(Reading time: 7 - 14 minutes)

2017 போட்டி சிறுகதை 109 - கணவனின் மறுப்பக்கம் - நித்யா மணி

This is entry #109 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுப்பக்கம்

எழுத்தாளர் - நித்யா மணி

Confused

"டவுளே இவர் ஏன் இப்படி செய்கிறார்”!, சலித்துக் கொண்டாள் மதுரா.

இப்போதெல்லாம் இப்படி தான் மதுரா புலம்புகிறாள். மதுராவின் கணவன் துரைமுருகன் தனியார் துறையில் வேலை செய்பவன். ஒரு ஆண் ஒரு பெண் என்ற அளவான அன்பான குடும்பம்.

ஆனால் அந்த அழகான குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது. அதுவும் அந்தப் புயல் துரைமுருகன் வடிவத்தில் வந்ததது தான் அதிர்ச்சிக்குரியது.

மூன்று மாதங்களுக்கு முன் ஒருநாள் இரவு வெகு தாமதமாக வந்தான் துரைமுருகன். அதுதான் ஆரம்பம், மதுராவும் அவனை விசாரித்தாள்.

"ஏங்க இன்னிக்கு இவ்வளவு தாமதம்?”, என்று கேட்ட மதுராவிடம்,

"கொஞ்சம் வேலை அதிகம் மது, தலை வலிக்கிறது சாப்பாடு போடுகிறாயா?”, என்றான் தன்மையாக.

கணவன் தலைவலி என்றதும் மற்றதை மறந்து அவனுக்கு உணவு எடுத்துவைக்க சென்றாள் அவள்.

மதுரா துரைமுருகன் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. இந்த எட்டு வருட திருமண வாழ்வை  இருவரும் அனுபவித்தே வாழ்ந்தனர். துரைமுருகன் மதுராவை நன்றாகவே வைத்திருந்தான்.

மதுராவின் சிறிய சிறிய ஆசைகளைக் கூட அவளது முகம் பார்த்து நிறைவேற்றிவைத்தான். ஆனால் இப்போது அவளுது மனம் கோணும்படி நடந்துகொள்கிறான், அவன் அறியாமலே!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு இதே சிந்தனையாக அமர்ந்திருந்தாள் மதுரா. துரைமுருகனின் நடவடிக்கைகள் அவளுக்குள் பயப்பந்தை உருவாக்கியிருந்தது.

சில நாட்களாக துரைமுருகன் வீட்டிற்கு தாமதமாக வருவது மட்டுமில்லாமல் அவன் மீது ஏதேதோ வாசனைகள் அடிக்கிறது, குறிப்பாக மல்லிகையின் மணம். பொதுவாக துரைமுருகன் வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது கிடையாது, 'பின் எப்படி மல்லிகையின் மணம்', குழம்பிப் போனாள் மதுரா.

இதுவே வாடிக்கையாயிற்று, மதுரா துணுக்குற்றாள், 'ஒருவேளை அப்படி இருக்குமோ!, சே நானே அவரை சந்தேகப்படுவதா'!

வாழ்வின் ஆதாரமான நம்பிக்கை அஸ்திவாரம் மதுராவினுள் ஆட்டம் காண தொடங்கியது.

'ஆனால் ஆதாரங்கள் அவருக்கு எதிராக அல்லவா இருக்கிறது', மீண்டும் குழப்ப ரேகைகள் சூழ்ந்தது. 'என்ன ஆனாலும் இன்று அவர்  வந்தவுடன் கேட்டுவிடவேண்டும்' , மனதில் தீர்மானித்துக் கொண்டாள்.

பகல் போய் இருள் கவிழ்ந்தது. குழந்தைகளும் "அப்பா எங்கே, அப்பா எங்கே?”, என்று கேட்டுக் கொண்டே உறங்கிப் போயினர் மதுரா மட்டும் கொட்ட  கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள். சுமார் பதினொன்றேகால் மணிக்கு வந்தான் துரைமுருகன்.

களைத்து காணப் பட்டவனிடம் என்ன பேசுவது என்று மதுராவிற்கு குழப்பம் மேலிட்டது. அங்கே கணவன் மீதிருந்த அன்பே வென்றது. இருப்பினும் பேசியே ஆகவேண்டும் என்ற  கட்டாயத்தில் தான் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

"ஏங்க........ இப்பல்லாம் ரொம்ப தாமதமா வறீங்களே?”, தயங்கி தயங்கி கேட்டவளை பார்த்து அன்பாக புன்னகைத்தான். அந்த புன்னகையில் தொலைந்துதான் போனாள்.

"மது கொஞ்சம் வேலைடா, இன்னும் சிறிது நாட்கள் தான் எல்லாமே சரியாகிவிடும்”, அவளுக்கு நம்பிக்கை அளித்தான்.

"சரிங்க”, 'பாவம் வேலை அதிகம் தான் போல', மதுராவின் மனம் கொஞ்சம் தெளிவாகியது.

சில நாட்கள் சென்றிருக்கும், மதுரா பலசரக்கு சாமான்கள் வாங்க கடைக்கு சென்றிருந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை திகைப்பில் ஆழ்த்தியது.

மதுரா கண்ட காட்சி இதுதான், துரைமுருகன் தனது வண்டியில் மதுராவின் வயதை ஒத்த ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்றான், இருவரும் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றனர். துரைமுருகன் யாரையும் எளிதில் அவன் வண்டியில் ஏற்றமாட்டான். மதுர அதிர்ச்சியானாள்.

'அது அவரா? இருக்காதே, இந்த நேரத்தில் அலுவலகத்தில் அல்லவா இருப்பார், நிச்சயம் அது அவரல்ல', என்று மனம் கூறினாலும் புத்தி அது துரைமுருகன் தான் என்று இடித்துரைத்தது. காரணம் அவனது பக்கவாட்டுத் தோற்றம். அந்த முகத்தில் இருந்த மிளகு அளவு மருவுதான்.

மனம் வேதனை அடைந்தது மதுராவிற்கு. 'அவரிடம் வந்த மல்லிகையின் மணம் அவளது தலையில் இருந்து உதிர்ந்தது தானா? நான் ஏமாற்றப் படுகிறேனா?'

அனாதையான தன்னை துரைமுருகனின்  பெற்றவர்கள் பார்த்து மனம் ஒப்பி நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்தால் அது எவ்வளவு பெரிய அவமானம்.

இப்போது கூட துரைமுருகனை விட்டுவிட்டு சென்றுவிடலாம் தான். ஆனால் தான் மட்டுமே அந்தக் குடும்பத்தில் இல்லை, தன் பிள்ளைகளும் அல்லவா இருக்கின்றனர். தன்னிடம் எப்படியோ தன் பிள்ளைகளிடம் அன்பான தந்தையாகவே நடந்துகொள்கிறார்.

இதுவே மதுராவை நிதானமாக யோசிக்கத் தூண்டியது. 'அவர் வந்தவுடன் அந்த பெண் யாரென்று விசாரிப்போம் பின் முடிவெடுப்போம்', என்று தீர்மானித்தாள். இரவு துரைமுருகன் வந்தான், எப்போதும் போல் தாமதமாகத்தான்.ஆனால் யோசனையாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.