(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 119 - நலம்.. நலம் அறிய ஆவல்.. - ஷக்தி

This is entry #119 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம்.. நலம் அறிய ஆவல்..

எழுத்தாளர் - ஷக்தி

Solar system

வனின் மின்னஞ்சல் பெட்டியில்  ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது.

தை மாதம் 15ஆம் தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5259.  (January 30, 2159)

15 நாட்களுக்கு பின் மின்னஞ்சல்பெட்டியை  திறந்து படித்தவன், அந்த மின்னஞ்சலுக்கு  பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்தும்,பணி சார்ந்த ஏதோ சில பல கணக்கிலடங்கா எண்ணலைகள் அவனை தாக்க, சட்டென அதை மூடி, படிக்காமல் இருக்கும் மின்னஞ்சல்களின் கோப்புறையில் சேர்த்துவிட்டு, அவனின் மின்னஞ்சல் பெட்டியில் இருந்து வெளிவந்தான்.. 

அவன் மனதில் ஓடிய எண்ணங்களின் தாக்கம் ஒரு குற்ற உணர்வா, இல்லை.. முடிந்த போன நிகழ்வுகளின் மறுபிறப்பா, இல்லை.. தேவையற்ற எண்ணோட்டங்களா, இல்லை.. வாழ்வியலின்  புதிரான தடங்களா, இல்லை.. எதனால் இந்த தயக்கங்கள்  எதனால் இந்த தடுமாற்றங்கள் என  என்னவென்று புரியாமல் சிந்தித்து சிந்தித்து களைத்தே போனான் தமிழகிலன், வயது 27.

அவனது பெயரிலே தமிழ் இருப்பதால் என்னவோ அவனுக்கும் தமிழுக்கும் எதோ ஒரு புரியாதா உறவு இருப்பதாய் அவன் உணர்ந்து இருக்கவில்லை..  மனித பிறப்புகளின்  காரணம்  என்னவென்று அறிவியல் ஆயிரம் சொன்னாலும் அந்நியர்கள் ஆயிரம் சொன்னாலும், தானே தேடி அறிந்து கொள்ளாமல், இது தான் காரணம் என்பதை முடிவு செய்வதில் அவனுக்கு சிறிது தயக்கம் தான்.. 

சின்ன சின்ன விஷயங்களை கூட எவ்வளவு சிறிதாக பிரித்து பார்க்க முடியுமோ அவ்வளவு நுண்ணியமாக துளைத்து தேடுவதும் அவன் தான்.. பெரிய பெரிய சிக்கலான நிகழ்வுகளை கூட சில சமயங்களில், ஒரு பக்கம் அது அதுவாக இருக்கட்டும் என தட்டி கழிப்பதும் அவன் தான்.  இப்படி ஒரு மனவேறுபாடோடு, தனக்கு என்று எந்த குறிப்பிட்ட லட்சியமும் இல்லாதவன் போல நினைத்து கொள்பவனும் அவனே .. !

இளம் வயதிலே படித்து முடித்தவுடனே அதே தொழிநுட்ப துறையில்  இந்தியா பாலைவனத்திற்கு பெயர் போன தார் பாலைவனம் அருகே அமைந்த ஒரு அயல் நாடான ஜோத்புரில் ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணியில் சேர்ந்தான். வீட்டை விட்டு பக்கத்து தெருவிற்கு சென்றால் கூட அவனுக்கு அது ஒரு அயல் நாடு தான். 

அங்கே அதே துறையில் இலங்கையை பிறப்பிடமாகவும் தமிழை தாய்மொழியாகவும் கொண்ட செழியன் அகிலனுக்கு  அறிமுகமாகி நண்பராகிறார். செழியன் வயதிலும் சரி, தமிழ் மொழி  மேல் உள்ள அன்பிலும் சரி, அவனை விட முதுமை தான். 

ஒரு பொருளையோ உயிரையோ உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இது அனைத்திற்கும் பொருந்தும். மனிதனாகட்டும், சிறு சிறு உயிரிகளாகட்டும், இயற்கையாகட்டும், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களாகட்டும் ஒவ்வொன்றிற்கும் பின்னால் நாம் நினைத்து பார்த்திராத அளவிற்கு எண்ணிலடங்கா உழைப்புகள், இழப்புகள், கற்பனைகள், முயற்சிகள் என மறைந்திருக்கும். 

இப்படி மறைந்து கிடைக்கும் ஒன்றை பற்றிய ஆராய்ச்சியில் இருவரும் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கிடையில் தங்களை மன அழுத்தத்தில் இருந்து தளர்த்தி கொள்ள  பொழுபோக்கிற்காக சில பல வழிகளை மேற்கொண்டு வந்தனர். 

அதில் ஒன்று சிறிது நேரமாவது அவர்கள் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு தலைப்பு பற்றி  உரையாட வேண்டும் என்று திட்டத்தோடு செயல் படுத்தியும் வந்தனர்.  காதல், நட்பு, காலம், கடமை, பொறுமை, பெண்மை, பூக்கள், வெறுப்பு, கோபம், இயற்கை, ஏமாற்றம், வலி , தனிமை, இசை, புகழ், புத்தகம், தமிழ் என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு அவர்களின் உரையாடல்கள்.. நேரம் சிறிதெனினும், விவாதங்கள் ஒன்றும் மறக்கமுடியாத அளவிற்கும் என்றும் நினைவு படுத்தும் அளவில் இருந்தன.. !

இருவரும் உடன் இருந்த நாட்களை விட உருவாக்கிய நினைவுகள்  அவர்களின் நட்பிற்கு ஒரு பெரும் ஆதாரமாய் இருந்தன..!

மார்கழி மாதம்  28 ஆம்  தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5259. 

அன்று  இரவில், மரணம் பற்றி விவாதிக்க, அகிலன், " நீங்க மனித பிறப்பு பற்றி என நினைக்கிறீங்க என்று கேட்டான்.. அதற்கு செழியன், என்ன அகிலா நாம இம்புட்டு நேரம் தூங்காம வேலை வெட்டி இல்லாம இப்படிலாம் அரட்டை அடிக்க காரணமே இந்த புரியாத புதிர் தான்..!  இதுல என்னத்த விவாதம் பண்ணனும்னு பதில் அளிக்கிறார். 

சரி தான்.! அப்படியாவது கொஞ்சம் துக்கத்துல தூக்கம் வருமேனு தான் கேட்டு வச்சேன்னு அகிலன் புலம்பும் போதே, தூரத்தில் ஒரு விண்கல் வானத்துல இருந்து அவர்களை நோக்கி வருவதை பார்த்து செய்வதறியாமல் இருவரும் அதிர்ந்து நிற்க... 

தூக்கத்திலிருந்து சட்டென விழித்தான் அகிலன்.. நடந்து முடிந்தது மறுபடியும் ஏனோ அவனது எண்ணங்களிலும் தொடர சில மணி நேரம் ஆதி அந்தமும் செயலிழிந்தே போனான்.. !

அது ஒரு நிகழுலக கனவா இல்லை கனவுலக நிகழ்வா என யூகிக்க முடியாத அளவில் திணறியே, இன்று வரை அவனால் அதை மறக்கவும் முடியாமல் விட்டு விலகவும் முடியாமல், அதில் தொலைந்த அவனை தேடி கண்டுபிடிக்க முடியாமல் ஆன்ம வலிமை இழந்தே இருந்தான்..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.