(Reading time: 4 - 7 minutes)

2017 போட்டி சிறுகதை 55 - இந்த தேடல் அவசியமா? - ரேவதிசிவா

This is entry #55 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - ரேவதிசிவா

Writing

"நினைப்பதுப்போல் வாழமுடிவதில்லை எல்லோராலும், துன்பநிலையில் இருக்கும் மக்களும் போராடி வாழ்கிறார்கள . ஆனால் நாம் ?"

புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்த ரஞ்சனிக்குத் தன் பக்கத்தில் யாரோ அமர்வதுப்போல் தோன்றியது . திரும்பிப் பார்த்தவளின் முகம், கலவையான உணர்ச்சிகளைப் பிரதிப்பலித்தது .

"இசை, நீ இங்க எப்படி? என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

எப்படி இருக்க சிவா ? என்று யாழிசை கேட்டதற்கு, நன்றாக இருப்பதாகத் தலை ஆட்டினாள்.

இருவரிடையேயும் நிலவிய அமைதியை கடிக்காரத்தின் ஓசை கலைத்தது.ரஞ்சனி மெதுவாக ,

"ஏன் இப்படி செஞ்சமா ?என்று வருத்ததுடன் கேட்டாள்.

இசை, முடிந்ததைப் பற்றிப் பேசாதே சிவா.என்னால் நினைத்தாலும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. நான் இப்படி செய்ததற்குப் பல காரணங்கள் அன்று நினைத்திருந்தாலும் , இப்பொழுது நினைக்க எல்லாமே முட்டாள்தனமாகத் தோன்றுது. என்னைப்போன்ற சுயநலவாதி யாருமே இருக்க முடியாது, என்று விரக்தியுடன் கூறினாள்.

சிவரஞ்சனிக்கு வருத்தம் ,கோபம் , தன்னுடைய தோழியைப் பார்த்த மகிழ்ச்சி என்று பல உணர்வுகள் வந்து போயின. உணர்ச்சிகளின் பிடியில் இருந்ததவள் நிகழ்காலத்தைச் சிந்திக்க மறந்தாள் .

இசை, "எனக்கு அதிக நேரம் இல்லமா, உன்னுடையப் பத்தரிக்கையில என்னைப் பற்றி எழுது.நான் செய்தக் குற்றத்தை அடுங்தவர்கள் செய்யாமப் பார்த்துகமா.அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீ என் மேல் மிகக் கோபமாகவும் வருத்தமாகவும் இருப்பாய், என்னை மன்னித்துவிடு என்றாள்.

ரஞ்சனி தனக்குள் , எப்படி இருந்தாலும் எங்களுடையப் பழைய இசை எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மணியின் ஒசையால் திடுக்கிட்ட ரஞ்சனி, இசை இல்லலாதை அப்பொழுதுதான் அறிந்தாள். ரஞ்சனி ஒரு முடிவோடு காகிதத்தை எடுத்து பின்வருமாறு எழுதினாள்.

நண்பர்களே! நான் இப்பொழுது உங்களிடம் என் வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத ஒரு விஷயத்தைப் பகிரப்போகிறேன். உங்களில் பலர் தங்களுடைய வாழ்க்கையில இதைப்போன்று சந்திக்க நேர்ந்திருக்கலாம். அது, நண்பர்களின் இழப்பு.ஆம்.நம்மில் பலர் தங்களுடைய நண்பர்களின் இழப்பை ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கண்டிருப்போம்.மிகுதியாக, நோய்வாய்ப்பட்டோ விபத்திலோ அவர்களை இழந்திருப்போம்.நானும் என் தோழியை இழந்துள்ளேன்.ஆனால் காரணம்தான் வேறு. என் தோழி அவளின் முடிவை அவளே தேடிக்கொண்டாள்.அவளின் இச்செயலுக்குக் காரணம் யாரும் அறியர். மிகவும் இனிமையானவளாகவும் தையிரியமானவளாகவும் நினைத்திருந்தேன் .அவளின் முடிவு என்னை மாற்றிவிட்டது.பள்ளிப் பருவத்தில், மாணவி ஒருத்தி தன்னிச்சையாகத் தன் முடிவைத் தேடிக்கொண்டதைக் கண்டு மிகவும் வருந்தியவளா? இன்று இப்படி !அவளின் பெற்றோரின் துயரத்தை நேரில் கண்டவள் நான்.பெண்கள் இறந்தால் கூட அவர்களை இச்சமூகம் விமர்சிப்பதை விடாது ,என்பதை அங்கு கண்டேன்.இவ்வுலகில், அடிப்படை வசதியில்லாமல் ஒருவேளை உணவே போராடிப் பெற்று இவ்வாழ்க்கையைப் பல மக்கள் வாழ்கின்றனர்.ஆனால் என் தோழியைப்போல் பல நண்பர்கள் வாழ்க்கையில் பல நிறைவுகள் இருந்தும் சிலவற்றை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் உயிரை விடுகின்றனர்.பிறப்பும் இறப்பும் ஒருமுறைதான். பிறப்பை ஏப்படி நாம் தேர்ந்தெடுப்பதில்லையோ அதுப்போல இறப்பையும் தேர்ந்தெடுக்காமல் இருப்போம் நண்பர்களே !

வாழ்க்கையில் தேடல் அவசியம்−நீ

உனக்கு வேண்டியதேத் தேடிப்போ−ஆனால்

முயற்சி என்னும் நான்கெழுத்தை விட்டுவிட்டு

மரணம் என்னும் நான்கெழுத்தை மட்டும்

என்றும் தேடிப்போகாதே!

நேசித்தவர்களுக்குத்தான் இழப்பின் வலி தெரியும்...

 

This is entry #55 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - ரேவதிசிவா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.