(Reading time: 8 - 16 minutes)

ஜெகனைக் கண்டதும் "நான் இனி என்ன செய்வேன், நீ என்னை விட்டு போய்விட்டாய்"  என்று சொல்லி கதறி அழுகிறாள், அவன் மனைவி.

அவளுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணம், ஆனால், கையில் காசில்லை.

தன கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் அவளுக்கு கொடுத்துவிட்டு சவத்தின் பின்னால் செல்கிறான், மயானத்துக்கு, கடைசி மரியாதை செலுத்த!

அந்த ஊர் எம் பீ யம் ஊர்வலத்தில் செல்கிறான்! அவனது மகன் ஒட்டிய கார்தான் அந்த ஆட்டோ ரிக்ஷாவை மோதியது!

விவசாயி, பணக்காரன்,சிப்பாய்,தீவிரவாதி, ஊர் சுற்றுபவன், வரி கட்டுபவன்,,வங்கி அதிகாரி, குடிப்பவன், வக்கீல், போலீஸ்காரன், ஆட்டோகாரன், டாக்டர் இவர்கள் எல்லோரையும் ஏமாற்றி வாழ்ந்துவிடும் அரசியல்வாதி.

எல்லோரும் கடைசியில் எரித்து சாம்பலாவது அந்த பிணம் எரிப்பவனால்தான்!.

ஜெகன் ஊருக்கு வந்து விட்டான். வீட்டை நோக்கி நடக்கிறான்.

வழியில் விவசாயி தனது வேலையில் மூழ்கி இருக்கிறான்.

ஜெகன், மகளைப் பார்த்து சிரிக்கிறான்!  அவர்கள் பேசுகிறார்கள்! அவள் பெயர் மல்லிகா.

ஜெகன் சிந்திக்கிறான்!

கவனிப்பாரற்று இருந்த, தனது குடும்பக் காணிகளில், ஜெகனும் அந்த விவசாயியும் சோயா, கின்வா போன்ற தானியங்களை பயிரிட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

விவசாயி மண்வெட்டியால் நிலம் கொத்துவதில்லை இப்போது. உளவியந்திரத்தால் உழுகிறான்.

அந்த வங்கி அதிகாரி, விவசாயத்துக்கு வங்கியில் கடன் கொடுக்கிறான்.

இம்முறை அவன் லஞ்சம் வாங்கவில்லை! 

பலர் அங்கு வேலை செய்கிறார்கள்!. அது ஒரு கூட்டுப் பண்ணை!

இலாபத்தைச் சரி சமமாகப்  பிரிக்கிறார்கள்! 

தனது  விவசாயப்  படிப்பை பயனுள்ளதாக்குகிறான் ஜெகன்!  

விவசாயத்தை விட நல்லதொரு தொழில் இல்லை!

நேர்மையான விவசாயம், நேர்மையற்ற சமுதாயம்.

அது ஜெகன் வெளி உலகில் படித்த பாடம்!

மல்லிகா இப்போ ஜெகனின் மனைவி, வீட்டில் அம்மாவுக்கு உதவி.

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.