(Reading time: 17 - 33 minutes)

"ல்ல மாமா அவ எந்த பேசலைனாலும் அக்காங்க ரெண்டு பேர்ட்டயும் அவ ரொம்ப கிளோஸ் என் அக்காங்க எனக்காக அவள்ட பேசி அவ டேஸ்ட் எல்லாம் கேட்டு சொன்னாங்க ஆனா அவங்களுக்கே நான் வீடு வாங்கி அங்க இதெல்லாம் செட் பண்ணுவேன்னு தெரியாது இது எல்லாமே நான் சின்ன வயசுல இருந்து தேவிகாக பண்ணனும்னு ஆசை பட்டது அவளுக்கு என்னோட இந்த பொறுப்பில்லாத தன்மை புடிக்கலைனு தான் எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சேன் அவளுக்கு புடிச்சவன் மாறி என்னை மாத்திக்கிட்டேன் ஆனா என்னோட பேசிக் charactera என்னால மாத்திக்க முடில "

"மஹி நீ என் பொண்ணுக்கு கெடச்சது அவ அதிர்ஷ்டம் பா கோவக்காரி அவ கோவமா பேசுனாலும் நீ கொஞ்சம் பொறுத்து போயிடு பா"

"சித்தப்பா நீங்க சொல்லனுமா இவன் full சரணடைய வேண்டியது தான் பாக்கி நம்ம யாரும் திட்டினா கூட நம்மள தொரதியுற்றுவான்  இந்த   நல்லவன் "

"போங்க மாமா உண்மையெல்லாம் இப்படி பகிரங்கம சொல்லாதீங்க "

அப்பொழுது மஹியின் அண்ணன் "டிபன் ரெடி எல்லாரும் சாப்பிட வாங்க "

"ஹா அண்ணா ரொம்ப பசிக்குது என்ன பண்ணிருக்க என்று அவனுடைய மூன்று டசகோதரிகளும் ஒன்றாக கேட்டவுடன்  அவன் கண்கள் பெருமிதத்துடன் எல்லாம் உங்களுக்கு புடிச்சது தான் டா வாங்க சாப்பிடலாம் அப்பறோம் புது பொண்ணு உனக்கு புடிச்ச கிச்சடி இந்த சாப்பிட்டு பாத்து சொல்லு எப்படி இருக்குனு என்று கூறி ஒரு ஸ்பூன் இந்துவின் வாயில் வைத்தான் அதை விழுங்குவதற்கு அவள் பெரும்பாடு பட வேண்டியதாய் இருந்தது ஆனால் ஆண்ட குடும்பத்தின் அன்பு அவளை நெகிழ வைத்தது அதனால் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டாள்.............

"ஹே இந்து உனக்கு பெரிய மனசு டீ இந்த சாப்பாட்டையும் ருசிச்சு சாபுட்ரீயே வயிறு கேட்டுற போகுது பெரியப்பா நீங்க மனச தொட்டு சொல்லுங்க இந்த சாப்பாடு சாப்பிடற மாறிய இருக்கு "

அவர் சிரித்து கொண்டு இல்ல தான் மா ஆனா இப்போ நாம டிபன் கு என்ன பண்றது .............

ஹ்ம்ம் அதையும் பெரியம்மாவும் நல்லா தூங்குறாங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நீங்க அவங்களுக்கு துணைக்கு இருங்க நாங்க எல்லாரும் வெளில போய் சாப்பிட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வரோம் .

சேரி மா இதுவும் நல்லா ஐடியா தான் பத்திரமா போயிடு வாங்க.

ராது ரேவதி நீங்க எங்க கார்ல மாப்பிளைங்கள கூட்டிட்டு போங்க கார் சாவி அந்த டேபிள் ல இருக்கு பாருங்க,

தேங்க்ஸ் மாமா நாங்க போயிடு வந்துடறோம்.

ஹ்ம்ம் பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வந்திருங்க மணி இப்பவே 9 ஆயிருச்சு .

அப்பா நாங்க அங்க இருந்து வாங்கி வந்து நீங்க சாப்பிட ரொம்ப லேட் ஆயிரும் சோ உங்க 3 பேருக்கும் நா ஆர்டர் பண்ணிட்டேன் வந்ததும் நீங்க சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடுங்க நாங்க போய்ட்டு வரோம்.

மகளின் கூந்தலை மெதுவாக வருடி புன்னகைத்தார் கேர்ணல் மாதவன்.

அணைத்து ஜோடிகளும் தனி தனி கார்களில் தத்தமது ஜோடிகளுடன் கிளம்பினர்.

ஹியின் கார் ரோட்டில் சீறி பாய்ந்தது அது வரை அமைதியை இருந்த இந்து டேய் குரங்கே இவளவு ஸ்பீடா என் டா போற பயமா இருக்கு என்று சொன்னதுதான் தாமதம் கார் வேகம் குறைந்து நெரிசல் இல்லாத தெரு ஒன்றுக்குள் நுழைந்து ஒரு ஹோட்டலை அடைந்தது .

அவன் காரை விட்டு இறங்கி வந்து அவள் பக்கம் கதவை திறந்து விட்டான் பிறகு தான் கோடா வந்த யாரையும் காணவில்லை என்பது அவளுக்கு தெரிந்தது .

ஹே மஹி என்ன பண்ற எங்க வந்திருக்கோம் "தேவி ப்ளீஸ் கேள்வியா கேக்காத கேள்வி கேக்குறது ஈஸி ஆனா பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா "

அவள் முறைக்கவும் "சேரி வா உள்ள போகலாம் எல்லாம் அக்கா அண்ணா ஏற்பாடு தான் அவங்க கிபிட் நம்ம marriage கு "

"மஹி நீ நம்ம marriage நெனச்சு ரொம்ப சந்தோச பாட்டியா ???"

 இது என்ன கேள்வி என்பதுபோல் பார்த்துவிட்டு "ஏன் உனக்கு சந்தோஷம் இல்லையா "

"இல்ல டா இப்போ நான் உங்கிட்ட சொல்றது சரியான்னு தெரில பட் சொல்லலைனா என் மனசாட்சி என்ன கொன்றும் "

அவன் முகம் மாற ஆரம்பித்தது ஆனால் அவன் இதழ்களில் உள்ள புன்னகை மாறவில்லை "சேரி சொல்லு "

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.