(Reading time: 6 - 12 minutes)

2017 போட்டி சிறுகதை 04 - அதை ஏனோ மறைக்கிறாய்!! - விமலா தேவி

This is entry #04 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - விமலா தேவி

 Brother - Sister

னது ஏனோ பாரமாகவே இருக்கிறது... எல்லாம் தடிமாடு எருமமாாாாடு என் தம்பி சத்யனை நினைத்துதான்.....

ஹாலில் ஒய்யாரமாக அமர்ந்து எதைப் பற்றிய ப்ரஞ்ஞையும் இல்லாமல் அந்த எருமை டி.வி பார்த்துக் கொண்டிருந்தது....

காபியைக் கலக்கி வேணும் என்றே அவன் அருகில் டங் என்ற சத்தத்துடன் வைத்தேன். அதை சட்டை ஏதும் செய்யாமல் ஒரு மடக்கில் குடித்து விட்டு காபி கப்பை வைத்தான்.

“மீனா அக்கா, சினிமா போலாம்  வர்றியா?” ,என்றான் டி.வியில் இருந்து கண் எடுக்காமல்.

“ஒண்ணும் வேணாம், நா எங்கயும் வரல..” என்றேன் கோபமாக.

“ப்ச்ச் ஏன்க்கா? பின்ன எதுக்கு என்ன லீவ் போட்டு சென்னைல இருந்து வர சொன்ன? ப்ளீஸ்க்கா போலாம் வா.... உன் தம்பி ஆசையா கூப்புடறன்ல..”

“ முடியாது போடா, நீ என் தம்பிலாம் இல்ல... என் தம்பின்னா இப்படி பண்ண மாட்டான்..” எனறேன் முகத்தை தூக்கிவைத்தவாறு.

“பாத்தியா, நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்க... ஏன்கா இப்படி பண்ணுற..  இரு இரு உன்ன அம்மாட சொல்லிதாறேன்" என்றவன்  அம்மாவிடம் சென்று,

" அம்மா!... அம்மா!... உங்க பொண்ணு லொள்ளு தாங்க முடிலமா...”

‘எரும, பண்றதெல்லாம் பண்ணிட்டு அம்மாட்ட கம்ப்ளைன்ட் வேற பண்ணுது..’ என நினைத்தவாறே நான் அறைக்குள் சென்று விட்டேன்...

“ஏண்டா ஏன், அவ என்ன பண்ணினா?" என கேட்ட என் அம்மா பின்பு சுதாரித்து,

"ஐய்யோ ஐயோ ஆள விடுப்பா.. இப்போ கம்ப்ளைன்ட் பண்ணுவ, அப்புறம் என் அக்கா மாறி வருமான்னு  சேம் சைட் கோல் அடிப்ப... ஆள விடு தம்பி..” என்றவாறே சென்று விட்டார்கள் .

அறைக்குள் வந்து கட்டிலில் சோர்வுடன் படுத்தேன்... என் அம்மா சொல்வது போல் எங்கள் சண்டைக்கு ஆயுசு ரொம்பவே கம்மி.. எவ்ளோ அடித்துக் கொண்டாலும், என்னால் அவனிடமும் அவனால் என்னிடமும் பேசாமல் இருக்கவே முடியாது...

‘ஜென்மத்துக்கும் என்ட பேசாத’ன்னு  சொல்லிட்டு, ‘தம்பி டி.வி பாக்கலாம் வா’ன்னு சொல்ற ஆள் நான்..

அவனுக்கும் எனக்கும் ஏழு வருட இடைவெளி.. ரொம்ப லேட்டாக பிறந்ததால், நான்தான் அவனுக்கு இரண்டாம் தாய்.. அவனுக்கு ப்ரெண்ட்,  பிலாசபர், கைட், என எல்லாமே நான்தான். அவன் என்னிடம் எதுவுமே மறைத்ததில்லை. நானும் அப்படித்தான்.

