(Reading time: 21 - 42 minutes)

2017 போட்டி சிறுகதை 110 - குணப்படுத்துறேன்...  - பவ்யஸ்ரீ

This is entry #110 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுப்பக்கம்

எழுத்தாளர் - பவ்யஸ்ரீ

Cockroach

கதை பல பரிமாணங்களில் பயணிக்கிறது. வாசகர்கள் தங்கள் கோணத்தை பதிவிடவும்.

ங்கள சுத்தி பாருங்க, அந்த இடத்த அப்படியே உள்வாங்கிக்கோங்க. அந்த இடத்த உணருங்க, கண்ணுக்கு முன்னாடி கொண்டுவாங்க. இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“கிட்சன்ல... கிட்சன்ல இருக்கேன்.”

“வெரி குட். என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“சும்மா... நின்னுட்டு... இருக்கேன்... எந்த வேலையும் பண்ணல.”

“சரி, என்ன நடந்துச்சு அப்போ?”

“ உதட்டுல... என்னோட... உதட்டுல... எதோ ஊருச்சு…”

“என்ன அது?”

“கரப்பான்பூச்சியோட கால்... கரப்பான்பூச்சி… நான் அத சாப்டேன்.”

“ஏன் கரப்பான்பூச்சிய சாப்டீங்க? உங்களுக்கு பசியா இருந்ததா?”

“இல்ல...”

உன்ன இந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டு வரவேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அவசியம். என்னோட காதலி, ம்... மனைவிய நானே ஹிப்னோதெரபிஸ்ட் டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்துருக்கேன். என் வாழ்க்கைல இப்படி ஒரு தருணம் வரவே கூடாதுன்னு நெனச்சிருந்தேன். இப்போ பதட்டத்தோடு துக்கமும் சேர்ந்து, பால்கனில நின்னு கோல்டன் கேட் பிரிட்ஜ்ஜ பாத்துட்ருக்கேன். பாத்துட்டு மட்டும் தான். எத்தனையோ முறை, அதன் உறுதியை விமர்ச்சித்ததுண்டு, வியந்ததுண்டு, கற்பனயில் தகர்த்ததுண்டு. இம்முறை அதன் நிழல் வடிவம் கூட என் மூளையை எட்டவில்லை. மஸ்டியன், நீ என் வாழ்க்கைல எப்படி வந்த? என்னுள் ஊடுருவி சென்ற காற்றை பிடித்துக்கொண்டே என் நினைவலைகள் அதன் பின் ஓடின.

என் சமீபத்திய, சந்தோசமான தூக்கங்கள், எரிச்சலான காலை நேரங்கள் இன்றோடு ஒழிந்தது. நீண்ட நாட்களாக என் கனவில் வரும் ஒரே விஷயம் "யமஹா ஆர். எக்ஸ். 100 பைக்". இன்று அதன் மடியில் நான். சிகப்பு வர்ணம், சூரிய ஒளியும் அதன் அழகைக்கண்டு அதனுள் ஊடுருவி கலவியில் ஈடுபட்டுச் செல்லும். கையை ஆக்ஸிலேட்டரில் பிடித்த திடம், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலால் கிக்கரை, ஒரு வீரனின் நேர்த்தியான கத்தி வீச்சு போல. அதன் சத்தம், தீசுவாலையை கக்கும் ட்ராகனை அடக்கி, பறப்பதற்கு தயாராக இருக்கும் போது எழும் ட்ராகனின் உறுமலை ஒத்து இருந்தது. சீறிப் பாய்ந்தேன். சாலையில் போகும் பெரிய வாகனங்கள் யானைகளாகவும், சிறிய வாகனங்கள் நத்தைகளாகவும் எனக்கு தோன்றியது. ஆனால் நான்,... நான் ட்ராகனில்,... தீசுவாலையை கக்கும் ட்ராகனில் பறந்து கொண்டிருக்கிறேன். எதுவும் எனக்கு தடையாக இல்லை. எந்த வளைவிலும் 60க்கு கீழே குறையவில்லை. பீச் அருகே நேர்த்தியான ஒரு வளைவு, நடுரோட்டில் ஒரு பெண் குனிந்து, கீர்ச்ச்ச்... ஆ!!!... அம்ம்ம்மாமாமா!!!.....

