(Reading time: 3 - 6 minutes)

நீ அழித்த காதல்.. - ப்ரியா

Lost Love

ப்படியோ தொடங்கி விட்ட

நமக்கானதொரு நாள் அது..!!

நண்பர் ஆன நம்மை

அன்பர்கள் ஆகி அழகு பார்த்தது..!!

 

நான் கோபம் கொண்டு எகிறி நிற்க

நீ உயரம் குறைத்து பின் வாங்கினாய்..

உன் அன்பு அடங்குவதை கண்டு

என் அழகு அதிகம் ஆகியது..

 

நீ பின் வாங்கி தயங்கி நிற்க

நான் முன் வரவும் விருப்பமில்லை

நீ முன் வருவாய் அறிந்திருந்தேன்

பிடித்தமில்லை கச்சிதமாய் நடித்தேன்

பிடிவாதக்காரி என் பிம்பமாய் நீ இருந்தாய்

 

தடைகள் தளைகள் அகற்றி

ஆண்மையின் அடையாளங்கள் மறந்து

மென்மையாய் உன் மனதை சொன்னாய்..

மெய்யாகவே மெழுகென உருகியிருந்தேன்

இருந்தாலும் மெத்தனம் தான் வேறென்ன..

 

இரு நான்கு திங்கள் உன்னை அலைக்கழித்து

அன்பு உண்மை தான உறுதி செய்துகொண்டேன்

இங்கிருந்தால் ஆரத்தழுவி அகமெல்லாம் மலர

அருமையாக காதலை சொல்லியிருப்பேன்

தொலைபேசியில் குறை கூறி கொண்டேன்..

 

என் புகைப்படத்தை கையில் வைத்தபடி

புன்சிரிப்பை உதிர்த்திருப்பாய் தெரியும்..

உன் முக அடையாளம் எதுவும் தெரியாமல்

குரலில் இனிமை கண்டு குணத்தில் விழுந்திருந்தேன்..

 

அதிகம் காக்க வைக்காமல் அழைப்புக்கு

ஓடி வந்தாய் கண்ட மறுகணமே

பிரளயம் எனக்குள்..!!

எனக்கானவன் நீ தானா??!!

ஏனிந்த கேள்வி பிறந்தது அன்று?

இன்றறிவேன் நான் நன்று..!!

அலைபாயும் மனதை மாற்றி

ஒருவழியாய் என்னை தேற்றி..

உருவேற்றி விட்டேன் உன் பெயரை

எவராலும் அழிக்க முடியாதென மமதை..

 

தோழியரின் கேலிகளுக்கு நடுவில்

கிசுகிசுப்பாய்  அலைபேசி பேச்சுகள்

நொடியும் பிரிந்திருக்க மனமில்லாமல்

தொடர்ந்த திருமண கனவுகள்..

வயது தடுக்க வாழ்வு நோக்கி நாம்..

உன்னை மட்டுமே எண்ணி நான்..

 

என் அகம் புறம் அண்டம் எல்லாம்

உன் அறிவை தாண்டி இருக்கவில்லை..

என்னுடனான உன் உறவை தவிர

வேற எதையும் நான் அறிய முற்படவில்லை..

 

உன் நடவடிக்கைகளின் மாற்றங்கள்

என் கோபத்தின் தாக்கங்கள்

உன் தலைகுனிவு பொறுக்காமல்

என் விழி தாண்டிய கண்ணீர் அருவிகள்..

இருந்தாலும் இணைந்திருந்தோம்

இறுக்கி உன்னை பிடித்திருந்தேன்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.