(Reading time: 14 - 27 minutes)

விநாயகர்: ஏ !!!! தூங்குமூஞ்சி

மது: ஹே வின்னு மை டியர் ஸ்வீட் பன்னு செல்லம் கண்ணு என்னடா இந்நேரத்துல எழுப்பி விடுற

விநாயகர்: சூர்யா மாமா லஞ்ச் பிரேக் விடுற டைம் ஆச்சு டி லூசு மங்கா...

மது: டேய் நீ தா மங்கா இல்ல இல்ல மாம்பழம் ..ஹா ஹா ஹா

விநாயகர்(மைண்ட் வாய்ஸ் : இவ கூட பேசினாலே மொக்க டைலாகா வருதே...நம்மள உலகம் ஞானபண்டிதன் அறிவுக் கடவுள்ன்னு கும்பிடுது...எல்லாத்தையும் டேமேஜ் பண்ணிடுவா போலையே..)

மது: என்ன டார்லிங் மைண்ட் வாய்ஸ் எல்லாம் பலமா இருக்கு

விநாயகர்: ஹி ஹி மதுக்குட்டில என் பெஸ்ட் பிரண்ட்ல

மது: தெரிஞ்சா சரி

விநாயகர்: அப்பா முன்னாடி மாதிரி காம்பெடிஷன் வச்சுட்டாரு

மது: ஹை ஜாலி ஜாலி ...இந்த வாட்டி என்ன பழம். பலா பழமா போட்டில வைக்க சொல்லு. அப்போ தான் நெறைய பழம் இருக்கும் பங்கு வச்சு சாப்பிடலாம்...

விநாயகர்: இந்த டைம் புரூட் ஜூஸ் ..

மது: வாரே வா... கைலாசம் கூட ஹை டெக் ஆச்சு டோய்

விநாயகர் (கோபமா) : மது ஐ அம் ரன்னிங் அவுட் ஆப் டைம்

மது: நீ தான் விஷயத்தை சொல்லாம மொக்க போட்டுட்டு இருக்க...நீ தான் இன்டலிஜெண்ட் ஆச்சே..எனக்கு ஏன் போன் பண்ண

விநாயகர்: ஹ்ம்ம் தோசை சுட்டு தான்னு கேக்க தான்

மது: டூ மினிட்ஸ்  டியூட்

விநாயகர்: கடுப்பேத்தாத டி மந்தி நந்தி...

மது: ஹே நந்தி அங்கிள் கோச்சுக்க போறாரு ..சரி மேட்டருக்கு வா

விநாயகர்: 10 லெட்டர்  தமிழ் வார்த்தை தான் பாஸ்வர்ட்...அது என்னன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சா மாஸ்டர் கி எங்கன்னு தெரியுமாம்...அப்றம் அத வேற கண்டுபிடிக்கணும்....திஸ் டைம் சோ  டஃப்… மூணு  லைஃப் லைன் குடுத்திருக்காங்க...ஒன்னு போன் எ பிரண்ட்..நான் இப்போ யூஸ் பண்ணிட்டேன்...அப்றம் எனி புக் தேடலாம்...அப்றம் அம்மா அப்பா நாணு மாமா, பிரம்மா  மாமா, சரஸ் அத்தை, லட்சு அத்தை இவங்கள யாராச்சும் ஒருத்தரோட ஏதாச்சும் ஒரு வடிவம் ரெக்வெஸ்ட் பண்ணலாம்

மது: என்னடா வின்னு...ரொம்ப டிவிஸ்ட்டா இருக்கு... புக் ஓகே, அந்த ஏதாச்சும் ஒரு ஃபோர்ம் எதுக்கு

விநாயகர்: அதான் உனக்கு கால் பண்ணேன்... நீ தான் அப்போ அப்போ லஞ்சம் குடுத்து என்னோட நாலேஜ் எல்லாம் வாங்கிக்கிட்டியே...சோ ஹெல்ப் பண்ணு இப்போ

