(Reading time: 38 - 76 minutes)

றுபடியும் பளார் என்னும் சத்தம் கேட்டது விக்ரமும் விஜியும் மாதவனை பாற்கோ அவனோ வேகமாய் மதுவின் பக்கம் சென்று அவளை தாங்கினான். மூச்சு வாங்க மீனா கதறினாள் ஏன் டே இப்டி நீயும் கஷ்ட பட்டு அந்த பிள்ளையையும் கஷ்ட படுத்தின.அவங்க அம்மா அப்பள இருந்து எல்லாரும் அவன் தான் தப்பானவன்னு அவனை தானா திட்டி தீர்த்தோம் ஆனா அவன் உன் மேல வச்சிருக்க பாசத்தை இன்னும் நீ புரிஞ்சுக்கலைனா நீ ஜடம் டீ. நீ ஏன் பொண்ணாவே இருக்க முடியாது அவளுக்கு கொழந்தை மனசு அவ இப்டி இன்னொருத்தரை கஷ்டப்படுத்த மட்ட .

அம்மா அந்த மது செத்து பொய் 8 வருஷம் ஆச்சு மா அதுவும் கல்யாணத்து அன்னைக்கே . என்னமா ஷாக் ஆகுற தாலி கட்டி முடிஞ்சோடையே எனக்கு தெரிஞ்சு போச்சு இவர்க்கு என்ன புடிக்கலைனு அப்ரோமேலும் உனக்காக தான் மா நான் வாழணும்னு நெனச்சது இன்னும் வாழ்ந்துட்டு இருக்கதும் . எனக்கு இந்த பேங்க் வேலை பேரு புகழ் இது எல்லாம் இவனுக்கு முன்னாடி நான் வாழ்ந்து ஜெயிச்சுட்டேன்னு காட்ட தான் ஆனா எப்போ நீ நான் உன் பொண்ணு இல்லைனு சொல்லிட்டியோ அப்போவே நான் இனி வாழுறதுல அர்த்தம் இல்லை . வேண்டாம் மா நான் போறேன் என்று அழுதவாறே கூறி விட்டு வெளியே செல்ல எத்தனித்தாள் .

விக்ரமும் விஜியும் "மது ப்ளீஸ் சொல்லறதை கேளு பேசி தீர்க்கலாம் " இல்ல விஜி அம்மாவுக்கு வேணும்னா சொல்லலாம் நா அவங்க பொண்ணு இல்லைனு ஆனா எனக்கு அவங்க தான் எல்லாம் கடைசில அவனுக்காக என்ன வேண்டாம் என்று சொல்லிட்டாங்க என்று அழுதாள் ."

மீனா அப்பொழுது "ஆமா மது எனக்கு இந்த உன்னோட ரூபம் புடிக்கல மா மாத்திக்கோ உன்ன இப்போ தான் மாதவன் உன் மேல எவ்ளோ ஆசை வச்சிருக்கானு தெரிஞ்சிருச்சில்ல".

மது ..."அப்பா சாரி பா நான் உங்க கிட்ட பேசாததுக்கு காரணம் உங்க மேல உள்ள கோவம் இல்ல பா ...... எங்க என்ன பாத்தாலோ இல்ல உங்க கிட்ட பேசுனாலோ நீங்க உடனே என்னமோ தப்பு பண்ண மாறி கில்ட்டியா  பீல்  பண்ண ஆரம்பிச்சிருவீங்க அட பார்க்க முடியாம தான் நான் அப்புடி பண்ணேன். தெரியும் டா உன்ன பத்தி என் டா இவ்ளோ கஷ்டம் பட்ட கொஞ்சம் அவன் என்ன சொல்ல வர்றாங்கறத அன்னைக்கே கேட்டிருந்த இவ்ளோ கஷ்டம் எல்லாருக்கும் இல்லைல டா.

மது அப்பா சொன்ன நீ கேப்பியா மாட்டியா.

கேப்பேன் பா ...........

அப்பாவுக்காக டா மாதவன் கோடா பேசு டா மனசு விட்டு அடுக்கு அப்புறம் முடிவு எடு டா. ரெண்டு பேரும் அவங்க அவங்க கோவத்தை விட்டு பேசுங்க இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் அடுக்கு மேல கிடையாது.

சேரி போங்க ரெண்டு பேரும் மாதவன் இது தான் கடைசி தடவ இன்னொருக்க என் மகளை அடிச்ச நான் சும்மா இருக்க மாட்டேன் .

சாரி மாமா நா எப்பவுமே உங்க பொண்ண அடிக்க மாட்டேன் . ஆனா...... என் பொண்டாட்டி என்ன பேச விடாட்டி சும்மா தட்டி கொடுப்பேன்....

படவா ஆதி படுவ ....... புன்னகைத்து கொண்டான் மாதவன் அனால் மதுவோ தன தாயை கட்டி பிடித்து கொண்டு அம்மா நா உன் பொண்ணு இல்லையாம்மா......

இல்ல டீ அப்போ எடோ கோவத்துல சொல்லிட்டேன் ஆனா எங்களோட முடியது இல்ல டீ உன் வாழ்க்கை அது தழைத்து வளரனும்.

விஜி அப்பொழுது "சேரி மது நீ மாடிக்கு போ டப்ளேட்ஸ் எடுத்துக்கணும்ல....."

 சரி அக்கா நான் போறேன் வினு என் கூட இருக்கட்டுமே இன்னைக்கு ஒரு நாள் ப்ளீஸ்..........

விக்ரம் "மது நீ பாஸ் பண்ணனும் இன்னைக்கு ஒரு நாள் நீ மாதவன் கோடா பேசி பாரு எப்போ பாரு ஒன்னு அத்தை பின்னாடி இல்ல வினு பின்னாடி ஒழிய பாக்காத உன் வழக்கை உன் கையில் நீ எந்த முடிவு எடுத்தாலும் அடுக்கு எங்க சப்போர்ட்ட இருக்கும் உனக்கு. எங்களுக்கும் உன் மேல நம்பிக்கை இருக்கு நீ ஏதும் தப்ப முடிவு எடுக்க மாட்டேன்னு."

இருவரும் அவள் அறைக்கு வந்தனர் அவளோ ஏதும் பேசாமல் அவள் அறையை ஒட்டி இருந்த பலகணிக்கு சென்று வானத்தை பார்த்து கொண்டிருந்தாள்.அன்று அம்மாவாசை மதுவிற்கு நிர்மலமாய் கும் இருட்டை இருக்கும் அந்த வானத்தை பார்த்தல் மனது அமைதி அடையும். அன்று முழுவதும் அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி , மேலும் நிறைய புரிய வந்தது பல நாள் புரியாதது எல்லாம்.அந்த இருளை வெறிக்க வெறிக்க பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது.அப்பொழுது அவளருகில் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கு மாதவன் நின்றிருந்தான் . அவள் பார்ப்பதை பார்த்த உடன் "அம்மாவாசை ஒரு முழுமதி இந்த பலகணியில் என்ன செய்கிறது" என்று கேட்டு புன்னகைத்தான் . அந்த புன்னகை அவளுக்கு பல உண்மையை உணர்த்தியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.