‘என்ன பேசரறீங்கோ,ஒங்கள தனியா விட்டு போயிடுவேனா? என்னிக்கு நான் தனியா எதுவும் பண்ணிருக்கேன் நீங்கதான் என் உலகம், நான்தான் உங்க உலகம், இது தெரியாமையா இத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்தினேன்?"
"பரவாயில்லையே என்ன நீ நல்லா புரிஞ்சு வஞ்சிருக்க சக்கு, ஆனா எங்க நீ என்ன தனியா தவிக்கவிட்டுட்டு போயிடுவியோன்னு பயமாயிருக்கு"
"எதுக்கு பயம், என்ன நீங்க, சின்ன குழந்தையாட்டமா! தைரியமா இருக்கனும், உங்கள எந்த காலத்துலையும் நான் தனியா தவிக்க விட மாட்டேன் புரிஞ்சுதா?"
"சக்கு, என்னால நீ இல்லாம இருக்க முடியாது, நானும் உன்னோடவே வந்துடறேன்,என்ன விட்டுட்டு போயிடாதம்மா, நானும் உன்னோடவே வரேன், என்னையும் கூட்டிண்டு போயிடு" என்று தனக்குள்ளேயே குலுக்கினார்
அவள் என் காதலியா மனைவியா என்று மனதினுள் ஒரு பட்டி மன்றமே நடத்தி கொண்டிருந்த தருணத்தில் அவளுடைய மூச்சு அடங்கி போச்சு….அவரும், அவர் மனைவியுடன் அடங்கி விட்டார்…….எல்லாமே முடிஞ்சு போச்சு……
அப்போது உள்ளே வந்த ராகவன், "என்ன ராமன், எழுந்திருங்கோ..... ராமன் எழுத்துக்கோங்கோ, இன்னிக்கு வைகுந்த ஏகாதேசி இல்லையா , காலங்கார்த்தால பெருமாள் கோவிலுக்கு போய் வைகுந்த வாசல் சேவிச்சுட்டு உங்களுக்கு பிரசாதமும் காப்பியும் கொண்டு வந்திருக்கேன் எழுந்திருங்கோ ராமன்......" என்று உலுக்கினார், அவரிடம் அசைவே இல்லை, டாக்டரை கூப்பிட ஓடினார் ராகவன்
டாக்டர் வந்து செக் செய்துவிட்டு, "ஐ அம் சாரி, ஹி இஸ் நோ மோர்"
"ஐயோ மாமிய தனியா விட்டுட்டு போயிட்டாரே," என்று அவர் கூறியதும், ஏதோ சத்தம் வருகிறதே என்று அப்போது தான் மானிடரை பார்த்தார் டாக்டர் ," ஓ மை காட்" என்று சகுந்தலாவிடம் ஓடினார்
அவரை செக் செய்து விட்டு "ஓ நோ, இவங்களும் இப்போ உயிரோட இல்லை, கிட்டத்தட்ட போர் அவர்ஸ் ஆயிடுத்து ரெண்டு பேரோட உயிரும் போய்"
நர்ஸை கூப்பிட்டு திட்டினார் டாக்டர், என்ன இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருக்கீங்க?"
"இல்ல டாக்டர் ரெண்டு மணிக்கு வந்து கொடுக்க வேண்டிய இன்ஜெக்ஷனெல்லாம் கொடுத்துட்டுத்தான் போனேன், அதுக்கு பிறகு , இதோ இப்பத்தான் அடுத்த மருந்து கொடுக்க வரேன், எந்த ஒரு சத்தமும் வரல டாக்டர், யாரும் வந்து எந்த தகவலும் கொடுக்கல"
"எப்படி கொடுப்பார், கொடுக்க வேண்டியவரும் கூடவே ஒரே நேரத்துல போயிட்டாரே, என்ன மாதிரி சோல் ராகவன், எவ்வளவு லவ் இருந்தா ஒருத்தருக்கொருத்தர் இந்த வயசிலும் கை கோர்த்துக்கொண்டு ஒரே நேரத்தில உயிரை விட்டிருப்பாங்க, வாட் எ கப்பில்?"
"ராகவன் குலுக்கினார், எப்படியோ மாமி தேறி வந்துடுவான்னு நினைச்சேன், ராமன் முகத்துல சிரிப்பை பாக்கணும்னு நினைச்சேன், ரெண்டு பேருமே ரொம்ப அன்னியோன்னியம், ஒரு சண்டையோ, ஒரு சிடுசிடுப்போ கிடையாது, ரொம்ப கொடுத்து வச்சவா, வைகுண்ட ஏகாதேசியில், வைகுந்தத்துக்கு நேரே போயிட்டா, எவ்வளவு கொடுத்து வச்சிருக்கா ரெண்டு பேரும்"
"ரொம்ப வாஸ்தவமான வார்த்தை, இனி ஆகவேண்டியதா பார்ப்போம்" அப்போது ராகவனோட போன் மணி அடித்தது , எடுத்து "ஹலோ" என்றார்
"அங்கிள் நான் ராமனோட பிள்ளை பூர்வ் பேசறேன், நான் இப்போ சென்னை ஏர்போர்ட்டுல இருக்கேன் கப் (cab) எடுத்துண்டுட்டேன், எந்த ஹாஸ்பிடல்னு சொல்றீங்களா ப்ளீஸ்?"
"சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டியா, வாடா, வந்து உன் பெத்தவாள பார், உனக்காக காத்துந்துண்டிருக்கா" என்று ஹாஸ்பிடலோட பேரையும், அட்ரெஸ்ஸையும் கொடுத்தார் , தங்கள் ரிடைர்மென்ட் கம்யூனிட்டிக்கு கால் செய்து விஷயத்தை கூறினார்.....
எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின்
குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!
பூர்வ் தன் பெற்றோரின் அந்நியோன்னியமும் ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருந்த காதலும் இணை பிரியாமல் ஒன்று சேர வைகுந்தத்தை அடைந்தார்கள், சரியான நேரத்தில் தான் வந்து அவர்கள் இருவரையும் கௌரவமாக அனுப்பி வைத்தததை நினைத்தவன் முகத்தில் மலர்ச்சி!
உண்மைக் காதல்….
முதிர்ச்சி பெற்ற காதல்!
முதியோர் காதல்….
முழுமையான காதல்!
உண்மை அன்பை வெளிக்காட்டுவது...
அறுபதில் காதல்!!
ஆம் அறுபதிலும் காதல் வரும்!!!
This is entry #35 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை
எழுத்தாளர் - VJG
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.