(Reading time: 14 - 27 minutes)

ன்று மாலை வந்தவுடன், “என்ன நீ? இன்னும் ரெடியாகலையா? சீக்கிரம்மாகோவிலுக்கு போயிட்டு, அப்படியே சாப்பிட்டு வந்துடலாம்என்றான்.

முதல் நாளிலிருந்து அவன் தன்னை பேசவே விடாமல் செய்த ஆத்திரம் எல்லாம் பொங்கி வர, “என்னை நிம்மதியாவே விட மாட்டீங்களா? ஒவ்வொரு நிமிஷமும் என்ன செய்யனும்னு சொல்லி அதன்படி செய்ய வெச்சுட்டே இருக்கீங்க?” என்று பொரிந்தாள் நிலாமிகா.

அவள் கூறுவதை அமைதியாக கேட்ட இலக்கியவாணன், “முடிச்சிட்டியா? வீட்டில் காய் கறி எதுவுமே இல்லை. வாங்கிட்டு வந்து சமைக்க லேட்டாகிடும். இதுவரைக்கும் நாம வெளியே எங்கேயும் போனதில்லை. அதான், உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்படியே வர்ற வழியில் சாப்பிடலாம்னு கேட்டேன்என விளக்கம் தந்தான்.

அவன் கூறியதைக் கேட்டவளின் மனம், ‘இப்பவும் நீதான் அவுட்டுஎன கமெண்ட்டடித்தது.

அவனோடு போகலாமா? வேண்டாமா? என்று அவள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, “நீ வரலை போலவே? சரிம்மா. நானே போய்க்கிறேன். நீ கதவை பூட்டிட்டு தூங்கு. எங்கிட்ட இன்னொரு சாவி இருக்கு. அதை வைத்து திறந்துக்குவேன்என்று அவளிடம் ஒரு சாவியை தந்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

தனக்கு பார்சல் வாங்கி வருவானோ? என்று எண்ணியிருந்தவளின் எண்ணத்தை தூங்குஎன்ற அவனது சொல் தவிடுபொடியாக்க, “இப்போ அவனோடு போகலைன்னா பட்டினி. உன் கோபத்தை விட்டுட்டு என்னைப் பாரும்மாஎன்று அவளது வயிறு கெஞ்சியதன் பலனாய், தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடி அவனுக்கு முன்பே சமர்த்தாய் காரினுள் அமர்ந்து கொண்டாள் நிலாமிகா.

அவளது செய்கையைக் கண்டு வீட்டை பூட்டிவிட்டு சிரிப்புடனே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினான் இலக்கியன்.

அரைமணி நேரத்திற்கு பின்பு, அந்த புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்துகொண்டிருந்தனர் இருவரும். கையில் குழலை ஏந்தி அதனை இசைத்தபடி நின்றிருந்த அந்த கண்ணனைக் காண்கையில் அவள் மனதின் சீற்றம் சிறிது மட்டுப்பட்டது போலிருந்தது நிலாமிகாவிற்கு. ஒரு சுகந்தமான உணர்வுடன் அந்த கோவிலில் இருந்து புறப்பட்டனர் இருவரும். ஆம், இலக்கியனுக்கும் அதே நிலை தான்.

அதன்பின் இருவரும் உணவகத்தில் உணவருந்தியபோதும் சரி, மளிகை வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போதும் சரி, நிலாமிகா கடுமையாக அவனிடம் எதுவும் கூறவில்லை. இது புரிந்த இலக்கியனும் எதுவும் பேசி அந்த சூழலை கெடுக்க விரும்பாமல் வீட்டை நோக்கி செலுத்தினான் தன் வாகனத்தை.

சமையலறையில் வாங்கி வந்த அனைத்தையும் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தவனுக்கு கேட்காமலே உதவியும் கிடைத்தது அவளிடமிருந்து. அவன் செய்ய, தான் பார்த்திருக்கிறோமே என்ற உறுத்தலால் வந்த உதவி அது.

உறங்க தன் அறைக்குச் செல்லும் முன், “காலைல நானே சமைச்சுடுறேன்என்றவனிடம் நானே செய்துடறேன்என்று சொல்லவும் வைத்தது அது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையசைத்தான் அவன்.

தன்பின் வந்த நாட்களில் நிலாமிகா வீட்டின் பொறுப்புகளை கவனித்துக்கொள்வதும், ஓய்வு நேரங்களில் இலக்கியனும் உடனிருந்து அவளுக்கு உதவுவதும் இருவருக்குமே வழக்கமாகிப்போயின. அவ்வப்போது இருவரும் பேசி சிரித்துக்கொள்வதும் உண்டு.

அவனோடு பழகியபோது பல சந்தர்ப்பங்களில் அவள் மனதை கொள்ளை கொண்டான். சில சமயங்களில், விரும்பியே அவனிடம் தன் மனதை தொலைத்தாள் நிலாமிகா எனலாம். அவள் காதலன் அவள் எண்ணத்திலிருந்து வெகு தொலைவிற்கு சென்றிருந்தான். தன் இந்த மாற்றத்தை அவனிடம் எப்படி சொல்வதென்று தடுமாறிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த உண்மை அவளுக்கு தெரிய வந்தது.

ஸ்டோர் ரூமில் ஒரு நாள் இலக்கியனின் சிறு வயது புகைப்படம் கிடைக்குமா என்று குடைந்து கொண்டிருந்தாள் நிலாமிகா. கிடைத்தது, அவனும் அவள் காதலன் ரகுராமும் சேர்ந்திருந்த படம். காலின் கீழே பூமி நழுவியது அவளுக்கு. பல மாதங்களாக தலைகாட்டாத கோபம், இப்போது முற்றிலுமாக அவளை ஆட்கொண்டிருந்தது. இலக்கியன் மாலை வந்ததும் அவனிடம் அதனைக் காட்டிக் கேட்டாள்.

உங்களுக்கு ராமை முன்பே தெரியுமா?”

சிறிது நேரம் பதிலில்லை அவனிடமிருந்து. கடந்தகால நினைவுகளில் தொலைந்திருந்தான். அவன் கண்கள் வெளியேறத் துடித்த கண்ணீரை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தன. தன்னையே அனல் கக்கும் பார்வையுடன் பார்த்திருந்த மனைவியைக் கண்டு ஒரு பெருமூச்சை உள்ளிழுத்து, “ஆம்என்றான்.

ஏன்?” அவளது ஒற்றை கேள்வியில் அவள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் அடங்கிப்போனது.

அவளுக்கு எல்லாம் தெரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதால், தன் அறையினுள் சென்று அந்த கடிதத்தை எடுத்து வந்து அவள் கைகளில் திணித்தான். பல முறை பிரித்து மடிக்கப்பட்டு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தது அந்த கடிதம். முகத்தில் கேள்வியுடன் கணவனின் முகம் நோக்கினாள் பெண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.