(Reading time: 14 - 27 minutes)

டன் புரிந்தது அவளுக்கு. காயமிட வேண்டியது அவள் மனதிற்கு மட்டுமல்ல. இவனுக்கும்தான். அவளின் காயத்திற்கு அவன் மருந்திட்டுவிட்டான். அது இப்போது வடுவாக மாறிவிட்டது. இனி அதனால் வலி ஒன்றுமில்லை. ஆனால், இவன் மனதில் உள்ள காயம்? அது இன்னும் புதிதாக இருக்கிறதே! அதற்கு மருந்திட அவளால் மட்டுமே முடியுமல்லவா?

மனம் அவளை வழிநடத்த, மெல்ல நடந்து அவன் அருகே அமர்ந்தாள். முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தான் அவள் கணவன். மெதுவாக அவன் கரங்களை விலக்கினாள். உடன் அவள்மீது சாய்ந்துகொண்டு அழுதான் அவன்.

யார் கூறியது ஆண்கள் அழக்கூடாதென்று? இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றல்லவோ? அவ்வாறிருப்பின் ஆண் பெண் என எதற்கு பாகுபாடு? பெண்களுக்கு சில வகையில் கட்டுப்பாடென்றால், ஆண்களுக்கும் சில வகையில். யார் விதித்தது இதை?

எத்தனையோ நாட்கள் அவள் ராமை நினைத்து அழுதிருக்கிறாள். அப்போதெல்லாம் இவன் அடுத்த அறையில் இவளது அழுகுரலைக் கேட்டுக்கொண்டு எவ்வாறு இருந்தானோ?

மனம் வலித்தது அவளுக்கு. “அழட்டும்! அவன் துன்பம் தீரும்வரை அழட்டும். அதிலாவது இவன் மனபாரம் குறைந்து சிறிது தெளிவடையட்டும். அதன்பின் நான் இருக்கிறேன் இவனுக்கு. இனி இவன் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் கைத்தலம் பற்றி பின் தொடர நான் என்றும் இருப்பேன்என்று வாக்குறுதி அளித்தாள் நிலாமிகா.

எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தனரோ, இருவருமே அறியவில்லை. சுவர்கடிகாரம் பத்தடித்து ஓய, தன் நிலைக்கு வந்தான் இலக்கியன். தீயைத் தீண்டினாற்போல் அவளை விட்டு விலகி நின்றான் அவன்.

சாரிஎன்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு வெளியே விரைந்து சென்றான். அன்று இரவு முழுவதும் வீடு திரும்பவே இல்லை அவன்.

ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான்? நான் அவனை விலக்கவே இல்லையே?” என தனக்குள்ளேயே கேட்டாள். “ஆனால், அவன் மீது உனக்குள்ள நேசத்தை நீ சொல்லவும் இல்லையே!” என அவளை மடக்கியது மிஸஸ் மனசாட்சி. “ஓஓஇதான் விஷயமா!” என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நிலாமிகா.

அவனுக்கும் தன் மீது சிறிதேனும் ஈடுபாடு கட்டாயம் இருக்கும். அதனை தடுத்து நிறுத்துவது, அவள் ராமின் காதலியாகவே அவனுக்கு தெரிவதால் தான். அதனை முதலில் தகர்க்க வேண்டுமென்றால் அவள் மாறவேண்டும், இலக்கியனின் மனைவியாக முற்றிலும் மாற வேண்டும். அவன் துன்பம் தீரவும் இதுவே வழி.

இதுவரை நிலாமிகாவிற்கு துணையாக இலக்கியன் இருந்தான்; அவளின் துன்பங்களை தாங்கிக்கொள்ள என்றும் தோழனாக உடனிருந்தான். ஆனால் அவனுக்கு? அவனுக்கும் ஒரு தோழமை அவசியம்; என்றும் உடனிருக்க ஒரு உறவும் வேண்டும். அத்தகைய ஒரு உறவாக தான் இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள் அவள். நிலாமிகாவின் இந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். நிலாமிக்காவிற்கு நிழலாய் இலக்கியனும், இலக்கியனின் செய்கைகளை உரையில்லாமலே உணர்பவளாய் நிலாமிக்காவும் நிச்சயம் மாறுவார்கள்.

மை டியர் ஃப்ரெண்ட்ஸ், இதோ அடுத்த கதை. படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களே எங்களை செதுக்கும் உளி! Thank you!

 

This is entry #111 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம் / சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - லேகா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.