(Reading time: 38 - 76 minutes)

சென்றவேளை பார்த்த விஜி "இவ இன்னும் பழசை மறக்காமலே தனக்குள்ளேயே மருகுறாளே இவளுக்கு விக்கி தான் கரெக்ட் அதான் இந்த தடவ அவர் வர்ராருங்கிறதயே சொல்லல இல்லைனா  மேடம் ட்ரைனிங் மீட்டிங்ன்னு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி தப்பிச்சிருவா " அப்டினு யோசிச்சுகிட்டே luggage எல்லாம் எடுத்துக்கொண்டு exit கேட் ஐ அடைந்தாள் விஜி .

அப்பொழுது ஏர்போர்ட்டில் உள்ள உயர் அதிகாரி மதுவிடம் பேசிக்கொண்டிருப்பதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் விஜி

"ஹே விஜி உன் தங்கையை பார்த்ததும் உன் சரி பாதியை மறந்துட்டியே " என்று சோக கீதம் பாடுவதுபோல் நடித்தான் விக்கி என்னும் விக்ரமன் விஜியின் கணவன்.

"cha பேசாம இருங்க அந்த குட்டி பிசாசா இதுனு இருக்க அளவுக்கு எப்புடி மாறிருக்கானு பாருங்க ரொம்ப stiff அ இருக்காங்க உடைஞ்சிருவாளோனு பயமா இருக்கு"

"ச்சீ  ச்சீ அவ அவளோட போஸ்டுக்கு தகுந்த மாறி நடந்துக்குறா அவ்ளோ தான் ரொம்ப யோசிக்காத அவ போக்கிலேயே விட்டு புடிப்போம்"

"ஹ்ம்ம் வாங்க போலாம்"

எதிர்பார்க்காமல் மதுவின் விழிகளை ஒரு ஆணின் கரம் மூடியது.....

"who the hell.......... என்று அவள் திட்ட வார்த்தைகளை தேடும் போது "ஹே மாடு நான் விக்கி தான் தீட்டாத என்ற விக்ரமன் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று 

விக்ரமோ அவள் மடை திறந்த வெள்ளமாய் அவன் வருகைக்கு ஆர்பரிப்பாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவளோ "welcome to India" என்று கூறிவிட்டு விஜியை ;பார்த்து "வினுவை புடிச்சிக்கோ நான் காரை எடுத்துக்கொண்டு வரேன் " அப்டினு சொல்லிவிட்டு சென்று விட்டாள்

விக்ரம் என்ன இது என்று பார்க்க பிறகு சொல்றேன் என்று அவளும் கண்களால் பதில் அழித்தாள்.

நடப்பது இது எதிலும் கவனம் இல்லாமல் தனது மது வாங்கி கொடுத்த சாக்லேட்டில் மனம் ஒன்றி இருந்தான் வினு.

அப்பொழுது விக்ரம் "ஏண்டி விஜய மது எனக்கு என்ன உறவு???"

"சாரிங்க நான் உங்கள்ட எல்லா விஷயத்தையும் சொல்லாதது தப்பு தான் ஆனா அம்மா அப்பா என்டயே எல்லாத்தையும் நாங்க போன வருஷம் இங்க வந்தப்போ தான் சொன்னாங்க அவளும் உங்களுக்கு தெரிய கூடாதுனு நெனச்ச ஏன்னா உங்களுக்கு அவனை ரொம்ப புடிக்கும் அடனழைனு சொன்ன"

"சேரி விடு ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ அவ உனக்கு தங்கச்சி மட்டும் தான் ஆனா எனக்கு அவ ஒரு பொண்ணு மாறி டீ, இதுக்கு ஒரு தீர்வு காணாம நாம US போறது"

"ஹ்ம்ம் இப்போ சொல்லு அவ அவளோட மாமியார் வீட்டோட டச்ல இருக்காளா"

"அதெல்லாம் ரொம்ப கிளோஸ் அப்பா ஏதோ ஆண்ட uncle ட கோவமா பேசிட்டாருனு தான் மேடம் அப்பா கிட்ட பேசுறது இல்ல"

"சேரி இது போதுமே அந்த மாதவனை இந்த மாடு கிட்ட மாட்டிவிட"

ஏன்ன பண்ண போற விக்கி இருவரும் சிறிதுநேரம் விவாதித்து ஒரு முடிவு எடுத்தனர் அதை செயல்படுத்தவும் முடிவு செய்துவிட்டு மதுவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மாலை வீட்டுக்குள் நுழைந்த மதுவை வினு விடவே இல்லை அவளுடனே சுற்றினான் . மாலை சிற்றுண்டியை முடித்து விட்டு வினுவுடன் வெளியில் செல்ல தயாரான மதுவை பார்த்த விக்ரம் "எங்க கெளம்பிட்டீங்க சித்தியும் மகனும் " என்று வினவினான்.

பேங்க் கோச்சிங் கிளாஸ்ல பார்ட் டைம் tutor வேல மாமா அதுக்கு தான் கெளம்புனேன் ஆனா இவனும் வரேன்னு ஒரே சேட்டை அதான் கூட்டிட்டு போறேன்.

ஏன் மது பேங்க் சம்பளம் பத்தலயா உனக்கு அதான் வீடு கார் வண்டினு வாங்கி full செட்டில் ஆய்ட்டேல்ல அப்புறம் ஏன் இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுத்து ஒர்க் இழுத்து போட்டுக்குற. பேங்க் முடிச்சு வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.

ஹ்ம்ம் நீங்க நெனைக்குற மாறி இல்ல மாமா பேங்க் வேல என் திறமையை கூட்டிக்குறதுக்கு ஆனா இது என்னோட ஆத்ம திருப்திக்கு அப்பறோம் சும்மா இருந்தாநான் மறக்கணும்னு நெனைக்கிறதெல்லாம் ஞாபகம் வருது so i want to keep myself occupied என்று கூறி விட்டு வினுவை அழைத்துக்கொண்டு scooty  எடுக்க  சென்ற மதுவிடம் "ஹே பத்ரம் டீ வாலு அவன் பாத்துக்கோ"

சேரி விஜி நீ பயப்படாத அவன் நான் சொன்னா கேட்டுப்பான்

"அது என்னவோ உண்மை தான் நீ சொன்னா போட்டி பாம்பா அடங்கிருது அந்த குட்டி"

அம்மா நான் மது மச சொன்னா கேட்டுப்பேன் ஏன்னா அவ நான் சொல்றதெல்லாம் கேப்பா

சேரி டா பெரியமனுஷா பாத்து பத்திரமா போயிடு வாங்க

பை மா.... பை விஜி ..... கிளம்பிவிட்டிருந்தனர் இருவரும்.

விஜியும் விக்ரமும்  தாங்கள் இருவரும் மதியம் எடுத்த முடிவை பெற்றோரிடம் கூறி அபிப்ராயம் கேட்ட போது அந்த முயற்சி சரி வருமா என பயந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி தெண்பூட்டினர் இருவரும்.

இரவு உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தனர்  அப்பொழுது விக்ரம் "மது எனக்கு உன்னோட லேப்டாப் கொஞ்சம் தரியா கொஞ்சம் ஒர்க் இருக்கு "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.