பல்கி பெருகுவதை தடுத்தாக வேண்டும்... இல்லையேல் மீண்டும் எனது அவதாரம் பிரளயத்தில் முடிந்து இன்றைய சிருஷ்டிக்கு  முடிவை தேடித் தருவதாக அமைந்து விடும்.

சிவபெருமான்: அப்படி நேராமல் தடுக்கவே சுலபமான  ஒரு வழியை கண்டறிந்து கொண்டு வந்திருக்கிறார் நாரதர்.. அப்படி தானே நாரதா...

நாரதர்: முக்காலமும் அறிந்த முக்கண் நாயகனே... ஆடுவதும் ஆட்டுவிப்பதுவும் நீரல்லவா...

முருகன் : நாரதன் மாமா .. முதலில் இந்த ஞான பழ ரசத்தை பற்றிக் கூறுங்கள்

நாரதர்: இந்த ஞான பழரசம் அருந்தினால் அண்டம் முழுதும் உள்ள நெட்வேர்க் சிஸ்டம்  புளுபிரிண்ட்டின்  மாஸ்டர் கண்ட்ரோல் கிடைக்கப் பெறும்..

பார்வதி: நாரதா அதை கொஞ்சம் விளக்கமாக சொல்வது தானே..

நாரதர்: அப்படியே ஆகட்டும் தேவி...  இந்த மாஸ்டர் கண்ட்ரோல் மூலம் எங்கு என்ன தகவல் ஷேர் செய்ய பட போகிறது என முன்பே தெரிந்து விடும்... ஒருவர் அவரது டிவைஸ் ஆன் செய்து நெட் கனெக்ட் செய்ததும் அவரது மூளையில் தீய எண்ண அலைகள் தோன்றினால் அதை மாஸ்டர் கன்ட்ரோல் சென்ஸ் செய்து விடும். அப்படி பட்ட தகவல் என்டர் ஆகும் முன்பே அதை பிளாக் செய்யும் திறனும் மாஸ்டர் கண்ட்ரோல்லிடம் உண்டு.

சிவபெருமான்: அப்படி பட்ட எண்ணங்களை மூளையில் இருந்தே டெலீட் செய்யவும் மாஸ்டர் கண்ட்ரோலால் முடியும்.  மாஸ்டர் கண்ட்ரோல் ஷக்தி  இந்த ஞான பழ ரசம் அருத்துபவர்க்கு கிடைக்கும்... அப்படி தானே நாரதா...

நாரதர்: ஆமாம் ஐயனே...அதனாலே தாங்கள் அருந்தவே இங்கு எடுத்து வந்தேன்.

சிவபெருமான்: சரி கொடு...நானும் உமாவும் பாதி பாதி அருந்துகிறோம்.

நாரதர்: இல்லை இல்லை இதை ஒருவர் மட்டுமே முழுவதுமாக அருந்த வேண்டும்  மகாதேவா...

சிவபெருமான்: ( நகைத்துக் கொண்டே) ஆஹா அது முடியாதே...என்னில் அனைத்துமே சரிபாதி தேவியல்லவா.. அப்போது தேவி இதை நீயே அருந்து..

பார்வதி: இது என்ன நியாயம் ஸ்வாமி...உங்களில் நான் பாதி என்றால் என்னிலும் நீங்கள் தானே பாதி... ஒன்று செய்வோம் இன்றைய இணையம் தகவல் நுட்பம் எல்லாம் இளைய தலைமுறையினரிடம் தானே... அதனால் நம் பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவோம்

சிவபெருமான்: நாரதா நீ கொண்டு வந்த வைரஸை வெற்றிகரமாக இங்கு நுழைத்து விட்டாயே...திருப்தியா

நாரதர்: சிவா சிவா ஐயனே!!! எல்லாம் தங்களின் லீலை அல்லவா

முருகன்: அம்மா அப்பா சென்ற முறை ஞானபழத்தை அண்ணன் தானே சாப்பிட்டார்..அதனால் இந்த முறை ஞான பழ ரசம் எனக்கே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.