நான் +2 படிக்கும் போது , ஓரு பையன் எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்.. நான் பயந்து போய் யாரிடம் சொல்லவென தெரியாமல், 5 படித்துக் கொண்டிருந்த என் தம்பியிடம்தான் சொன்னேன்.. அவனும், ‘அக்கா, கண்டுக்காத தைரியமா இரு, நா இருக்கேன்’னு தைரியம் சொன்ன பெரிய மனுஷன் அவன்..

உலகத்திலேயே யார் ரொம்ப நல்லவன்னு கேட்டா, நான் என் தம்பியதான் சொல்லுவேன்.. சிகரெட், தண்ணி, தப்பான ப்ரெண்ட்ஸ் எதுவுமே கிடையாது.. மிஸ்டர் க்ளீன்னு சொல்லலாம்..  முடிஞ்ச வரை யாரையும் ஹர்ட் பண்ண மாட்டான்.. பண்ணிட்டா உடனே சாரி சொல்லிடுவான்.

எனக்கு திருமணம் ஆன பின் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அவனும் , அவன் ஆபீஸ் வேலை, அது இது என பிஸிதான்.. ஆனாலும் கூட வருடம் ஒருமுறை லீவ் போட்டு  அம்மா வீட்டுக்கு  வந்து விடுவான்.. நானும் வந்து விடுவேன்..  ஷாப்பிங், சினிமா, அரட்டைன்னு நாங்க  செம்ம ஜாலியா இருப்போம்.. பத்து நாள் வந்து இருந்தால், பத்து நாளும் பத்து நிமிடங்கள் போல ஓடி போய்விடும்.. அப்படிதான் இப்பவும் அவன் லீவ் போட்டு வந்துள்ளான்.. ஆனால் ஜாலியாக போக வேண்டிய நிமிஷத்தை கடுப்பாக போக வைத்துக் கொண்டிருக்கிறான்..

பிரச்சனை இதுதான், அவனும் நானும் அவ்ளோ க்ளோஸ்... அவன் என்னிடம் எதையுமே மறைத்ததில்லை.. அவன் பேஸ்புக் பாஸ்வேர்ட்டில்  இருந்து அவன் மொபைல் பாஸ்வேர்ட் வரை எல்லாமே எனக்குத் தெரியும்.. வந்த உடனே அவன் மொபைலை நோண்டுவதுதான் என் வேலையே.. அப்படிதான் நோண்டிட்டு இருந்தேன் இந்த முறையும்.. ஆனால் வாட்ஸ்அப்பில் புதுசாக லாக் கோட் வைத்திருந்தான்.. அதைக் கேட்டால் சொல்ல மாட்டேன்னு சொல்லி விட்டான்..

திரும்பத் திரும்ப கேட்டாலும், ம்ஹும்.. தரவே மாட்டேன்னு சொல்லி விட்டான். அதுமட்டுமில்லாமல் வந்ததில் இருந்து செல்லை நோண்டிட்டே இருந்தான். என்னிடம் சரியாகவே பேசவில்லை.. சிலநேரம் இரவு 12 மணிக்கெல்லாம் ஆன்லைன்னு காட்டுது..

இப்படியெல்லாம் இருந்தா என்ன தோணும்? ஏதோ பெண் தோழியிடம் பேசுறான்னுதான அர்த்தமாகும்!? நானும் துருவித் துருவி கேட்டேன், ‘ஏன்டா, கேள் ப்ரெண்டா?’ இல்ல ஏதாச்சும் லவ்வா ன்னு, இல்லவே இல்லன்னு சாதிக்கிறான்..

‘சரி அப்போ ஏன் பாஸ்கோட் போட்ருக்க? , என்ட்ட காட்டு’ன்னு சொன்னா, கடகடவென எதையோ அழித்து விட்டு காட்டுறான்..

இதுவரை எந்த ரகசியமும் எங்களுக்குள் கிடையாது.. முதல் முறை அவன் என்னிடம் ஏதோ மறைப்பது, ரொம்பவே வேதனையாக இருந்தது.. கேள் ப்ரெண்ட் இருந்தா நா திட்ட மாட்டேன்னு கூட சொல்லி பாத்துட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.