(Reading time: 21 - 42 minutes)

ன்னோட குஞ்சுகளை சாப்ட்டும்... பசி தீரல... ரொம்ப நாள் பசியோட இருந்தேன். காத்திருக்குறத தவிர... வேறு வழியில்லை எனக்கு... திடீர்ன்னு ஒரு அதிர்வு... பசி மயக்கத்துல இருந்த எனக்கு புத்துணர்ச்சி வந்தது... நான் காத்திருந்ததுக்கு பலனாய்... என்னோட வலைல ஒரு வண்டு சிக்கியது... மெதுவா போய்... அதோட ஒடம்புல என்னோட வெஷத்த ஏத்தி, என்னோட நூலால அத பின்னுனேன்...”

சாம்பிள் டேட்டாவ படிக்க படிக்க என் கண்கள் விரிந்தன. இதயம் படபடத்தது, உதடுகள் முணுமுணுத்தது. அங்கும், இங்கும் அலைந்தேன். சிகிச்சை முடிவடையும் வரை காத்திருக்க நேரமில்லாதவனாய் பதபதைத்தேன். சிகிச்சை அறையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

டாக்டரும், என் மனைவியும் வெளியே வந்ததுதான், உடனே டாக்டரிடம் சென்று, அவரை தனியே அழைத்தேன்.

“டாக்டர் என்ன ஆச்சு?”

“எல்லாம் விதவிதமான நினைவலைகள். அவ்ளோ தான்”

“என்ன சொல்றீங்க டாக்டர்?” எனது கேள்வியில் ஆச்சரியமும், வேகமும் இருந்தது.

சிறிது நேரம் அமைதியாக பார்த்தவர்,”80% உங்க மனைவிய குணப்படுத்துறது கஷ்டம். நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. முடிச்சுட்டு ரிசல்ட் பாப்போம். பாசிடிவ்வா இருந்தா ரிப்போர்ட் செர்டிபிக்கேட் தர்றேன். இல்லேன்னா 3 மந்த்ஸ்க்கு ட்ரீட்மென்ட் வர்ற மாதிரி இருக்கும்.”

இந்த முறை சுதாரித்து,”என்னோட வைஃப்ப நான் ரொம்ப லவ் பண்றேன். ஏதாவது பண்ணுங்க.”

“டைலூடட் செடடிவ் குடுத்துருக்கேன். மயக்க நிலைல தான் இருப்பாங்க.”

கே என்பதை கூட என் மனைவியை இழுத்துக்கொண்டே சொன்னேன்.வீட்டிற்கு சென்று அவளை தூங்க வைத்துவிட்டு என் லேப்பிற்க்கு சென்றேன். 5 வது கூண்டில் இருந்த ஆர்.178 ரோடென்ட்டை பார்த்தேன். ஆச்சர்யம் தான். வழக்கத்திற்கு மாறாக ஓடிக்கொண்டிருந்தது. அதீத வேகம்.களைப்பே இல்லை. 1 ஹவர் சாம்பிள் டேட்டாவை பார்த்து ஆடிப்போய்விட்டேன். எதோ ஒரு கேள்வி என் மனதிற்குள் எழுந்தது. என்ன? என்ன? என்ன? எதுவாக? வேகமாக ஓடிச்சென்று, எனது எம்.சி யை தூக்கத்தில் இருந்து விழிக்கச்செய்தேன். அதில் ஆம்ஸ்டர்(Hamster) என்று தட்டச்சு செய்தேன். அதன் விபரம் கிடைத்தது. எனக்குள் இருக்கும் குரூரம் மகிழச்சியில் பேருரூவெடுத்தது. இனி அதன் குரலை மட்டும் கேக்கலாம் என்று தோன்றியது. உறுதி, வைரத்தின் உறுதி என்னுள் வந்தது. நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று என் மனைவியுடன் படுத்தேன்.

தூக்கம் வரவில்லை. விட்டத்தை பார்ப்பதை தவிர வேறு வழியேயில்லை. நிலா வெளிச்சத்தில், ஜன்னல் வழியே மரங்களின் நிழல் எந்த அனுமதியுமின்றி, உள்ளே நுழைந்து விட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. அதன் நடுவில் ஒரு விட்டில் பூச்சி. பொதுவாக பகலில் செடிகளில் மட்டும் இருக்கும் விட்டில் பூச்சியை விட்டத்தில் பார்ப்பது வினோதமாக இருந்தது. அதன் உருவம் பெரிதாகவும் சிறிதாகவும் மாறி மாறி தெரிந்தது. அது தன் கண்களை அடிக்கடி துடைத்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தது. காற்றில் கிளை ஆட, கிளையின் நிழலில் மாறி மாறி அமர்ந்தது. அது பறக்கும்போது இறக்கை துடிப்பின் சத்தம், எரிச்சல் என் தலைக்குள். தலையணைக்கு அருகில். மாறி மாறி கேட்டது. திடீரென்று காதில் ஏதோ ஊறுவதை உணர்ந்தேன். “ஆ... காது, காது வலிக்குது… அம்மா…”

“என்னாச்சுங்க, என்னாச்சு. கனவுகண்டீன்களா?”

“இல்லடி. காதுல ஏதோ பூச்சி போயிருச்சு போல, காது வலிக்குது”.

“அப்டியா? அய்யயோ...”

த்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து எழுந்தேன். என் மனைவி தூக்கத்தில் கத்திக்கொண்டிருந்தாள். மிகவும் பதறிப்போய் தூக்கத்தில் புலம்பினாள், “இருங்க, இருங்க. நான் உங்க காத பாக்குறேன். ஆட்டாதீங்க” என்று. அவள் முகத்தில் வியர்த்து கொட்டியது. அவள் நெற்றியை அழுத்தி,”ஒண்ணுமில்லமா. எனக்கு ஒண்ணுமில்ல” என்று என் குரல் கேட்டதும், தூக்கத்தில் புலம்பிய அவளது குரல் சிறிது சிறிதாக வலிமையிழந்து, தூக்கத்தில் மூழ்கினாள். டேபிள் லைட்டை போட்டு அவளை பார்த்தேன். மிகவும் பயந்துபோயிருந்தாள். வியர்வை துளிகள் நெற்றியிலும், உதட்டின் மேலேயும் உதிர்த்திருந்தது. நான் முதன்முதலில் பார்த்த அதே தேவதை, அப்படியே இருந்தாள். காற்றில் விலகிய மாராப்பு, அவளது மார்பகம், முனுமுனுக்கும் உதடு. என்னுள் ஓடிய காட்சிகள்.முதல் முத்தம். முதல் தழுவல், அணைப்பு, இறுக்கம், கதகதப்பு, இடைவெளியில்லா நெருக்கம்.

“உன் மேல இச்சை இருந்தது. இருக்கு, இப்பயும் இருக்கு. எப்பயும் இருக்கும். தீராத இச்சை. தணியாத தாகம். இச்சையை உண்டு பண்ணும் உணர்ச்சியின் பிறப்பிடம் டெஸ்டோஸ்டிரோன் நீ தான். உன்னை பார்த்தால் எந்த ஒரு ஆண்மகனும் கலவியில் கலைஞன் ஆவான். நீ தித்திக்கும் தேன் மட்டுமல்ல, கண்ணைப்பறிக்கும் நவரத்தினம். தோற்றத்தில் மட்டுமல்ல. நீ யார்ன்னு உனக்கு தெரியாது. நீ யாரோட பொண்ணுன்னு உனக்கு தெரியுமா? டடாசி யனைக்கு(Tadashi Yanai) முறை தவறி பொறந்த பொண்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.