(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 111 - கணவனின் மறுபக்கம் - லேகா

This is entry #111 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம் / சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - லேகா

Hearts apart

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

சந்தோசம் துளியும் இல்லை அவள் முகத்திலும் மனத்திலும். எவ்வாறு இருக்கும்? அவளது கனவிலும் நினைவிலும் வேறொருவன் நிறைந்திருக்கிறானே!

அவனை சென்றடைய அவள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு தடுத்த தன் பெற்றோரை பார்த்தாள் நிலாமிகா. அவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தார் போல அவளது தாயார். ‘ஏதாவது ஏடாகூடமா செய்தே, எங்களை நீ மறந்திடுஎன்று யாரும் அறியா வண்ணம் சைகை செய்தார் அவர்.

உங்களது இந்த மிரட்டலுக்காகத்தானே நான் இங்கே உயிருள்ள சிலையாக அமர்ந்திருக்கிறேன்?’ என்று நினைத்துவிட்டு, தனக்கு அருகே அமர்ந்திருப்பவனைக் கண்டாள்.

அருகில் இருந்தவன், நண்பன் போலும், ஏதோ காதில் சொல்ல, மெலிதாக சிரித்துக்கொண்டிருந்தான் அவன். அந்த மாயக்கண்ணனை நினைவுபடுத்தியது அவனது நகை. நிலாமிகா ஆண்களுக்கு போடும் மதிப்பெண்ணில் (சைட் அடிக்கும்போது) நூற்றுக்கு நூற்றைம்பது சிரமமே இல்லாமல் பெற்றிருப்பான், வேறு சமயமாக இருந்திருந்தால். ஆனால் இப்போது, அவனுக்கு -1000 தாராள மனதோடு அளித்திருந்தாள் அவள். அவ்வளவு பாசம் அவன் மேல்!!!

சிறிது நேரத்தில் ஐயர் தாலியை தாம்பூலத்தில் அளிக்க, அதனை வைத்திருந்த தேங்காயை எடுத்து அவனை நோக்கி எறிய நீண்ட கைகளை அடக்கி அமர்ந்திருந்தாள் நிலாமிகா. உற்றார் உறவினரின் ஆசியோடு அவளை தன்னவளாக்கிக் கொண்டான் அவன், அவள் மனதில் எரியும் தீயின் வெண்மை தெரியாமல்.

சில பல காரணங்களால் அவனுக்கு அடுத்த நாளே கிளம்ப வேண்டியிருந்ததால், நிலாமிகாவும் அவனுடனேயே செல்ல வேண்டியிருந்தது. அது அவளுக்கு ஒரு நிம்மதியையே தந்தது. அனைவருக்காகவும் நடிக்க வேண்டியிருக்காதல்லவா?

டுத்த நாள் அவனது வீட்டுக்குள் நுழைந்ததும், பாப்கார்னைப் போல பொரிந்தாள் அவள்.

ஹலோ மிஸ்டர்! என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசிலே? நான் உங்கிட்டே என்ன சொன்னேன்? நீ என்ன செய்திருக்கே? என்னை பிடிக்கலைன்னு சொல்ல சொன்னேனா இல்லையா? ஆனா, நான் சொன்னது எதுவுமே கேட்காம இப்படி செய்துட்டியே! உன்னை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைன்னு தெரிஞ்சும் ஏன் என்னை திருமணம் செய்தே?” என்று அவனை கேள்வியால் உலுக்கினாள் அவள்.

சிரித்துக்கொண்டே திட்டி முடிச்சாச்சா? முதலில் என் பெயர் மிஸ்டர் இல்லை. இலக்கியவாணன். எங்கே சொல்லு பார்ப்போம்?” என்று அவளுக்கு பயிற்சி எடுக்க ஆரம்பித்தான் அவன்.

ரொம்ப முக்கியம்என நினைத்து அவனை கொலைவெறியுடன் பார்த்தாள் நிலாமிகா. ஆனால், அவளது உக்கிரப்பார்வைக்கு எல்லாம் பயப்படுபவனாக தெரியவில்லை அவன்.

இதுக்கெல்லாம் பயப்பட்டா மாமனால உன்னை சமாளிக்க முடியுமா?” என்று புன்னகையுடன் கேட்டு வேறு வைத்தான். அவனை அடிக்க ஏதேனும் வலி தருமாறு பொருளை அவள் தேட, விரைவாக உன் அறை அங்கே இருக்குஎன்று வலதுபுறம் உள்ள ஒரு அறையைக் காட்டிவிட்டு அவன் அதற்கு எதிரே இருந்த அறையினுள் புகுந்து கொண்டான். கடைசியில் அங்கே தனியாக சுவரை பார்த்துக்கொண்டு நின்றது நிலாமிகா மட்டும்தான்.

சிறிது நேரம் கழித்து அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்து தன் நிலையை நினைத்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் அவள்.

இப்போது கூட அவள் நினைத்தால் அவனிடம் செல்ல முடியும் தான். ஆனால், இப்போது அவனது காதலி அல்லவே? இதோ, இங்கே உள்ளறையில் இருக்கும் இவனுக்கு மனைவியும் தானே? “என்ன கொடுமை நிலா இது?” என்று அந்த சூழ்நிலையிலும் அவளை கலாய்த்தது மனம்.

மறு மனமோ, “அன்னைக்கே நான் எவ்வளவு சொன்னேன்? நான் சொன்ன எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு, என் அப்பாகிட்ட வந்தும் சரின்னு சொல்லிட்டான். இவனை…” என்று பல்லைக் கடித்தது. பின்பு உள்ளிருப்பவனை அடிக்கவா முடியும்?

தன் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டே சோஃபாவில் சாய்ந்தவள் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள், அழுகையினூடே.

று நாள் அவள் துயில் கலைந்து எழுந்தபோது மணி எட்டரை. அவளது கணவன் அலுவலகத்திற்கு செல்ல தயாராக்கொண்டிருந்தான்.

என்னடாஇங்கேயே தூங்கிட்டியா? உள்ளே போய் படுத்துருக்கலாமே? சரியா தூக்கமே கிடைச்சிருக்காது. சரி. இட்லி வாங்கி வெச்சுருக்கேன். சாப்ட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு. நான் ஈவினிங் வந்ததும் வெளிய போகலாம். ம்ம்ம்?” எனக் கேட்டு அவள் முடிவும் தானே எடுத்துச் செல்லும் கணவனைக் கண்டு மேலும் கடுப்பானாள்.

அந்த நாள் முழுவதும் அவளது ஆருயிர் கணவனுக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதிலேயே சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.