(Reading time: 4 - 8 minutes)

2017 போட்டி சிறுகதை 118 - கணவனின் மறுப்பக்கம்! - சரளா சத்யராஜ்

This is entry #118 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுப்பக்கம்!

எழுத்தாளர் - சரளா சத்யராஜ்

Baby

ன்ன சத்தம் இந்த நேரம்.... மலரின் ஒலியா.... என்...

அழைத்த தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான் மகேஷ்!

மறுமுனையில் பேசிய நபர் ஏதோ சொல்ல சொல்ல மகேசின் முகம் இருகியது!

அவசர அவசரமாக அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் மகேஷ்!

"கா.... மகா.... "

" என்னங்க???? ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டு இருக்கிங்க?

உடம்புக்கு ஏதாச்சும் முடியலயா "

சொல்லிக்கொண்டே அவன் நெற்றியை தொட போனவள் கையை தடுத்து அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தான் மகேஷ்!

" என்னங்க என்னாச்சி... ஏன் இவ்வளோ கோவமா இருக்கிங்க? "

" நீ இப்போ எங்க போய்ட்டு வந்தே கொஞ்ச நேரம் முன்னாடி... "

" ஏன் தலைவலிக்குதுனு மெடிக்கல் ஷாப் போய் மாத்திரை வாங்கி வந்தேன் .. "

மகா சொல்லி முடிப்பதற்குள் மகேசின் கை அவள் கன்னத்தில் 'பளார்' என்று சோக ராகம் இசைத்தது!

" நீ தலை வலிக்கா மாத்திரை வாங்கி வந்த.... படுபாவி எத்தனை நாளாடி நடக்குது இது... "

கல்யாணமான இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட மகேஷ் மகாவிடம் கோபமாய் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை... இன்று கைநீட்டி அறைந்ததில் ஆடிப்போனாள் மகா!

" எ.... எத கேட்கிறீங்க??? "

" என் புள்ளைக்கு வயித்துலயே வாய்க்கரிசி போடுறியே அதைத்தான் கேட்கறேன்! "

"................."

"என்னடி அமைதியா இருக்க... இந்த நாலு வருசத்துல எனக்கு ஒரு குழந்தை பொறக்கலனு நான் எவ்வளோ அவமானப் பட்டிருக்கேன்டி... பார்க்குறவன்லாம் துக்கம் விசாரிப்பான்... இன்னும் சிலர் ஒருபடி மேல போய் போறான்பாரு பொட்டப்பையன்னு என் காதுபடவே பேசியிருக்கான்டி... அதையெல்லாம் என்னைக்காவது வந்து உன்கிட்ட சொல்லியிருக்கேனா... குழந்தையில்லாத குறைக்கு நீ என்ன செய்வ பாவம் அப்படினு நினச்சி நான் உன் முன்னால குழந்தை இல்லனு கஷ்டபடகூட மாட்டேன்டி... ஆனா நீ... என் குழந்தைய மாத்திரை போட்டு அது உருவாகமையே தடுத்திருக்க.... பாவி இன்னைக்கு நீ மாத்திரை வாங்கும்போது என் பிரண்டு பார்த்துட்டு மச்சி பேமிலி ப்ளான்னு சொல்லி குழந்தைய தள்ளிப்போடாதே அப்புறம் கஷ்டமாகிடும்னு க்ளாஸ் எடுக்கறான்டி... உனக்கெப்படி மனசு வந்துச்சுடி... இதுல குழந்தை தத்தெடுத்துக்கலாம்னு சொல்லி தத்ரூபமா நடிப்பு வேற... ச்சே நீயெல்லாம் பொண்ணா... குழந்தை பொறந்தா உன் அழகு போய்டும்னு பயமா??? "

" மகேஷ் போதும் நிறுத்துங்க ப்ளீஸ் "

மகாவின் கண்கள் கண்ணீரை பெற்றெடுத்தது!

" என்னடி நிறுத்த... உண்மைய சொன்னா கசக்குதா??? "

" ஆமாம் நான்தான் கருத்தடை மாத்திரை போட்டேன்... இவ்வளோ பேசுறீங்களே உங்களுக்கு மலர் நியாபகம் இருக்கா... "

" மலரா.... எ.... எந்த மலர்???? "

" உங்களையே உயிரா நினைச்சிகிட்டிருந்த மலர்.... உங்க காம தேவைக்கு உபயோகிச்சிட்டு அவ வயித்துல புள்ள வந்ததும் கை கழுவி விட்டிங்களே அந்த மலர்.... அவளுக்கு உடம்புக்கு முடியாம போய் கடைசி கட்டத்துல ஆஸ்பிட்டல்ல இருக்கும் போது நான் காய்ச்சலுக்காக டாக்டரை பார்க்க போகும்போது அவளை பார்த்தேன்! அவ என்னை கண்டுபிடிச்சிட்டா... எனக்குதான் அவளை அடையாளம் தெரியல... அவதான் எல்லா விசயமும் சொன்னா... அவ இறந்ததுக்கு அப்புறம் அவ குழந்தை அனாதையா நிக்குமேனு ரொம்ப கவலைப்பட்டா... கொஞ்ச நாள்ல மகராசி போய் சேர்ந்துட்டா... இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா அந்த குழந்தைய ஏத்துக்க மாட்டிங்க... அதனாலதான் நான் அந்த குழந்தைக்கு அம்மாவாக முடிவு பண்ணி காப்பகத்துல வச்சி பார்த்துகிட்டிருக்கேன்... எனக்குனு ஒரு குழந்தை வந்துட்டா அந்த குழந்தை எனக்கு சுமையா மாறிடுமேனுதான் நான் எனக்குனு ஒரு குழந்தை பெத்துக்கல... இனி பெத்துக்கவும் போறதில்லை.... கடைசி வரை நான் மலடி தான்... அந்த ஒரு குழந்தைக்குதான் நான் அம்மா... "

தீர்மானமாய் சொல்லி துணிகளை பையில் அடைத்து கிளம்பினாள் மகா!

"நில்லு...."

மகா திரும்பி என்ன என்பது போல் கேட்டாள்!

"எங்க போற"

"என் குழந்தைகிட்ட "

" நம்ம குழந்தைகிட்டனு சொல்லு... "

மகாவின் கரத்தை பற்றிக்கொண்டு நடந்தான் மகேஷ்... புதுவாழ்வை நோக்கி!

கணவனின் மறுபக்கம்  தெரிந்தாலே கிழித்தெறியும் பெண்களுக்கு மத்தியில்... கணவன் மூலமாய் தவறான வழியில் பிறந்த குழந்தையை தன் குழந்தையாய் ஏற்று வாழ்வை அடகு வைத்த மகாவை போல் பல மகாக்கள் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

This is entry #118 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுப்பக்கம்!

எழுத்தாளர் - சரளா சத்யராஜ்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.