(Reading time: 8 - 16 minutes)

நேர்மையான விவசாயம், நேர்மையற்ற சமுதாயம் - வின்னி

Vivasayam

ல்கலைக் கழகத்தில் விவசாயப் பட்டம் வாங்கி, பல இடங்களில் விண்ணப்பித்தும்,வேலை கிடைக்கவில்லை.

ஒரே மகன்! நேரத்துக்கு அம்மா சமைத்த உருசியான சாப்பாடு, உடுக்க உடை, இருக்க இடம், தொந்தரவு கொடுக்காத பெற்றோர். அப்பா சேர்த்து வைத்த சில  ஏக்கர் வறட்டுக் காணிகள்.

நடுத்தர குடும்பப் பெற்றோர்களுடன் இருப்பவனுக்கு வேலைக்குப் போ என்ற வற்புறுத்தல் இல்லை.

இளமை  போய்க்கொண்டு இருக்கிறது, காதலியும் இல்லை! வேலையும் இல்லை!

வீட்டில் இருந்து அலுத்து விட்டது. எந்த வேலையும் செய்யத் தயார் என்ற நிலை!.

ஏதாவது வேலை கிடைக்குமா, என்று  கிராமத்தை விட்டு சில நாட்கள்    வெளியே போய்ப் பார்ப்போம், என்று யோசித்தான்!

அம்மாவுக்கு விருப்பமில்லை! “உனக்கு என்ன குறை வீட்டில் இரு” என்றாள்!

படித்த அப்பாவோ “உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்” என்றார்.

சகோதரர்கள் இல்லை அறிவுரை சொல்ல!

“தாய் சொல்லைத்த தட்டாதே!, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!

எதைச் செய்வது? தாய் சொல்லைக் கேட்காமல் ஊரைவிட்டு நடக்கத் தொடங்கினான், ஜெகன் என்ற ஜெகநாதன். 

நல்ல வெயில், தலையில். துண்டுடன் ஒரு விவசாயி வேர்த்து, விறுவிறுக்க நிலத்தை கோத்திக் கொண்டு  இருக்கிறான்.

ஜெகனைப் பார்க்க அவனுக்கு நேரமில்லை. 

அந்த ஏழை விவசாயியின் அழகான மகளோ ஜெகனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து விட்டு, களை பிடுங்குவதைத் தொடருகிறாள்.

அவளுக்குத் தகுந்த ஆதரவு கிடைத்திருந்தால், அவளும்"விஜே"யுடன்.  கதாநாயகியாக நடித்திருப்பாள். களைபிடுங்குவது கதையாகி, அவளும் கோலிவுட்டில் பறந்திருப்பாள்.  

வானூர்தியில் ஏறுவதற்கு காத்திருக்கிறான் ஜெகன்.  ஒரு அழகான பென்ஸ் கார்  அவனருகே வந்து நிற்கிறது. அவ்வூர் பணக்காரர், ஏழை விவசாயிகளைச் சுரண்டி வாழ்பவர்,  தனது மகளுடன் அமர்ந்திருக்கிறார்.

"ஜெகன்! எங்க பயணம்? வா எங்களுடன்" என்கிறார்.

வாழ்க்கையில் கஷ்டப் பட்டபோது, ஜெகனின் தந்தை அவருக்கு உதவியவர். அதை மறக்கவில்லை அவர்.

அவரை அணுகினால் வேலை கிடைக்கும். ஆனால் நேர்மையான அப்பா அதை விரும்ப மாட்டார்.

பக்கத்தில் நின்ற இரண்டு வறியவர்கள் தமக்கும் சவாரி கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்! அந்த புதிய வாகனத்தில் ஏறுவதற்கு, அவர்களுக்குத் தகுதி இல்லை!

ஊரில் பெரியவர்! வரமுடியாது என்று சொல்ல முடியவில்லை!.

காரில் ஏறி மகளுக்கு அருகில் அமருகிறான். அவளும் அவனை நெருங்கி, அவனோடு ஒட்டியபடிஅமருகிறாள். விலை உயர்ந்த பேர்பியூமின் வாசனை மனதை மயக்குகிறது.

அவள் கைகள் அவன் கைகளுடன் உரசும் பொது நல்ல உணர்வு. ஜெகனுக்கு அது  புது அனுபவம்!

அவர்கள் இருவரும் அவனிடம் மாறி மாறி கேள்விகள் கேட்கிறார்கள். அவனது படிப்பைப்பற்றி, குடும்பத்தைப் பற்றி, பொழுது போக்கைப் பற்றி, என்ன வேலை தேடுகிறான் எனப் பல கேள்விகள்!  

தம்மைப் பற்றிப் பெருமைப் பேச்சுக்கள். தம்மிடம் உள்ள காணிகள், நகைகள், வீடுகள், பணம்,  இவற்றைச் சொல்லிஅவனை மயக்கப் பார்க்கிறார்கள்.

ஆனால், எவ்வழியில் அப் பொருட்களைச் சேர்த்தார்கள் என்று சொல்லவில்லை.  அவனை யூகிக்க வைத்து விட்டார்கள்! 

அவனுக்கு வேலைதர முன்வருகிறார் அந்தப் பணக்காரர்.

புகையிரத நிலையம் வந்தது, நன்றி சொல்லி இறங்கி விட்டான் ஜெகன்.        

அவனுக்கு கண்ணடித்துக் கை காட்டினாள். அந்த கவர்ச்சிக் கன்னி. அவள் மனதில் என்ன எண்ணமோ?  

புகையிரத நிலையத்தில் எக்கச் சக்கமான கூட்டம்.

பயங்கரவாதி ஒருவன் யாரையோ சுட்டு விட்டு அங்கு ஒளிந்திருக்கிறான். இராணுவ வீரர்கள் அங்கும் இங்கும் அவனைத் தேடி.   துப்பாக்கியுடன் அலைகிறார்கள்.

ஏழை விவசாயி, பணக்காரர், அவர்கள் இருவரையும் சிப்பாய்தான் பாதுகாக்க வேண்டும்!

விவசாயி, பணக்காரன், சிப்பாய், தீவிரவாதி, இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து இளைப்பாறுகிறான், தன்னைப் போல வேலை இல்லாமல் ஊர் சுற்றுபவன்.

சிந்திக்கிறான் ஜெகன்!

இவர்கள் ஐவரும் வாழ்வதற்கு, வருமான வரி கட்டும் பொதுமக்கள் , தமது வேலைக்குப் போக முடியாமால், தெருவில் வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார்கள்!

பல மணி நேரம் சென்று விட்டது.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.