என்ன செய்வது என்று யோசிப்பதற்குள்... 2 வினாடி தான். ரோட்டில் சிராய்த்து சென்று, தூக்கி எறியப்பட்டேன். என் பைக்கை பார்த்தேன். ட்ராகனின் கண் நொறுங்கியிருந்தது. காது மடல் கிழிந்து தொங்கியது. கம்பீரமான மார்பு, கீறலுடன் நெளிந்து போய் சாலையோரத்தில் கிடந்தது. கத்தினேன், ட்ராகனின் வலியை என்னுள் உணர்ந்து. கோபம், அகோர கோபம்.

அவளை நோக்கி நொண்டி வந்து, "அறிவு இருக்கா?", அவள் திரும்பினாள். அவள் கண்கள். அவற்றினுள் ஒளி. பால்வழியில் அண்டத்தை கண்ட அனுபவம், அதனுள் நுழைந்து ஒரு முடிவில்லா காலப்பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற கிளர்ச்சி, மீள முடியாத கருந்துளையில் ஈர்க்கப்பட்ட அதிர்ச்சி, இவை அனைத்தும் ஒரே கணத்தில் என் மனதில் தோன்றியது, அவள் கண்களை கண்டதும். அவள் கண்கள் என்னிடம் கெஞ்சின, மன்னிப்பு கேட்டன. அவளைப் பார்த்தேன். ஒரு வினாடி, நான் என் ட்ராகனில் பறந்து விண்ணை அடைந்து விட்டேனோ? அங்கே இந்த பேரழகி, இல்லை, தேவதை என்னிடம் கெஞ்சுகிறாளோ என கற்பனயில் பிரபஞ்சத்தில் மிதந்தேன். அவள் கண்ணில் நீர் வழிந்தது. தேவதையல்ல, மனிதியே என்று அவள் கண்ணீர் என்னை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது.

"இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா?"

"ஐயம் வெரி சாரி சார். கவனிக்கல, சாரி சார்."

"சாரியா! கார், பஸ்ஸு வந்தா என்ன பண்ணிருப்ப?"

"கவனிக்கல சார், தெரியாம."

"நடுரோட்டில அப்படி என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஒரு பட்டாம்பூச்சி பறக்க முடியாம இருந்தது. அத கைல எடுக்க குனிச்சேன்"

என் மனதினுள்ளே சந்தோசம். ஒரு பேரழகி என் முன்னே நிற்கிறாள், என்னிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவளது கண்கள், அதில் வழியும் நீர். அதன் தூய்மை. அதனுள் அவளது அழகு. இவை எல்லாவற்றையும் மறைத்து அவள் மீது கோபப்பட்டு, அவளை திட்டியது எனது இன்னொரு மனம். நான் ஒரு மிகச்சிறந்த நடிகன். நானும் அவளும் சாலையோரம் அமர்ந்தோம். என் அருகே தேவதை. நெற்றியில் வழிந்த ரெத்தத்தை துடைத்த அவளது கை, என்னுள் பாய்ந்த மின்சாரம். முடியை கோதிவிட்ட விரல்கள். சொக்கிய நான். வெக்கத்தில் குனிந்த என் தலை. அவளது கால் விரல்கள், நவரத்தினங்களின் கோர்வை.

பாலில் தேன் கலப்பது போல, என் நினைவலைகள் ஒன்றோடொன்று ஒரு சேர கலந்தது. இன்று நானும் அவளும் டாக்டர் முன்பு அருகருகே. இப்போதும் அவளது காலை பார்த்தேன். அதே ரத்தினங்கள், அதே பளபளப்பு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.