(Reading time: 3 - 6 minutes)

கதை - ஆர்த்தி

டியே மாலா! அங்க என்ன பன்ற அப்டின்னு அவங்க அம்மா கூப்ட கூப்ட கேக்காம உட்காந்து எதையோ முக்கியமா பாத்திட்டிருந்தா.அப்படி என்னதான் பன்றான்னு அவளோட அம்மா உள்ள எட்டிப் பாக்க இவ மனுசுக்குள்ள இந்த அம்மாக்கு வேற வேலையே கிடையாது எப்ப பாரு என்ன படிக்க விடறதே இல்லன்னு புலம்ப அதுக்குள்ள கிட்ட வந்துட்ட அவங்க அம்மா அங்க நின்னு காத்து கத்தா கத்தறேன் .நீ இங்க உக்காந்து  என்னமோ ஐ.ஏ.எஸ்கு படிக்கிறாப்ல இந்த கதையையா படிச்சிட்டு இருக்கனு கோபமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

ஆமாங்க நம்ம மாலா மும்மரமா ஆன்லைன்ல தாங்க கதை படிச்சிட்டு இருந்தா.அவங்க அம்மா ஏதோ சொல்லி திட்ட ஆரம்பிக்க அதுக்குள்ள நாம அவளுக்கும் கதை படிக்கிறதுக்கும் உள்ள relationa பாக்லாம்.

மாலா அந்த வீட்டோட கடைக் குட்டி.அவளுக்கு முன்னாடி அவங்க அக்கா ஷாலினி இருக்காங்க.இவங்க வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் அவங்க அம்மாவும் அப்பாவும்.ஷாலினி ரொம்ப ஜாலி டைப்.அதனலா என்னதான் வீட்ல திட்டு வாங்கினாலும் வெளில எல்லார்டையும் நல்லா பழகிடுவா.நம்ம மாலா கொஞ்சம் shy டைப்.உலகத்திலையே அவ மனசு விட்டு பேசுற ஒரே ஆள்னா அது ஷாலினி தாங்க.மத்தவங்கள்ட சரியா பேசலனாலும் அவளும் அவங்க அக்காவும் அடிக்ற லூ’ட்டியும் அதுக்காக அவங்க அம்மாட்ட வாங்கற திட்டும் சொல்லி மாலாது.இப்டித்தான் அவங்க வாழ்கை சந்தோசமா போய்ட்டு இருந்துது.எல்லாமே மாலாவோட எதிரி உள்ள வர வரைக்கும் தான்.அதாங்க நம்ம ஷாலினிக்கு கல்யாணம் fix பண்ணிட்டாங்க அவங்க அம்மா அப்பா .இவளுக்கு அவங்க அக்கா கல்யாணத்த பத்தி சந்தோசம் தான் ஆனா அக்கா கல்யாணம்  ஆனதும் தன்ன விட்டு ஆஸ்திரேலியாக்கு போய்டுவாங்களேன் ஒரே சோகம்.அதனால கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தா.அவங்க நினைச்சபடி அவங்க அக்கா கல்யாணம் நல்லபடியா முடிந்தது.ஷாலினி மாலாக்கு நிறைய அட்வைஸ் பண்ணிட்டு இப்பயாச்சும் எல்லார்டையும் நல்லா பேசுன்னு சொல்லிட்டு மாமாவோட கிளம்பிட்டாங்க.

அப்புறம் தான் மாலைக்கு சோதனை காலமே.அவளுக்கு கல்லூரிலயும் friends அவ்ளவா இல்ல.அதுனால ரொம்பவே தனிமையா பீல் பண்ண ஆரம்பிச்சா.ஒரு கட்டத்துல பைத்தியம் புடிக்ற மாதிரி இருந்துதாம்.அப்ப அதுலேந்து தப்பிக்கிறதுக்கு அவ தேர்ந்தெடுத்த வழிதான் ஆன்லைன்ல கதை படிகர்து.முதல்ல நேரம் போரதுக்காக படிக்க ஆரம்பிச்சது போக விரும்பி படிக்க ஆரம்பிச்சா.ஒரு ஒரு கதையில வர கருத்து,வாழ்க்கையோட போகற மாதிரியான கதைகளம் அவள ரொம்ப ஈர்த்தது.அவளோட தனிமை உணர்வு எங்க போச்சுனே தெரில.அவள ஒரு ஒரு கதை படிக்கும்போதும் அந்த கதையோடவே travel பண்ண ஆரம்பிச்சா.இப்டிதாங்க அவ வாழ்கையில கதை களத்துக்கு வந்துச்சு.

அவங்க அம்மா என்னடி நா திட்டிட்டு இருக்கேன்.நீ ஆனு அதையே பாத்துட்டு இருக்கனாங்க.அப்பதான் நிகழ் காலத்துக்கு வந்த மாலா அம்மா ப்ளீஸ்மா கடைசி episodeமா இப்ப முடிச்சிட்டு வரேன்மான்னு சொன்னா.உனக்கு வேற வேலையே இல்லடி.இரு அப்பா வரட்டும் அந்த பொட்டிய போட்டு உடைக்க சொல்றேன்னு கோவமா போய்ட்டாங்க.அம்மா அது பெட்டி இல்லமா laptopனு சொல்ல உனக்கு ரொம்ப கொழுப்பு ஏறி போச்சுன்னு கத்திட்டே போய்ட்டாங்க.மாலா எப்போதும் போல இதெல்லாம் எனக்கு தூசின்னு தட்டி விட்டுட்டு அவளோட உலகமான கதைகளத்துக்கு போய்ட்டா!!

இது என்னோட முதல் கதை..கதைகள் எப்போதும் சிலருக்கு கருத்தையும்,சிலருக்கு பொழுதுபோக்காகவும் சிலருக்கு தங்களோட தனிமைய தள்ளி விடறதுக்கும் பயன்படுது.அப்படி எனக்கு அறிமுகம் ஆனது தான் இந்த chillzee website.என்னோட தனிமைய போக்கி என்னாலயும் கதை எழுத முடியும்னு நம்பிக்க கொடுத்தது இந்த website தான். என்னோட இந்த கதை படிச்சிட்டு நிறை குறைகளை சொல்லுங்க

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.