(Reading time: 9 - 17 minutes)

வளொரு தேவதை

சொட்டும் சிறகுகளால்

கொட்டும் வைரப் பறவை

அவள் வானம் பிளப்பவள்

நான் தரையில் நடப்பவன்

அவள் நனைப்பவள்

நான் நனைபவன்

சிரிப்பதை கூட

அழுது சொல்பவள்

அவள்

என்

மழைக்காதலி...

என்

தலைகோதி

எனை நனைத்துவிட்டாள்

தூறல் விரல்களால்

துவட்டிவிட முயன்று

மீண்டும் நனைத்தாள்

தான்

மழை என்பதை மறந்துவிட்டு!

என் மழை அவள்தான் என்பதை அறிந்தாளா அறியாதவள் போல இருந்தாளா? புவனா அவற்றைப் புகழ்வாள். அவள் புகழ்வதற்காகவே அவை எழுதப்பட்டன.

இலக்கியம் கவிதை மழை என்றே எங்கள் பேச்சுகள் நீண்டன. அவள் என்னோடு அதிக நேரம் செலவிடத் தொடங்கினாள். மீண்டும் ஒரு மாலை அவளோடு சேர்ந்து மழையில் நனையும் பாக்கியம் கிடைத்தது. மழையா அவளா இரண்டில் எது வேண்டும் என்று கேட்டால் என்னிடம் பதில் இருந்திருக்காது அப்போது...

சட்டென ஏதோ தோன்ற, அதையே அவளுக்குக் கேள்வியாக்கினேன்,

“இப்ப ஒரு தேவதை வந்து உனக்கு மழை வேணுமா இல்ல இவன் வேணுமா, யாராவது ஒருத்தர் கூடத்தான் நீ இருக்கலாம்னா நீ என்ன சொல்லுவ?”

அவள் ஏதும் சொல்லவில்லை. என்னையே பார்த்துக்கொண்டு நின்றாள். கேள்விக்குறி காட்டினாள். புன்னகைத்தாள். நான் சற்றும் எதிர்பாராமல் என்னை அணைத்துக்கொண்டாள். வாழ்ந்துமுடித்துவிட்ட ஒரு நிறைவு. வேறு வார்த்தைகள் இல்லை அதை வருணிக்க.

காகிதத்தில் என் கவிதையும், காலத்தில் எங்கள் காதலும் வளர்ந்தன. அவளோடான் என் வாழ்க்கை எத்தனை இனிமையாய் அமையப்போகிறது என்ற கற்பனை நிற்காமல் ஊறியது என் நெஞ்சில். புவனா...

லறிய தொலைப்பேசி என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. டைரியின் பக்கங்களிலிருந்து வெளிவந்தேன். தொலைப்பேசிக்குக் காது கொடுத்தேன். “ஹலோ?”

“என்னங்க நாந்தான்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மொபைல்லுக்கு அடிச்சா எடுக்கவே இல்ல? தூங்கிட்டு இருந்தீங்களா? இங்கலாம் ஒரே மழை, சனியன் நிக்காம பெஞ்சிட்டே இருக்கு, ஒரு வேல ஓடல... அங்க எப்படி? காயப் போட்டிருந்த துணியலாம் எடுத்து உள்ள போட்டீங்களா இல்ல மழைல நனைய விட்டுட்டீங்களா? வீட்டை ஒரு தடவயாச்சு கூட்டினீங்களா? குப்பைலையே உழலாதீங்க... வெளிய போயிட்டு வந்தா கால நல்லாக் கழுவிட்டு உள்ள வாங்க... வீடுபூறா சேறாக்கி வெக்காதீங்க... சனியன் புடிச்ச மழைனால ஊரே சகதியா இருக்கு... உங்க பொண்ணு வேற ஜலதோஷத்த வர வெச்சுக்கிட்டு உயிர எடுக்குறா... என்னங்க கேக்குறீங்களா இல்லையா? நாங்க நாளைக்கு அங்க வந்துடுவோம்... பஸ்ஸ்டாண்டுக்கு வாங்க... சரியா? மழைச் சனியன் ஓயுமா அடிக்குமானே தெரியல, எதுக்கும் கார்லயே வாங்க... என்னங்க...”

பேசிக்கொண்டே போனாள் என் மனைவி... புவனா!

 

 

This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - தலைப்பு சார்ந்த கதை - காதலியா... மனைவியா...!

எழுத்தாளர் - விசயநரசிம்மன்

{kunena_discuss:1083}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.