(Reading time: 14 - 27 minutes)

சிவபெருமான்:  நம்ம கணபதி நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது நல்லது தானே கௌரி..இன்னும் பூலோகவாசிகளிடம் புனிதமா சுயநலமில்லாம இருப்பது  தாய்மைக்கு நிகரா நட்பு  தானே...

பார்வதி: சரி தான்... தன்னோட பக்தர்களிடமும் நண்பனாய் இருக்கும் நம் கணேசனை நினைத்தாலே பெருமையாக தான் இருக்கிறது.

அதற்குள் விநாயகர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சொல்லை பாஸ்வர்ட்டாக கொடுக்க அதுவே சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது

நாராயணன்: மருமகனே!!! வெகு அருமை... சரியான பதில்.

பிரம்மா: ஞான பண்டிதன் அல்லவோ...

நாரதர்: கணேசா சரியான பதில் கொடுத்து மாஸ்டர் கீ அன்லாக் செய்திருக்க... இப்போ நீ அதில் இருக்கும் க்ளூவை பார்க்கலாம்..

விநாயகர்:  ஹால்ஃப் ரெடினா சென்சார் என்று போட்டிருக்கிறதே..

நாரதர்: ஆம் விநாயகனே... உன்னிடம் இன்னும் இரண்டு சலுகைகள் இருக்கின்றன.

விநாயகர்: (வின்னு ஹெல்ப் லைன் 3 க்கும் பதிலுக்கும் ஏதோ லிங்க் இருக்கு ) அப்பா நான் உங்களின் அர்த்தநாரிஸ்வரர் வடிவத்தை தரிசிக்க விரும்புகிறேன்

சிவபெருமான் (புன்னகையுடன்) : தேவி நம் மைந்தன் ஞானக்கடல் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டான்..

அர்த்தநாரீஸ்வரர் ஆணும் பெண்ணும் சரிநிகர் என்று உலகக்கிற்கு உணர்த்திய அற்புத வடிவம் சிவபெருமான் பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் காட்சி தர முக்கோடி தேவர்கள் அனைவரும் வணங்கி நிற்க

விநாயகர்: அம்மையப்பா...இந்த வடிவத்தில் உங்களது நெற்றிக்கண்ணில் தான்  மாஸ்டர் கீ உள்ளது . நான் தகுதியானவன் என்றால் எனக்கு அதை தந்தருள வேண்டும்

அர்த்தநாரீஸ்வரர்: மைந்தா...நீயே ஞானத்தில் சிறந்தவன்... பணிவில் உயர்ந்தவன்...பொறுமையின் நாயகன்... உண்மையின் காவலன்... உன் விடை சரியே... உனக்கே ஞான பழரசம்... இதோ பருகி மாஸ்டர் கண்ட்ரோல் உனதாக்கிக் கொள்..

விநாயகர் ஞானபழரசம் பருகி மாஸ்டர் கண்ட்ரோல் பெறுகிறார்...

விநாயகர்: பெரியவர்கள் அனைவரையும் வணங்குகிறேன் எனக்கு நான் எடுத்த பணியை திறமையாக நிறைவேற்ற ஆசி வழங்குங்கள்... பூலோகத்தில் எனது உற்ற தோழமைகள் மூலம் அங்கு நடக்கும் அனைத்தையும் அவர்களின் கண்ணோட்டத்தில் அறிவேன் நான்... இனி எல்லோருக்கும் நன்மையே நடக்கும்... பூலோகம் மகிழ்ச்சியாக நல்ல எண்ணங்கள் கொண்டோர் வாழும் உன்னத பூமியாக திகழும்...

பின்னுரை

முருகன்: அப்பா அம்மா இது என்ன போன முறை போலவே இந்த முறையும் எனக்கெதிராய் சதி செய்து விட்டீர்களே..

