(Reading time: 21 - 42 minutes)

திடீர் அதிர்ச்சியில் கண்விழித்து, “டாக்டர்” என்று கண்களை கசக்கி, சுயநினைவிற்கு வந்தாள். “எனக்கு என்ன டாக்டர்?”

“ரிலாக்ஸ். இப்போ வரைக்கும் பயிற்சி தான் குடுத்தேன். இனிமேல் தான் சிகிச்சையை ஆரம்பிக்கணும். நான் ஒரு இன்ஜெக்ஸன் போட்றேன். நல்லா தூக்கம் வரும். 4 ஹவர்ஸ் கழிச்சு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூறி மஸ்டியன்க்கு இன்ஜெக்ஸன் போட்டு தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தார் டாக்டர்.

“என்ன ஆச்சு டாக்டர்?”

“ரொம்ப குழம்பி போயிருக்காங்க. ப்ரைன் ஃபங்ஷன் எதும் நார்மலா இல்ல. செடடிவ் ட்ரக்(sedative drug) குடுத்துருக்கேன்”

“ஜி.ஹெச்.பி.(G.H.B)?”

“யார் நீ? என்ன வேல பண்ற?”

“டைவர்(Diver) டாக்டர், பசுபிக் ஓசன்”

என் பதிலை டாக்டர் நம்பவில்லை. சிறிது நேரம் என்னையே உற்றுப்பார்த்து, “மஸ்டியனோட சின்ன வயசு வாழ்க்கைய பத்தி உங்களுக்கு தெரியுமா?”

“நோ டாக்டர். நாட் எக்ஸாட்லி. அவ சின்ன வயசுல இருந்து ஒரு ஆர்பனேஜ்ல தான் வளந்தா. அவள கைகுழந்தையா சால்டன் ரிவியேரா ல (Salton Riviera) அபாண்டன் ப்ளேஸ் ல இருந்து தான் எடுத்தாங்களாம். இதுவர அவள தேடி யாரும் வரல. சோ, அவ ஃபாமிலி பத்தி தெரியல டாக்டர். படிச்சது எல்லாமே ஸ்பான்சர்ஷிப் மூலமா தான்.”

“அபாண்டன் ப்ளேஸ் னு சொன்னீங்களே, அது எக்ஸாட்டா எந்த இடம்?”

“எக்ஸாட்டா தெரியல டாக்டர். அவ எதுவும் சொன்னாளா?”

“இல்ல, பூச்சிகள பத்தி அவளோட எண்ணம் எப்படி?”

“வெரி ஸ்ட்ரேன்ஜ் டாக்டர். இன் ஃபாக்ட், நான் அல்ரெடி உங்கட அவள பத்தி சொல்லும்போது சொல்லிருக்கேன்னு நெனைக்குறேன். பூச்சி வளர்ப்புல அவ ரொம்ப ஆர்வமா இருப்பா. பூச்சிகளுக்கு ஒரு சரணாலயம் வைக்கனும்னு தான் அவளோட நீண்ட நாள் ஆசை. அவள பொறுத்தவரை, எந்த ஒரு பூச்சியையும் கொல்ல கூடாது. அந்த இரக்ககுணம் தான் எனக்கு அவகிட்ட ரொம்ப புடிச்சது. இவ்வளவு ஏன், என்ன கொசு கடிச்சதுன்னு அத அடிச்சு கொன்னேன். அத பாத்து அவளுக்கு திடீர்ன்னு கோவம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டா, கொசு கடிச்சா அத ஊதி விடனும் அடிக்கக்கூடாதுன்னு சண்ட போட்டா” என நான் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் என்னை கூர்ந்து கவனித்து , என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். 5 வினாடி அவர் கண்களை பார்த்த எனக்கு, சிந்தனையில் சிறு தடுமாற்றம் ஏற்படுவதை உணர முடிந்தது. அவர் கண்களில் சக்தி இருப்பது உண்மை தான்.

“சமீபத்துல அவ எப்போ விநோதமா நடந்துகிட்டா?”

