(Reading time: 7 - 13 minutes)

2017 போட்டி சிறுகதை 120 - மனமாற்றம் - ஜான்சி

This is entry #120 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - ஜான்சி

Changed heart

க்கா என்னை கூப்பிட்டியா?

வேந்தன் வாயில் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு நெளிந்து, அசைந்து ஆடிக் கொண்டே வந்து நின்றான்.

நாம என்ன ராஜ பரம்பரையா என்ன? நமக்கு பேரு வச்சிருக்காங்க பேரு நான் வேந்தன் நீ ராணி ஹய்யோ ஹய்யோ..என தன்னிடம் அடிக்கடி சலித்துக் கொள்ளும் வேந்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராணி அவனை விட ஐந்தாறு வருடங்கள் பெரியவள், அவனுடைய பெரியப்பா மகள் மட்டுமல்லாது அவனுக்கு உற்ற நண்பியும் கூட.

இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ணி வச்ச நீ?

என்ன பண்ணி வச்சேன் நான்........ கொசுவர்த்தி சுருள் சுருள அவன் அன்று காலையில் நடந்தவற்றை எண்ணிப் பார்க்க தொடங்கினான்.

காலை ஏழு மணிக்கு செல்ல வேண்டிய ஸ்கூலிற்க்கு இன்று 6.30க்கே சென்று விட்டிருந்தான். தினமும் கடைசி நிமிடத்தில் ஏதோ பேய் துரத்துவது போல தலை ஒழுங்காக வாராமல், டையை ஒழுங்காக கட்டாமல் அரக்க பரக்க வந்து நிற்கின்றவன், இன்று முழு மேக் அப்பில் சீக்கிரமாய் சென்றதன் காரணம் நிச்சயமாய் ஸ்கூல் பென்ச்சை க்ளீன் பண்ணுவதற்க்கு இல்லை ஹி ஹி. காரணம் என்னவென்றால் அவனுடைய அதே 8ம் வகுப்பு பி பிரிவில் வகுப்பில் படிக்கும் பெண்ணுக்கு அன்றைக்கு அவன் ஐ லவ் யூ சொல்வதாக முடிவு செய்திருந்தான்.

அவள் பெயர் கண்மணி அமைதியான பெண் அவள்.கொஞ்ச நாட்களாக அவனுக்கு ஆர்வம். க்ளாஸ் நடக்கும் போது டீச்சரைப் பார்க்காமல் அவள் முகத்தை உற்று உற்று பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம். சும்மாவாவது போய் அவளிடம் காரணமே இல்லாமல் உளறிக் கொட்டுவான். அவள் இவனைக் கண்டுக் கொள்ளாமல் படிப்பே பிரதானம் என்று ஸ்கூலுக்கு வருகின்றவள் , அவன் செய்வதைப் பார்த்து மிரண்டாலும் பதில் சொல்லாமல் போய் விடுவாள்.

நண்பர்கள் வகுப்பில் ஆசிரியர் இல்லாத சமயம் அவளருகே செல்லும் இவனைப் பார்க்கும் போதெல்லாம், ஊரைத் தெரிஞ்சிகிட்டேன், உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி, ஏ கண்மணி” எனப் பாடுவதும், அவள் முறைப்பதும் கொஞ்ச நாளாக வகுப்பில் வழக்கமாகிக் கொண்டிருந்தது.

நண்பர்கள் தூண்டுதல் பேரில் எப்படியாவது அவளுக்கு ஐ லவ் யூ சொல்லி விட வேண்டும் என்கிற முடிவிற்க்கு அவன் வந்திருந்தான். அவ்வாரு அவன் துணிச்சலாக சொன்ன பின்னர் அவனளவில் இது ஒரு வீர சாகசமாகவே கருதப்படுமே… நண்பர்களிடம் தன்னுடைய சாதனையாக சொல்லி பெருமைக் கொள்ளலாம். மேலும் நாளுக்கு நாள் பெருகும் அந்த காதல் என்னும் பித்து அவனுக்கு மிகவும் சுகமாக இருந்தது. காதல் எனும் கற்பனைக் கனவில் மிதப்பது இருப்பதிலேயே மிகவும் இனிமையான உணர்வு என்று அவனுடைய வயது அவனை தூண்டிக் கொண்டிருந்தது.

6.30க்கு போய் அவன் க்ளாஸ் ரூமில் உட்கார்ந்திருக்க பத்து நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவராக உள்ளே வருவதும், பையை வைப்பது, செல்வதுமாக இருக்க கண்மணியும் உள்ளே வந்து பையை வைத்து விட்டு வெளியே செல்ல முயன்றாள்.

அதற்க்குள் க்ளாஸ் ரூமின் கதவை அடைந்த வேந்தன் அக்கம் பக்கம் ஒருவருமில்லை என்று உறுதி செய்து விட்டு கண்மணி ஐ லவ் யூ என்று சொல்லியே விட்டிருந்தான். பயந்து நடுங்கிய அவள் விடு விடுவென அவனைக் கடந்து கதவின் வெளியே சென்று விட்டாள்.

ஸ்கூல் ஆரம்பித்தது அசெம்ப்ளியில் ஹவுஸ் வாரியாக கூடும் போது அவள் ஏற்கெனவே தன்னுடைய க்ரீன் ஹவுஸ் லைனில் நின்றிருக்க அங்கே கடந்து சென்ற வேந்தன் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக,

“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே……….” என்று பாடி விட்டு போக அவளுடைய பக்கத்திலிருந்த தோழர்களும் தோழிகளும் அவளைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தனர்.

வேந்தனின் ஞாபகச் சுருள் சுற்றி விட்டு நின்றது

ப்போது வேந்தனிடம் ராணி அதைத் தான் விசாரித்துக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் அக்கா நம் தோஸ்த் தானே சொன்னால் என்ன என்றெண்ணியவன் ஒன்றையும் விடாமல் சொல்லி முடித்தான்.

எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அக்கா நான் அவளை லவ் பண்ணுறேன். என்னும் முன் அவன் கன்னம் இரண்டிலும் மாறி மாறி அறைந்திருந்தாள் ராணி.

அக்கா….. தன்னை அடித்த அக்காவை நம்பவே இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன். தனக்கு எப்பொழுதும் துணை நிற்கிறவள். சின்ன சின்ன தப்புகளுக்கும் நாயடி , பேயடி அடிக்கும் கண்டிப்பான பெற்றவர்களிடமிருந்து தன்னை எப்போதும் காப்பாற்றுகிறவள் இப்போது எப்படி தன்னை அறைந்தாள் என்று அவனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தோன்றியது.

சரி ஸ்கூல்ல தான் அப்படி பண்ணின அப்புறமா அவ வீட்டுக்கு போய் என்ன பண்ணின?

ம்ம்.. எச்சில் விழுங்கியவன், “அவளுக்கு ம்யூசிகல் க்ரீடிங்க் கார்ட் கொடுக்க போனேன், அவங்க கதவு பூட்டியிருந்துச்சு. அதான் அவங்க வீட்டு கதவு இடுக்கு வழியா போட்டுட்டு வந்துட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.