(Reading time: 14 - 27 minutes)

விநாயகர்: தம்பி இதுவும் ஞான பழரசம்... ஞானம் இருப்பவர்களுக்குத் தான் இது கிடைக்கும்..அப்படி தானே டாடி... ஏற்கனவே என் ஞானம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் எனக்கே பழரசம்.

பார்வதி: என்ன ஸ்வாமி இது... அன்று போலவே இருவரும் இதற்கு சண்டையிட்டுக் கொள்கிறார்களே...

சிவபெருமான்: காலம் மாறினாலும் காட்சி மாறுவதில்லை... அன்று போலவே இன்றும் போட்டி ஒன்றை வைப்போம்..யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே மாஸ்டர் கண்ட்ரோல் ஷக்தி தரும் ஞான பழரசம்..

நாராயணன்: ஆம்.. இன்றைய பூலோக வாசிகள் எல்லாம் அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்...அவர்களின் மூளையின் எண்ணங்களை சென்ஸ் செய்து சமயோசிதமாக செயல்பட மிகுந்த நுண்ணறிவும் பொறுமையும் தீர்க்கமான முடிவுகள் ஏற்கும் திறமையும் வேண்டும்..

பிரம்மா: இனி படைப்பினை மாற்ற இயலாது...ஆதலினால் இப்படி பட்ட வழி ஒன்றே நமக்கு சாத்தியம்.

முருகன்: என்ன போட்டி என்று கூறுங்கள்... வெற்றி எனதே..சென்ற முறை போல் இந்த முறை நான் விடப்போவதில்லை

விநாயகர்: போட்டிக்கு நானும் தயார்...நாராயணன் மாமா சொன்ன அத்தனை தகுதியும் என்னிடமே உள்ளன என நிரூபித்துக் காட்டுகிறேன்.

பார்வதி: என்ன போட்டி விதிமுறை என்று நீங்களே சொல்லிவிடுங்கள் சுவாமி... எப்படியோ இன்று குடும்பத்தில் மீண்டும் குழப்பம் வர போகிறது..அதை நினைத்து தான் எனக்கு சஞ்சலமாக உள்ளது.

சிவபெருமான்: தேவி வருத்தம் கொள்ளாதே...உலகத்துக்கே அம்மையப்பன் நாம்.. பூமியில் வாழும்  குழந்தைகள் அனைவரின் நன்மை பொருட்டே இப்போட்டி... இதில் வெற்றி பெரும் நம் பிள்ளை உலகத்தின் நன்மைக்காக மிக பெரும் பொறுப்பை சுமக்க போகிறான். அதற்கு உரிய அறிவு பொறுமை பக்குவம் அனைத்தும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது தானே முறை...

சரஸ்வதி: ஈஸ்வரன் கூறுவது முற்றிலும் சத்தியமான ஒன்று தானே தேவி

மஹாலக்ஷ்மி: ஆம்.. இதில் உலகத்தின் நன்மை முழுவதும் அடங்கியிருக்கிறது...தீய எண்ணம் என்று நினைத்து நல்ல எண்ணங்களை தகவல் தொடர்புகளை துண்டிக்காமல் பார்த்துக் கொள்வதும் மிகப் பெரிய பொறுப்பு தானே..

நாராயணன்: சரியாக சொன்னாய் பத்மஜா..

சிவபெருமான்: நாரதா நீயே போட்டி விதிகளை சொல்லிவிடு

நாரதர்: சிவ சிவா... இதோ இந்த ஞானபழரசம் அடங்கிய இந்த குவளையை திறப்பதற்கு மாஸ்டர் கீ ஒன்று உள்ளது...அந்த மாஸ்டர் கீ இருக்கும் இடம் அறிய இந்த 10 இலக்க பாஸ்வர்ட் கொடுக்க வேண்டும்.. பாஸ்வர்ட் 10  தமிழ் அக்ஷ்ரங்கள் கொண்ட வார்த்தை ... இதுவே க்ளூ..

பார்வதி: என்ன சுவாமி இது... 10 எழுத்துக்கள்  கொண்ட தமிழ் வார்த்தை எண்ணில் அடங்கா... இதை ஒரு க்ளூ என்று கொடுப்பது எப்படி நியாயம்.

சிவபெருமான்: தேவி.. நம் குழந்தைகள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். சகல வேத சாஸ்திர ஞானம் பெற்றவர்கள். இதை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை... இருப்பினும் நீ கவலை கொள்வதால் சில சலுகைகள் வேண்டுமானால் கொடுக்கலாம்.

முருகன், விநாயகர்: என்ன சலுகை அப்பா...சீக்கிரம் சொல்லுங்கள்.

சிவபெருமான்: மூன்று சலுகைகள்..அதில் ஏதேனும் இரண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்... பாஸ்வர்ட் கண்டுபிடிக்க ஒன்றும் மாஸ்டர் கீ பெற்று குவளையை திறக்க மற்றொன்றும்... இதில் ஒரு முறை பயன்படுத்திய சலுகை காலாவதி ஆகிவிடும்...அதே போல் பாஸ்வர்ட் ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்..தவறாக கொடுத்தால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் பெற்று விடுவீர்கள்...

நாரதர் : சலுகை ஒன்று:  டயல் எ பிரண்ட்... பூலோக வாசிகள் ஒருவரின் உதவியை நீங்கள் நாடலாம்... மாஸ்டர் கண்ட்ரோல் பற்றிய விவரங்கள் எதுவும் சொல்ல கூடாது... ஞான பழரசக் குவளை திறக்கும் பத்து எழுத்து  தமிழ் வார்த்தை என்று கூறி தான் கேட்க வேண்டும்...

சலுகை இரண்டு: வேதம், உபநிஷம் வேறு தமிழ்  நூல் எதுவானாலும் தேடலாம்...

சலுகை மூன்று : இங்குள்ள மூன்று தேவ தேவியரின் எவரேனும் ஒருவரின் ஓர் வடிவத்தை   தரிசிக்க வேண்டலாம்...

விநாயகர்: நாரத மாமா... இந்த மூன்று சலுகை பற்றி பூலோக பிரண்ட்டிடம் சொல்லலாமா...

சிவபெருமான்: சொல்லலாம்... சொல்லி ஆலோசனை கேட்கலாம்... ஆனால் ஒரு சலுகை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும்.

விநாயகரும் முருகனும் அதிவிரைவில் செயல்பட்டனர்...முதலில் பாஸ்வர்ட் கண்டுபிடிக்க வேண்டுமே... முருகன் உலகில் இது வரை உள்ள எல்லா நூல்களையும் தேடி போய்விட்டார்...

நம் பிள்ளையார் தனது ஸ்மார்ட் போன் எடுத்து டயல் எ பிரண்ட் சலுகையை பயன்படுத்தினார்...

“நீ பார்த்திடல் அழகு

நீ பேசிடல் அழகு

 நீ ரசித்திடல் அழகு

அதனால் நான் அழகு”

ரிங் டோன்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... கும்பகர்ணி எடுக்குறளா பாரு

மது: ஹலோவ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.