“டாக்டர், இதெல்லாம் நான் உங்ககிட்ட கேக்கணும். இதென்ன எனக்கான டெஸ்ட்டா?”

“நீங்க லவ் பண்ணீங்கன்னு சொன்னீங்களே, அதான் எவ்ளோ புரிஞ்சு வச்சுருக்கீங்கன்னு?”

அவரது வார்த்தை என்னை சுருக்கென்று குத்தியது. அவர்மேல் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. என் நம்பிக்கையில் சிறு விரிசல் விழுந்தது, அவரது கேள்வியால்.

“டாக்டர், என்னோட வீட்டுக்கு பிசினஸ்மென் அடிக்கடி வருவாங்க. அந்த டைம்ல இவ வியர்டா நடந்துகிறது எனக்கு ரொம்ப தர்மசங்கடமா இருக்கு. சீக்கிரம் ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு ரிப்போர்ட் குடுத்தீங்கனா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.”

அவர் பார்வையிலும், உதட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதே எனக்கு பதிலாக கிடைத்தது.

4 மணி நேரத்திற்கு பின்,

“மஸ்டியன், இந்த வீடியோ வ பாத்துட்டு உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க.”

இங்க நம்ம அரங்கத்துக்கு வந்துருக்குறது சுப்ரமணியன் ராமசுவாமி, இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெம் செல் பயொலோஜி அண்ட் ரீஜெனரேட்டிவ் மெடிசின் இன் பெங்களூர்(Institute for stem cell biology and regenerative medicine). இன்டர்வியூக்கு முன்னாடி ராமசுவாமி பப்ளிஷ் பண்ண பேப்பர் பத்தி ஒரு ஏ.வி. இதோ உங்களுக்காக.

கரப்பான்பூச்சி…

கிட்டத்தட்ட 30 கோடி வருசத்துக்கு முன்னாடில இருந்தே கரப்பான்பூச்சி இந்த உலகத்துல வாழ்ந்துட்டு வருது. உலகத்துல 4500 வகை இருக்கு. அதுல மனித நாகரீகத்தோட சேர்ந்து வாழ்றது 15 ல இருந்து 20 வது தான். எல்லாவிதமான கால சுழற்சி, பல போர், அணுகுண்டுகளை தாண்டி வாழ்ந்துட்டு இருக்கு. அதுனால 1 மாசம் எதுவுமே சாப்டாம உயிரோட இருக்க முடியும். அதோட தலைய தனியா வெட்டி எடுத்தாலும் ஒரு வாரம் வர உயிரோட இருக்கும். எதுனாலயும் அத அழிக்கவே முடியாது. பெருகிகிட்டே தான் இருக்கும். 1000 கரப்பான்பூச்சி, ஆறே மாசத்துல 10,000மா பெருகிடும். இப்படி அற்புத வளர்ச்சி அடைந்த கரப்பான்பூச்சில இருந்து மருத்துவத்துல அடுத்த புரட்சி தான்,”கரப்பான்பூச்சி பால்.” ஆமா, கரப்பான்பூச்சி பால் தான். பசுபிக் பீட்டில் கரப்பான்பூச்சி வகை மட்டும் தான் குட்டி ஈனுது. அதோட பால் தான் உலகத்துலேயே அதிக ப்ரோடீன் நிறைந்த உணவு. ஏற்கனவே நைட்ரஜன தந்து காடுகளோட வளர்ச்சிக்கும், பூமியோட வாயுமண்டலத்துக்கும் பெரிய உதவியா இருந்த கரப்பான்பூச்சி, இப்போ நம்ம புரத சத்துள்ள உணவுலையும் பேருதவியா இருக்க போகுது.

ஏ.வி. பாத்தீங்க. இப்போ கரப்பான்பூச்சி பத்தின உங்களோட எண்ணம் மாறியிருக்கும்ன்னு நெனைக்குறேன். இப்போ டாக்டர்.ராமசுவாமி கிட்ட இத பத்தி இன்னும் டீடெய்ல்டா கேப்போம். டாக்டர்.ராமசுவாமி, காக்ரோச் பத்தி சொல்லுங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.