விநாயகர்: தம்பி கோபித்துக் கொள்ளாதே..நீ தகப்பன் சுவாமி.. அனைத்தையும் உணர்ந்தவன்... எனக்கு இப்பணியில் உற்ற துணையாக இரு..

முருகன்: ஆன் ஒன் கண்டிஷன் ப்ரோ... உன்னோட தோழிகளுக்கு என்னை  இன்ட்ரோ பண்ணு...அப்போ தான்

விநாயகர்: வள்ளிக்கும் தெய்வாவிற்கும் ஒரு கால் பண்ணிட்டு சொல்றேனே..

முருகன்: ஐயோ ஆள விடு என் சகோதரா...அப்புறம் எனக்கு சிங்கிள் டீ கூட கிடைக்காது.. உனக்கென்ன அரசமர தோழிகள், மோதகம், சுண்டல்ன்னு நீ என்ஜாய் பிக் பிரதர்...

விநாயகர்: அப்போ நம்ம டீல்..

முருகன்: இந்த தம்பி உடையான் வைரஸ், ஹாக்கிங், சைபர் கிரைம் எதற்கும் அஞ்சான்.. யாமிருக்க கவலையேன்

விநாயகர் : லவ் யு பேபி ப்ரோ

ஸ்கைப்பில் இன்று

ஹாப்பி பர்த்டே வின்னு செல்லம்...

மது டியர் உன் வின்னு வின் பண்ணிட்டேன். பர்த் டே சர்ப்ரைஸா சொல்லணும்னு வெயிட் பண்ணேன்

இ நோ பிள்ளையாரப்பா... சரி நான் உனக்கு மோதகம் சுண்டல் செஞ்சுட்டு இருக்கேன்...நீ சீக்கிரம் அம்மா அப்பா அத்தைஸ் மாம்ஸ் அங்கிள்ஸ் ஆண்டிஸ் எல்லார்கிட்டயும் பிளஸ்ஸிங் வாங்கிட்டு நான் அனுப்பின புது டிரஸ் போட்டுக்கிட்டு வருவியாம்... இங்க சில்சீ பிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க...எல்லோரையும் இன்வைட் பண்ணிருக்கேன் உன் பர்த்டே பார்ட்டிக்கு... சோ பார்ட்டி டைம் பிகின்ஸ்...

விநாயகர்: அப்போ இந்த பிறந்த நாள் சூப்பர்ரா இருக்க போகுதுன்னு சொல்லு

மது: ஆமாமா... நீ எல்லோருக்கும் ட்ரீட் குடுக்கணும்... எல்லோருக்கும் சந்தோஷம், நல்ல ஆரோக்கியம், ஞானம், வெற்றி, வளம், அமைதி எல்லாம் தரணும்.. ஓகேவா

விநாயகர்: என் பெஸ்ட்டீ மது சொல்லி வின்னு செய்யாம இருந்திருக்கேனா... இன்பனைட் ஒகே...

மது: ஹாப்பி பர்த்டே வின்னு...வி ஆல் லவ் யு சோ மச்

பிரண்ட்ஸ்... இது வெறும் கற்பனை கதை மட்டுமல்ல…..இன்றைய இணைய உலகில் நடக்கும் குற்றங்கள் குறித்த எனது ஆதங்கம்.. சிறு வயதில் இருந்தே விநாயகன் (செல்லமாய் வின்னு ) என் உற்ற தோழன்... இங்கு உரையாடியதை போல ஒரு நண்பனாய் தான் உள்ளத்தில் கொண்டுள்ளேன்...தூய அன்பே சிறந்த பக்தி அல்லவா

விநாயகர் சதுர்த்தி நாளான இன்று நல்ல தொடக்கங்கள், மகிழ்ச்சி, அமைதி ,உலகில் நிலவ வின்னுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்... நிறைவேற்றுவான் என் தோழன் என்ற நம்பிக்கையில்....

பர்த் டே பார்ட்டிக்கு வந்துருங்க எல்லோரும்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.