நீ பொறந்ததும் உங்க அம்மா செத்துட்டாங்க. உன்ன ரொம்ப சீக்ரெட்டா வச்சுருந்திருக்காங்க. உன்னோட சொத்து எவ்ளோன்னு தெரியுமா? நீ படிச்சு முடிக்குற வரைக்கும் உன்னோட செலவு எல்லாம் உனக்கு ஸ்பான்சர்ஷிப் மூலமா உனக்கு வந்தது. உங்க அப்பா, ஒரு நம்பிக்கையான ஆள் கிட்ட பணத்த குடுத்து, அவர் இன்னொருத்தர உனக்கு கார்டியனா வச்சு, உன்னோட கார்டியன் அவரோட ப்ரண்ட்ஸ உனக்கு ஸ்பான்சர் பண்ண வச்சு உனக்கு பணம் வந்துருக்கு. உங்க அப்பா செத்ததும் உனக்கு சொத்துல பங்கு வர்றதா உயில்ல இருக்கு. உன்னோட துரதிர்ஷ்டம் உங்க அப்பா செத்ததும், உன்னோட கார்டியன் செத்துட்டாரு. அவ்ளோ பணம் உன்கிட்ட வந்தா, நீ என்ன பண்ணுவ பூச்சி அது இதுன்னு போவ. அதான் இதெல்லாம், நூட்ரோபிக்(Nootropic). நான் உன்ன லவ் பண்ணேன். பண்றேன். அதே சமயம் காசு. பணம். பணம் எங்க இருக்கணுமோ அங்க தான் இருக்கணும். புரியலையா. புரிதலுக்கு ஒரு வரையறை இருக்கு மஸ்டியன். பல்ப் எப்டி எரியுது, கரென்ட்னா என்னனு பல்லிக்கு புரியாது. கரென்ட் இருந்தா, சுவிட்ச் போட்ட பல்ப் எரியும். எலெக்ட்ரான்னா என்னனு படிக்காதவங்களுக்கு புரியாது. எலக்ட்ரான் ஏன் நியுக்ளியஸ சுத்தி வருதுன்னு படிச்சவனுக்கு புரியாது. ஆடோம் எப்டி வந்துச்சுன்னு யாருக்கும் புரியாது. அதோட சக்தி யாருக்கும் எப்பயும் புரியாது. நீ இப்போ படிக்காதவனோட நிலைமைல இருக்க. ஏதோ இருக்குன்னு உனக்கு புரியும். அவ்ளோ தான். நாளைக்கு மட்டும் நீ மென்டல்லி இல் னு சர்டிபிகேட் குடுத்தா போதும். அது போதும்." என்று அவளிடம் பேசிவிட்டு, நான் நினைத்தது நடக்க போகிறது என்ற நிம்மதியில் தூங்கினேன்.
அடுத்த நாள் காலை, எனக்கு முன்பே என் மனைவி எழுந்து, வீட்டில் எல்லா வேலைகளும் முடித்துவிட்டுத் தயாராக இருந்தாள். எனக்கு சற்று ஆச்சர்யமாகத் தான் இருந்தது. நான் எழுந்ததும், "சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க, டாக்டர் பாக்க போகணும்ல"
அவளே கூப்பிடுகிறாள், நூட்ரோபிக் சொல்யூசன் குடுத்த ரோடென்ட்டோட ஆக்ட்டிவிட்டீஸ் பாத்துட்டு தான், இவளுக்கு அத குடுத்தேன். செடடிவ் குடுத்ததுக்கு அப்பறம் ரோடென்ட், ஆம்ஸ்டர்ரா மாறிருச்சு. ஆனா இவ நார்மலா மாற வாய்ப்பில்லையே என்று மனதிற்குள் கூறிக்கொண்டே வேகமாக தயாராகி, அவளுடன் கிளினிக் சென்றேன்.
"டாக்டர் வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அதுவர நீங்க இந்த ரூம்ல வெய்ட் பண்ணுங்க."
