(Reading time: 21 - 42 minutes)

சொல்லுங்க மிஸ்டர்.ஈத்தன் (Ethan). இவங்க தான் உங்க வைஃபா?”

அவரது நேம் போர்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிரின்ஸ் ஜார்ஜ், டிகிரி இன் டி. சி. ஹெச்(DCH Degree).

“மிஸ்டர்,ஈத்தன்... இவங்க தான் உங்க வைஃபா?”

“யஸ், டாக்டர். ஷீ இஸ் மஸ்டியன், பல்மிரா மஸ்டியன் (Palmira Mustian)”

“ஹாய் மஸ்டியன். ஹவ் டு யூ ஃபீல் நவ்?”

“ஃபைன் டாக்டர்.”

“உங்களுக்கு திருமணமாகி எத்தன வருஷம் ஆகுது?”

“2 இயர்ஸ் டாக்டர்.”

“டு யூ ஹேவ் எ சைல்ட்?”

“நோ, டாக்டர்.”

“ஓகே, மஸ்டியன், நீங்க என்னோட வாங்க. மிஸ்டர் ஈத்தன். நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க.”

“உக்காருங்க மஸ்டியன். என்ன ப்ராப்ளம்?”

“தெர்ல டாக்டர். சரியா சொல்ல தெர்ல. என்ன அறியாமலே நான் ஏதேதோ பண்றேன்னு நெனைக்குறேன்.”

“ஓகே. இப்போ நான் உங்க நினைவளைகளுக்குள்ள போய், உங்களுக்கு என்ன ப்ராப்ளம்ன்னு பாத்து அத சரி பண்ண போறேன். இதுக்கு ஹிப்னோதெரப்பின்னு பேரு. இதுக்கு உங்களோட முழு ஒத்துழைப்பு வேணும்.”

“ஓகே. டாக்டர். சுயர்.”

“இப்போ கண்ண மூடுங்க. 5 ல இருந்து 1 வர எண்ணுங்க. அப்படி எண்ணும்போது உங்க தசைகள் எல்லாம் தளர்ந்து போகும். ஐயம் ரிலாக்ஸ்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே இருங்க. இப்போ உங்க உடம்பே உங்களுக்கு பாரமா இருக்குது. உங்களோட கைகள் இரண்டும் இப்போ மாறி மாறி தளர்வான நிலைக்கு போக போகுது. மஸ்டியன், இப்போ நீங்க 1 ல இருந்து 100 வர பொறுமையா மனசுக்குள்ளேயே எண்ணுங்க. இப்போ நீங்க நான் சொல்றத கேட்டுட்டு இருக்கீங்க. அதுனால என்ன ஆகுதுன்னா, உங்களோட உடம்பு ரொம்ப லேசாகி ஒரு நிம்மதி பிறக்குது. அதோட நீங்க ஆழ்ந்த உறக்கமற்ற நிலைக்கு போக போறீங்க. இப்போ நீங்க 100 ல இருந்து 1 வர பொறுமையா மனசுக்குள்ளேயே எண்ணுங்க, அதே நேரம் நான் 1 ல இருந்து 100 வர எண்றேன். அப்படி எண்ணும்போது என்ன ஆகும்னா, நீங்க என்ன உங்க ஆழ்மனதுக்குள்ள கூட்டிட்டு போறீங்க. அப்படியே ஆழ்மனதுக்குள்ள ரொம்ப ஆழமா போறோம்… சமீபத்துல நடந்த, உங்கள மனச பாதிச்ச விஷயத்துக்கு நாம போறோம். உங்கள சுத்தி பாருங்க, அந்த இடத்த அப்படியே உள்வாங்கிக்கோங்க. அந்த இடத்த உணருங்க, கண்ணுக்கு முன்னாடி கொண்டுவாங்க. இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“கிட்சன்ல... கிட்சன்ல இருக்கேன்.”

“வெரி குட். என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“சும்மா... நின்னுட்டு... இருக்கேன்... எந்த வேலையும் பண்ணல.”

“சரி, என்ன நடந்துச்சு அப்போ?”

“ உதட்டுல... என்னோட... உதட்டுல... எதோ ஊருச்சு…”

“என்ன அது?”

“கரப்பான்பூச்சியோட கால்... கரப்பான்பூச்சி… நான் அத சாப்டேன்.”

“ஏன் கரப்பான்பூச்சிய சாப்டீங்க? உங்களுக்கு பசியா இருந்ததா?”

“இல்ல… எனக்கு பசிக்கல... ஆனாலும் சாப்ட்டேன். ஏன்னா..., கரப்பான்பூச்சி மேல... எனக்கு ஒரு வெறி.”

“அந்த வெறி எதுனால வந்துச்சு? கரப்பான்பூச்சினால உங்களுக்கு எதுமாச்சா?

“ இல்ல... எனக்கு தெரியல”

“கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க.”

“தெரியல”

“சரி, இப்போ நீங்க ஒரு காட்ல இருக்குறதா கற்பனை பண்ணிக்கோங்க. உங்கள சுத்தி மரம், செடி, எல்லாம் இருக்கு. காட்டுக்கே உரித்தான நிசப்தம் இருக்கு. அத உங்க கண்ணு முன்னாடி கொண்டுவாங்க.”

“என்னால காட்டுக்குள்ள... இருக்குற மாதிரி உணர முடியல”

“உணர வேணாம். காடு கற்பனை பண்ணுங்க போதும்.”

“கற்பன பண்ண முடியல”

“சரி, இப்போ நீங்க உங்க ஆத்மாவோட நினைவலைகளுக்குள்ள ஆழமா போக போறீங்க. உங்களுக்கு படிப்படியா வயசு குறைய போகுது. அப்படியே குறைஞ்சு குறைஞ்சு குறைஞ்சு குறைஞ்சு நீங்க சின்ன பிள்ளையா இருக்கீங்க. அந்த பருவத்துக்கு வாங்க.”

“ இல்ல... என்னால முடியல.”

“நான் 1,2,3 சொல்லிட்டு கை தட்ட போறேன். அப்போ நீங்க, இப்போ நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு இந்த உலகத்துக்கு வர போறீங்க. 1,2,3. க்ளாப்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.