(Reading time: 38 - 76 minutes)

அமாவாசையில் ஒரு முழுமதி - Deivaa Adaikkappan

 Moon Heart

காலை கதிரவன் தன் சிவந்த விழிகளால் இரவின் இருளை விரட்டினான் , குருவிகளும் காக்கைகளும் தனது இரைதேட கிளம்பின கூட்டை விட்டு, இவை அனைத்திற்கும் போட்டியாய் ஒலித்தது மீனாவின் பூஜை அறையில் சுப்பிரபாதம் . அப்பொழுது தனது காலை கடன்களை முடித்துக்கொண்டு வந்த சுந்தரேசனுக்கு காபியை கொடுத்தார் மீனா என்று அழைக்கப்படும் மீனாக்ஷி .

"மீனா மது முழிச்சிட்டாளா" என்று வினவியபடி தனது காபியை  அருந்தினார்

"இன்னும் தெரியலீங்க நான் பொய் பாக்கறேன் " என்று கூறியபடி மதுவின் அறை நோக்கி சென்றார்.

மதுவின் அறைக்குள் நுழைந்ததும் மகளை பார்த்து பிரமித்து நின்றாள் தாய் . நிலவு போன்ற முகம், அனைவரையும் வசீகரிக்கும் அழகு, இது எப்பொழுதும் உள்ளது அவளிடம் அனால் தன் மகளின் குழந்தை தனமும்,சிரிக்கும் கண்களையும் 8 ஆண்டுகளை காணாத தாயின் உள்ளம் தன் இஷ்ட தெய்வம் முருகனை வேண்டியது " முருகா என் மகளோட அந்த குணங்களை திருப்பி கொடுத்து அவளை பழையபடி எங்கள் மதுவை திருப்பி தா என்று

 சேரி சேரி இனி ஹீரோயின் INTRODUCTION கு வருவோம், ஹ்ம்ம் மது என்கிற மிஸ் மதுமிதா சுந்தரேசன் அட அப்டி தாங்க நம்ம ஹீரோயின கூப்பிடனும் இல்லனா அவங்களுக்கு கோவம் வந்திரும்.

மது ஒரு GOVERNMENT வங்கியில் மேனேஜர் அ இருக்க அதுவும் சொந்த ஊர்லயே போஸ்டிங்.

வாங்க அவளை பொய் பார்க்கலாம் .

எப்பவும் போல ஒரு வெளிர் நிறமும் இல்லாமல் பளீர் நிறமும் இல்லாமல் அவளுக்கு பாந்தமான நிறத்தில் ஒரு காட்டன் சல்வார் போட்டு ,உயர கட்டிய போனி டைலும்,நெத்தியில் சிறிய போட்டுடானும் மது தயார் ஆகிக்கொண்டிருந்தாள்.

"மது இன்னைக்கு திருச்சி ஏர்போர்ட்க்கு எப்போ போரம்மா".

"அம்மா இப்போ அதுக்கு தான் கிளம்புறேன் வினு,விஜி லாம் வரங்கள்ள பிக் UP பண்ண போறேன் மா "

"நீ மறந்துட்டியோன்னு நெனச்சேன் டி அதான் ஞாபகப்படுத்த அப்பா போக சொன்னாங்க . நீ ரெடி ஆகிடியா அப்பா அப்பவே ரெடி."

"அப்பா எதுக்கு மா அவங்க ஆபீஸ் போகட்டும் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குனு சொல்லிட்டு இருந்தாங்கல்ல உங்கிட்ட"

"இல்லடி உனக்கு துணையா ஒரு ஆளு வேண்டாமா"

மகளின் முறைப்படி பாத்தது தான் தாமதம் "ஏங்க மது என்ன சின்ன குழந்தையா அவ ஒரு ப்ராஞ்சயே கட்டி காப்பாத்துறா அதெல்லாம் தனியா போயிடு வந்திருவா"

"சரி மீனா எனக்கு டிபன் எடுத்து வை நான் சாப்பிட்டு கிளம்புறேன் மீட்டிங் முடிஞ்சதும் லஞ்ச் கு வீட்டுக்கு வந்திடுறேன் "

"போதுமாடி மது உங்க அப்பாகிட்ட பேசறதை நிறுத்தி 8 வருசமாச்சு டி அந்த மனுஷன் பாவம்"

"அம்மா அந்த பேச்ச இப்போ பேசாத இப்போ நான் ஒரு வருஷம்  கழிச்சு என் செல்ல குட்டி வினு வ பாக்க போறேன் சோ please don't spoil my mood" அப்படினு சொல்லிட்டு அம்மாவையும் பாக்காம தனது கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள் .

கிளம்பிய மகளை பார்த்த மீனாவின் கண்களில் நீர் அரும்பியது "மீனா மதுக்கு புடிக்காதுன்னு தெரியும்ல அப்புறம் ஏன் அழுகுற "

"விசாரிக்காம நாம பண்ண தப்புக்கு பாவம் அவ துறவி வாழ்க வாழுற நம்மளால ஒண்ணுமே பண்ண முடில 8 வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணு இருந்தானா அந்த இடம் இப்பிடியா  அமைதியா இருக்கும் திருவிழா கோலமாவுல இருக்கும் ஆனா இப்போ பாருங்க ஒரு சிரிப்பை அவ முகத்துல பாக்குறது கூட customer அவள் கிட்ட பேசும் போது தான் அதுவும் அவ மனசால சிரிச்சு நான் பாத்து 8 வருஷத்துக்கு மேல ஆச்சுங்க"

"மீனா எல்லா கஷ்டம்ங்கிற ஆரம்பதுக்கும் சந்தோஷம் அப்படிங்கிற முடிவு கண்டிப்பா இருக்கு காலம் எந்த புண்ணையும் ஆத்திரும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு சேரி நான் ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன் பாத்துக்கோ அலுக்காத நம்ம அரைடிக்கெட்டுக்கு புடிக்காது"

திருச்சி ஏர்போர்ட் .......

ஹே மது ...........

ஹே வினு எப்படி இருக்கீங்க???

நல்லாயிருக்கேன் மது நீ எப்டி இருக்க

நல்ல இருக்கேன் செல்ல குட்டி

ஹே ஏன் டி அவனை பாத்த எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டியே

அப்பொழுது மதுவின் கைபேசி பேங்க் என்று காட்டியது....

"ஒரு நிமிஷம் விஜி கால் அட்டென்ட் பண்ணிட்டு வந்து உனக்கு பதில் சொல்றேன் அதுக்குள்ள நீ luggage அ எடுத்துட்டு வா நான் வினுவை ஏன் கூட கூட்டிட்டு போறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.