ஆர்வம் தாங்க முடியாமல், மனைவியை வெய்ட் பண்ண வைத்து, நிமிட முள்ளின் சில துடிப்பிற்கு வாசலையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு டாக்டரின் திடீர் வருகை பதட்டத்தையே பரிசளித்தது. அவரை அப்படியே வழிமறித்து, "டாக்டர், என் வைஃப்?"
எதுவுமே பேசவில்லை. அமைதியாக போய் இருக்கையில் அமர்ந்தார்.
"டாக்டர், என் வைஃப்க்கு ட்ரீட்மென்ட் எப்போ முடியும்? எப்போ ரிப்போர்ட் குடுப்பீங்க?"
"நீங்க நல்ல நடிகன் மிஸ்டர்.ஈத்தன்"
"டாக்டர் என்ன சொல்றீங்க?"
"இதெல்லாம் எதுக்கு பண்ற, பணத்துக்காகவா? உன் கண்ணையும், முக பாவனையும் வச்சு நீ உண்மை பேசுறியா, போய் பேசுறியான்னு என்னால சொல்ல முடியும். என்கிட்டே வா"
அவரது பேச்சை புரியவே எனக்கு சில வினாடிகள் ஆனது. பல்லை கடித்துக்கொண்டே "டாக்டர்" என்று உறுமினேன். என் ஆழ்மனதில் இருந்த வில்லன் சிரிப்பை உதிர்த்தான்.
டாக்டரிடம் எந்த மாற்றமும் இல்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் உதட்டில் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. "டாக்டர், இனிமேல் இந்த மாதிரி காமெடி பண்ணாதீங்க. அது உங்களுக்கு நல்லதில்ல"
"ம். இது டெஸ்ட் ஈத்தன்."
"நீங்க டெஸ்ட் பண்றதுக்கு நான் ஒண்ணும் ரோடென்ட்டியா கிடையாது, ஹோமோ சேப்பியன்ஸ். இன்னொரு தடவ நீங்க இந்த மாதிரி பேசுனீங்கன்னா... சும்மா பேசித்தான் பாருங்களேன்."
"ரிலாக்ஸ். ஈத்தன். ரிலாக்ஸ். உங்க வைஃப் கேஸ் ரொம்ப இண்டென்ஸ்ஸான கேஸ். உங்க கிரெடிபிலிட்டிய செக் பண்ணத்தான் டெஸ்ட் பண்ணேன்."
"என்ன டெஸ்ட் பண்றத விட்டுட்டு என் வைஃப்ப டெஸ்ட் பண்ணுங்க. அதர்வைஸ் யூ வில் சீ த கான்சிகுயன்சஸ்"
"ஓகே. ஈத்தன், ஐ வில் டூ த ட்ரீட்மென்ட் அண்ட் கெட் பேக் டு யூ சூன்" என்று சொல்லிவிட்டு என் மனைவியை பார்க்க சென்றார்.
"டாக்டர் என்னோட ஹஸ்பண்ட்டோட நிலைமை இப்போ எப்டி இருக்கு?"
"அவரோட வழில போய் அவர குணப்படுத்தனும். அதான் ட்ரை பண்றேன்."
"ஓகே. டாக்டர். எப்டியாவது என்னோட ஹஸ்பண்ட்ட க்யூர் பண்ணிருங்க. அதுக்காக நான் என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றேன்."
டாக்டரின் உதடுகள் எதோ சொல்ல, இல்ல கேக்க துடித்தன. அதை கட்டுப்படுத்தி தன் மனதிற்குள்,"அழக பறிக்குறவன் நான் இல்ல, அழகோட சேர்ந்து வாழணும்னு ஆசபடுறவன். உன்ன பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன். இந்த வார்த்தைக்காக தான் காத்துருந்தேன். இது போதுமே எனக்கு, நான் உன்ன..."
பி. கு:
DCH - The Doctor of Clinical Hypnotherapy (DCH) degree
Mustian - Natsumi - Tsunami (Anagrams)
G.H.B - Gamma Hydroxybutyrate (C4H8O3) also called as Liquid X, Liquid Ecstasy, Great Hormones at Bedtime
This is entry #110 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுப்பக்கம்
எழுத்தாளர் - பவ்யஸ்ரீ
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.