மது: ஹாஹாஹாஹாஹா...வின்னு செல்லம்... நீ சோ கியூட் உன்கிட்ட எனக்கு பிடிச்சதே காட்ன்னு பந்தா  இல்லாம நீ இருக்குறது தான்... மரத்தடில கூட ஹாப்பியா இருந்துக்குவ...பெரிய கோவில் தான் வேணும்னு எல்லாம் சொல்ல மாட்ட... அப்றம் மண்ணு மஞ்சள் எதுல பிடிச்சு வச்சாலும் அவங்களுக்கு பிளஸ் பண்ணுவ... மாடர்னா அடாப்ட் ஆகிக்குவ...தட்ஸ் ஒய் யூ ஆர் மை ஸ்வீட் கியூட் பெஸ்ட் பிரண்ட்

விநாயகர்: ஹே ஸெல்ப் டப்பா... இப்போ எனக்கு டப்பா தட்ட சொன்னேனா

மது: வின்னு ஹெல்ப் லைன் 3 க்கும் பதிலுக்கும் ஏதோ லிங்க் இருக்கு..பேசாம நீ உன்னோட ஸ்டாண்டர்ட் பார்முலா அப்ளை பண்ணிரு...எப்போவுமே அம்மா அப்பா இஸ் கிரேட்...அவங்க தானே உலகம்ன்னு சொல்லி வின் பண்ண

விநாயகர்: ஹனி செல்லம் வாவ் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு.. அம்மா அப்பா சேர்ந்து இருக்க வோர்ட்...என்னவா  இருக்கும்

மது: ஹ்ம்ம் இரு யோசிக்கலாம்...சிவசக்தி அது 5  தான்... அம்மையப்பன் அது 7 தான்...

விநாயகர்: அர்த்தநாரீஸ்வரர்

மது : அ ர் த் த நா ரீ ஸ் வ ர ர்  ஹுர்ரே 10 லெட்டர்ஸ்

விநாயகர் : அதுவே பைனல் பண்ணிடவா

மது: எலிஃபண்ட்ஜி லாக் கரோ

விநாயகர்: அப்போ நீ சொன்ன மாதிரி மாஸ்டர் கீ திறக்க க்ளூ  மூணாவது லைஃப்  லைன் லிங்க் அப்பாவோட வடிவம்ல அர்த்தநாரீஸ்வரர்

மது: எஸ் எஸ் போ போ சீக்கிரம் போ...மை ஸ்வீட் டார்லிங் நீ தான் தி கிரேட் இன்டலிஜெண்ட் டெட்டி பட்ட்டி

விநாயகர்: மதுகுட்டி நா போயிட்டு வின் பண்ணிட்டு வரேன்...பை

மது: ஆல்வேஸ் வின் மை வின்னு தான்.. ட்ரீட்டுக்கு வெயிட் பண்றேன் பை ....

விநாயகர் போன் ஆப் செய்து விட்டு சிவபெருமானிடம் சென்றார்

விநாயகர்: அப்பா நான் ஒரு ஹெல்ப் லைன் தான் யூஸ் பண்ணேன். நான் விதி எதையும் மீறலை. பாஸ்வர்ட் ஃபீட் பண்ணலாமா

சிவபெருமான்: உன்னோட உரையாடலை நாங்க கேட்டோம் கணேசா.. நீ விதி எதையும் மீறாம சரியாய் தான் உன்னோட சலுகையை பயன்படுத்தி இருக்க... அதனால நீ உன் பாஸ்வர்ட் குடு

பார்வதி ( சிவனிடம் ரகசியமாய் ): இந்த கணேசன் பிரண்ட் கூட பேசினா நேரம் போறதே தெரியாம பேசுவான்...போட்டியாச்சே சீக்கிரமா பேசி முடிச்சு வருவோம்னு  இருக்கா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.