நாட்கள் செல்லசெல்ல வருண் பற்றிய நினைவுகள் அவளை அதிகமாக தாக்கின. ஒருநாள் மௌனமான மாலைநேர கார் பயணம். அந்த சூழல் மிகவும் ரம்மியமாக இருந்தது.
“வருண் என் வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் துணையாக வந்திருந்தால், அது இந்தப் பயணம் போல் எவ்வளவு இதமாக இருந்திருக்கும்...”, வருண் நினைவில் மூழ்கியவளை மெல்லிய இசை தட்டி எழுப்பியது.
“என் மாமனோட மனசு...
மல்லிகைப் பூ போல பொன்னானது...
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது...”,
நண்பனாக நினைத்தவனை இந்தப் பாடல் வேறு கோணத்தில் காட்டிக் கொடுத்தது. “இத்தனை நாளும் வருண் இந்த பாடல் வரிகளுக்குள் எங்கு ஒளிந்திருந்தான்...?”, பாடலுக்குள் அவனுக்கான தேடல்.
“எனக்கும், வருணுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டால், நானும் இவ்வாறு தான் பாடிக் கொண்டிருந்திருப்பேன். திருமண நாளுக்கான ஒவ்வொரு நாள் காத்திருப்பும் சுகமான சுமையாக கழிந்திருக்கும். எவ்வளவு அழகான வாழ்க்கை அது....”, வந்தனாவுக்குள் சுகமான கனவுகள் காட்சிப் படுத்தும் முன்னே கானல் நீராய் மாறியது.
“மறுபடி என் வழியில் ஏன் வந்தான்...?”, அவள் மனம் தன்னிலை மறந்தது. “வருணுக்கு ஒரு குடும்பம் உள்ளது. எதிர்காலத்தில் அவனை தாங்க அவன் குழந்தைகள் உள்ளனர். அவனை உண்மையாக நேசிப்பவள் நான். அவன் வாழ்வில் நிம்மதி இழந்து நிற்க காரணமாக கூடாது...”
“கால ஓட்டத்தில் தளர்ந்து போகும் நேரத்தில், அவன் கைகள் பற்றிக் கொள்ள தோன்றலாம்...சாய்ந்து கொள்ள அவன் தோள் தேடலாம். அந்த தருணங்களில் அழகாய் பூத்த இந்த உறவு, களங்கப்பட்டு நிற்கக் கூடாது...”
முடிவாக “அவன் பழைய நினைவுகளோடு, எனக்கு மட்டுமே சொந்தமான வருணாக....இந்த உறவு நின்று போகட்டும்...”, வருண் வழியிலிருந்து முற்றிலும் விலக முடிவெடுத்தாள்.
ஒருவர் எவ்வளவு நேசிப்பவராக இருந்தாலும், நெருக்கமான இரத்த சம்பந்தமாக இருந்தாலும், அவர் உயிர் பிரிந்து விட்டால்...எவ்வளவு கதறினாலும், இறந்தவரால் நமக்கு ஆறுதல் கூற முடியாது. அந்த வலி நெஞ்சை விட்டு நம் உயிர் பிரியும் வரை மறையாது. வருண் பிரிவும் அதுபோல் ஒரு வலியை இப்போது தந்தது.
“இன்னொரு பெண்ணுக்கு சொந்தமான வருணை நேசிப்பது தவறுதான். அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு முன்பே அவன் என் சொந்தம். இழப்பும், வலியும் எனக்கே. மனதில் பதிந்து விட்ட பழைய நேசத்தை மறைக்க முடியும், முழுவதுமாக அழிக்க முடியாது...”, மனம் அவளுக்காக வாதாடியது.
காதலை கண்டு பயந்து ஓடியவளை காலம் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் தோற்றுப் போனவளாய் காதல் முன் மண்டியிட்டாள்....அவமானப் படுத்தப் பட்டவளாய் கண்களில் கண்ணீர் கொட்டியது.
“வருண்...ஒரு காலத்தில் என் நேசத்திற்காக காத்திருந்தவன். அவனுக்கு தெரிய வேண்டும். அவன் நேசித்ததை விட, அவனை நான் அதிகமாக நேசிக்கிறேன் என்பதை. இப்போது சொல்லாவிட்டால், இனிமேல் சொல்ல முடியாமல் போய்விடும்...”
“என் இனிய வருண், கடவுள் உன்னை எனக்காகப் படைக்கவில்லை. அதனால்தான், என் வாழ்வில் நீ வருவதற்கு முயன்றும் விதி தடுத்து விட்டது. விதி வலியது. நான் உறவுகளை இதயத்தால் பார்க்கிறவள். அதனால்தான் உறவுகளை தக்க வைத்துக் கொள்வதில், தக்க சமயத்தில் என் அறிவு கை கொடுக்க மறுத்து விடுகிறது....”, உண்மையை ஒப்புக் கொண்டாள்.
காலம் கடந்த நினைவுகளோடும், புதிதாய் அறிந்து கொண்ட நேசத்தோடும் போராடியவள் மனதில் இப்போது ஆழ்கடல் போல் ஒரு அமைதி கிடைத்தது. வலிகள் அதிகமானால், வலிக்கும் உணர்வு தெரியாது.
அன்று, வந்தனா வழியில் வருண் இருந்தான். இன்று, வந்தனா வாழ்வில் வருண் இருந்தும் இல்லாமல் இருக்கிறான். விதிப்படி வருணின் மறுசந்திப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது.
காரணமில்லாமல் காரியமில்லை...!!!
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.