(Reading time: 12 - 23 minutes)

2017 போட்டி சிறுகதை 112 - நலம் நலமறிய ஆவல் - ஷிவானி

This is entry #112 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ஷிவானி

Ghost Trees

திரவனின் கனல்வீச்சில் மண்ணும் பொன்னாக ஜொலித்துக் கொண்டிருந்த மதியநேரமது. தூரத்தில் மரண ஓலத்தோடு ஒலித்தது ஒருக்குரல், “வேண்டா…… வேண்டா…… என்னை விட்டுடுங்க, நான் எந்த தப்பும் செய்யலை, தயவுசெஞ்சி என்னை விட்டுடுங்க, வேண்டா…… அய்யோ என்னை வெட்ரானுங்களே……, யாராவது என்னை காப்பாத்துங்களே……. ‘வலிக்குதுடா, என்னை விட்டுடுங்கடா, உங்க கால்லகூட விழற, என்னை விட்டுடுங்க’. அய்யோ வெட்ரானுங்களே, என்னை காப்பாத்துங்களே……. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா? கடவுளே! நீயாவது என்னை காப்பாத்துப்பா”……… என்றவாறு தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தது.

செவி கிழிக்கும் அவனின் அவல குரல் கேட்டு அங்கு வந்தனர் சிலர். அவர்களை கண்ட அவனின் கண்களில் எழுந்ததொரு நிம்மதியின் உருவம். “காப்பாத்துங்க”…….. என்றவாறு அவர்களை கண்டான். ‘இவர்கள் நம் இனத்தவர், எனவே நம்மை காத்து விடுவர்’ என்ற எண்ணம் அவனின் மனதில் நிம்மதி மழையாய் தூறத்துவங்கிய கணமே, வந்தவர்களின் மௌனம் காற்றாய் வீச, அதில் அவனின் நம்பிக்கை மேகமும் கலைந்து, நிம்மதி மழையும் நின்றது.

“என்ன பாக்கறீங்க? வந்து இவங்க கிட்டயிருந்து என்ன காப்பாத்துங்க. வாங்க”…….. அய்யோ வலிக்குதே……… “நீங்க ஏன் பாதுட்டே நிக்கறீங்க? நான் கத்துறது உங்களுக்கு கேக்கலையா? இல்ல என்னோட வலி உங்களுக்கு புரியலையா? தயவுசெஞ்சி என்ன காப்பாத்துங்க” என்ற அவனின் மரண நேரத்து அழுகைக்கும் மனமிரங்காதவராய், அசையாது நின்ற தன் இனத்தவரின் அமைதி அவனிர்க்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

கேட்பவரின் மனதை அச்சுருத்தும், அந்த பதற்றம் நிறைந்த கெஞ்சலான வார்த்தைகளை சிறிதும் பொருட்படுத்தாது அங்கு நிகழ்ந்தேறியது அந்த கொலை. முழுவதுமாய் வெட்டி வீசினர். அவனின் உடலை துண்டுகள் போடவும் துவங்கிவிட்டனர். உடல் விட்டு உயிர் பிரிந்தபின், உடலின் வலி உயிரை சேர்வதில்லை என்ற உண்மை அறியாது தவிக்கும் சராசரி உயிராய், பூலோக மாயையில் சிக்கியவன் தனது அங்கங்களின் வலி உணர்ந்தவனாய் கற்பனைக்கொண்டு அழுதான். அவனை பார்த்துக் கொண்டிருந்த அவனின் இனத்தவரின் கண்களில் காவியமாய் பாய்ந்தோடியது கண்ணீர்.

உயிர் பிரியும் வலியை, உன் பிரிவில் கண்டேன் என்ற வார்த்தையின் உண்மையான விளக்கத்தை கண்டவர்களாய் நின்றனர். தான் இன்னும் ஜீவித்து இருப்பதாய் நினைத்து, தன் உடலின் பாகங்களை கண்டு, “அய்யோ வலிக்குதே”……… என்று அழுத அவனின் புலம்பல் வார்த்தைகள், ‘இதுவரை அவர்களின் நெஞ்சத்தில் இருந்தது “இரக்க குணமல்ல, அது அரியாமை பேய்” என்ற எண்ணத்தை விதைத்தது. அவனின் இளம் வயது, உறுதியான உடல், நிதர்சனத்தை உணராத அழுகை இவை அனைத்தும் அவர்களின் இத்தனை காலத்து உறுதியான முடிவிற்கு ஓர் முடிவாய் ஆனது.

மனித இனத்தின் மேல் தாம் இதுவரை காட்டிய அன்பு, அக்கரை, அமைதி, பொருமை, தோழமை, நல்லென்னமென அனைத்தும் இன்று சுழல் காற்றில் சிக்கிய பூவிதழாய் ஆனதை உணர்ந்தனர். மாற்றத்திற்கு உறிய நேரம் இதுவே என்று அனைவரும் தம் மனங்களில் ஒருங்கேர நினைத்தனர். தன் கண்களின் கண்ணீரை துடைத்தவாறு கூட்டத்திலிருந்து வந்தவன், “அழுவாத தம்பி” என்று கூறினான். “என்னது தம்பியா? இத்தனபேர் இருந்தும் ஒருத்தர் கூட என்னை காப்பாத்த முன்வரலை, இப்பொ நான் உனக்கு தம்பியா தெரியிரனா? வலிக்குதுடா”………… என்று வேதனை நிறைந்த, கோபமான வார்த்தைகளை போர்வீரனின் வில்விட்டு பாய்ந்த தொடர் அம்புகளாய் பாய்ச்சியவன் தொடர்ந்து அழுதான்.

கூட்டத்தின் தலைவரும், முதியவருமானவர் அவனை நோக்கி நடந்தவாறு, “சொல்றதை கேலுபா, அழுவாத. இனி அழுது எதுவும் ஆகபோரது இல்லை”……… என்று கூறினார். அவரின் வார்த்தையை உதாசீனம் செய்தவனாய் தொடர்ந்து அழுதான். ‘தனது இத்தனைக்கால பொருமையே இவனின் இன்றைய தவிப்பிற்கு காரணம்’ என்று நினைத்தவர், நிதர்சனத்தை விளக்குவதன் மூலம் அவனின் அழுகையை நிறுத்த இயலும் என்று எண்ணி அவனின் அருகில் சென்று நின்றார். “உன்னோட இந்த நிலைமைக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணம்தான், என்ன மன்னிச்சிடுபா” என்று தனது வயதையும் பொருட்படுத்தாது, தன் தவறிற்காக வருந்தி மனமார மன்னிப்பு வேண்டினார்.

நீ என்னோட பேரன் மாதிரி, உன் கண்ணீர்க்கு காரணமானவுங்களை நான் தண்டிக்காமல் விடமாட்டேன். நீ அழுவுரதை நிறுத்து, ஏன்னா? நீ இப்பொ உயிரோடவே இல்ல, உனக்கு வலிக்கிறத நீ நேனக்கிறதெல்லாம் உன்னுடைய ப்ரமை” என்றார். “என்னது? நான் செத்துடேனா”??? என்றவனின் குரல் உயர்ந்தது. தனது இறப்பை ஏற்க இயலாமல் “நா உங்களை நம்ப மாட்டேன், நீங்க பொய் சொல்றீங்க. நா இன்னும் உயிரோடுதான் இருக்கேன், என்னை வெட்டியவர்களை ஏன் தடுக்களைனு கேட்டு நான் உங்க எல்லோரையும் திட்டினதை மனசுல வச்சிட்டு, நீங்க இந்தமாதிரி பேசரீங்க. பொய் பொய்” என்று கதரினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.