(Reading time: 38 - 76 minutes)

மிஸ் மதுமிதா சுந்தரேசன் போகலாமா  என்று கேட்டு விட்டு அவனது காரை எடுக்க சென்றான் நான் என் காரில் காரில் தான் வருவேன் என்று மது சொன்னாள். சிறுபிள்ளையின் சிணுங்கலாய் ரசித்துவிட்டு அவள் காரை அவன் ஒட்டிக்கொண்டு அவள் சொன்ன இடத்திற்கு அழைத்துச்சென்றான் .அது ஒரு சிவன் கோவில் மலையை குடைந்து உருவாக்கியது அதற்கு மேலே ஒரு பெரிய மரத்தின் கிளைகள் படர்ந்து ஒரு பெரிய நிழல் மேடையை உருவாக்கி இருக்கும் ஆண்ட இடம் மதுவிற்கு மிகவும் பிடித்த இடம் . அங்கு சென்று அவள் அமர்ந்தாள் அவளுக்கு அருகில் அவனும் அமர்ந்தான். சில நிமிடங்கள் இருவரும் பேசவில்லை பிறகு மது தான் Mr மாதவன் நீங்க இங்க இப்போ எதுக்கு வந்திருக்கீங்க என் வந்தீங்க எப்போ கிளம்புவீங்க.

மதி நான்...."ப்ளீஸ் Mr மாதவன் என்னோட ரொம்ப நெருங்கினவங்க மட்டும் அழைக்கும் பேர் அது so please better don't use that name"

என்ன கொஞ்சம் பேச விடுறியா நீ என்ன தான் நெனச்சுட்டு இருக்க நான் பொறுமையா போராடுக்கும் ஒரு லிமிட் இருக்கு மொதல்ல நான் பேசுறத கேளு அப்புறம் நீ பேசு நான் 5th படிச்சப்போ இருந்து ஒரு பொண்ண லவ் பண்றேன் அவ யாரு என்னங்கிறதே தெரியாமல் என்ன அப்டி பாக்குற அது தான் உண்மை ஒரு annual  லீவு அப்போ அவ பாமிலியோட எங்க வீட்டுக்கு வந்தா என் கோடா விளையாட ஆள் இல்லைனா உடனே அவங்க அப்பா அம்மா அவளை எங்க வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க அப்பறோம் லீவு முடிஞ்சோன அவ வீட்டுக்கு போய்ட்டா என்னையும் போர்டிங் ஸ்கூல் அனுப்பிட்டாங்க .

கொஞ்ச நாள் கழிச்சு அவ படிப்பு திறமை பத்தி எல்லாம் அம்மா பேச பேச அவளை நெஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் .

எனக்கு அவ குழந்தை முகம் மட்டும் தான் ஞாபகம் இருந்துச்சு அவ அம்மா அப்பா முகம் கூட மறந்து போச்சு சோ நம்ம கல்யாணம் பத்தி அப்பா சொன்ன போது எனக்கு விருப்பம் இல்லை ஆனா உன் கேரக்டர் நீ எனக்காக பண்ண ஒவ்வொரு விஷயமும் என்ன உன் பக்கம் ஈர்க்க ஆரம்பிச்சுது .

நீ யார்  கூட பேசுனாலோ இல்ல ஜோவியலா பழகினாலோ எனக்கு கோவம் வரும் அதனால் உன் கூட சண்டை போடுவேன் அன்னைக்கு ஊசி போடும் போது நீ விக்ரம் கையை புடிச்ச போதும் எனக்கு கோவம் வந்துச்சு அட பாத்துட்டு விக்ரம் என்ட கேட்டார் நான் சொன்ன போது இது கோபம் இல்ல டா இதுக்கு பேரு possesiveness னு சொன்னார் அப்போ தான் எனக்கே இது புரிஞ்சிது .

ஒன் மினிட் Mr மாதவன் நீங்க இன்னும் அந்த பொண்ணு யாருன்னு சொல்லல

அடி பிச்சிருவேன் இன்னொரு தடவை  Mr மாதவன் கூப்புட்டினா.அந்த பொண்ணோட போட்டோ எனக்கு 3 வருஷத்துக்கு முன்னாடி உன் cupboard ஓபன் பண்ணும்போது ஒரு ஆல்பம்ல இருந்து கெடச்சுது.

என்ன பாக்குற நிஜம் தான் அது நீ தான் நான் லவ் பண்ண பொண்ணு ஆனா நீ அந்த பொண்ணுன்னு தெரிறதுக்கு முன்னாடியே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதை உன்கிட்ட சொல்ல நான் ஆரம்பிச்ச அன்னைக்கு நான் என்ன சொல்ல வரேன்னே தெரியாம அடி பட்ட பார்வை பாத்த அதை என்னால சகிச்சுக்கவே முடில வெளில போயிடு உனக்கு புடிச்சதா பார்த்து வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா நீ அங்க இருந்து கெளம்பிட்ட.

உண்ட பேசலாம்னு fbல வந்தா மேடம் செத்துருவேன்னு பயம் முறுத்துன . எங்க அம்மாவை எனக்கு எவ்ளோ புடிக்கும்னு உனக்கு தெரியும்ல நீ அவங்க கூட பேச நான் அங்க வர்ரது பேசுறது தடையா இருக்க கூடாதுனு நான் அவங்கள்ட பேசுறதையே விட்டுட்டேன் .

நீயும் என்ன புரிஞ்சுக்கல என் அப்பா அம்மா ரெண்டு பெரும் புரிஞ்சுக்கல பட் விக்ரம் அண்ணா என்ன நல்லா புரிஞ்சிக்கிட்டாரு அவர் கொடுத்த நம்பிக்கைல தான் நான் வந்தேன்.

 I love you madhu i love you  so much நீ இல்லாம வாழ முடியாது நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பொலச்சேன் ஒரே ஒரு நிம்மதி என்னன்னா நீ உங்க அம்மா வீட்ல நிம்மதியா இருக்கன்ற நம்பிக்கைல இருந்தேன் ஆனா நீ இப்போ இருக்க நிலைமையை பாத்ததும் உன்ன விட்டுட்டு போக கூடாதுனு முடிவு பண்ணிட்டேன் .

பேசி முடிச்சாச்சா நான் பேசலாமா இன்னும் நீங்க பேசுனதை நம்புற அளவுக்கு இன்னும் ஏமாளி இல்லை .

சேரி சொல்லு நான் என்ன பன்னா என்னை நம்புவ.

கிளம்பலாம் மாது "ஹே மதி என்ன என்னனு கூப்பிட்ட ......

கிளம்பலாம்னு சொன்னேன்

சேரி வா போலாம் .

அவன் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது அவளுக்கு பின்பு தான்  அவனை கூர்ந்து கவனித்தாள் அவன் 6 அடி உயரம் அவளை ஈர்த்தது அவனது முகம் என்றும் உள்ள தேஜஸுடன் இருந்தது அனால் அவன் கண்கள் எப்பொழுதும் சிரிக்கும் அனால் இப்பொழுது அவன் கண்களில் மின்னல் இல்லை .

அவன் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தெரிந்தது காரை லாவகமாக ஓட்டும் கரங்களுக்குள் தஞ்சம் அடைய அவள் மனது ஏக்கம் கொள்ள ஆரம்பித்தது . அவனை இனிமேல் பார்க்க கூடாது பார்த்தால் மூளையும் மனதும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ஏன் இந்த வேண்டாத வேலை  என்று பார்வையை திருப்பிக்கொண்டாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.