(Reading time: 14 - 27 minutes)

தை மாதம் 29ஆம் தேதி, ஸ்ரீ காளயுக்தி ஆண்டு, கலியுகம் 5319. (February 13, 2219)

அந்த மின்னஞ்சல் திறக்கப்பட்டது.... 

அகிலனின் ஆராய்ச்சியை பல வருடங்கள் கழித்து தொடரும் மகிழொளி, அகிலனின் ஆராய்ச்சி பணிகளில் அவர் சேகரித்த ஆதாரங்கள் தடயங்களை, அவரின் மின்னஞ்சல் பெட்டியில் சேமித்த தகல்வல்களை, தகவல் மேலாண்மை மூலம் கிடைக்கப்பெற்று ஆராய்ந்தால் மேற்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிக்கையில் இந்த மின்னஞ்சல் திறக்கப்பட்டது.. 

அந்த மின்னஞ்சலில் அகிலனின் அத்தனை கேள்விகளும் பதில் வந்திருந்தன அந்நிய குறியீடுகளிலான ஒரு மொழியில்..  அதில் குறிப்பிட்ட பதிவுகளை அகிலனின் மொழிபெயர்ப்பு செயலியின் உதவியில் படிக்க தொடங்கினாள் மகிழொளி..!

மின்னஞ்சலில் குறிப்பிட்டவை அகிலனின் கேள்விகளுக்கு பதில்களாக.. 

எங்கிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது..? இந்த விண்கல் பற்றியும் அதை சரி செய்வது பற்றியும் எப்படி துல்லியமாக தகல்வல்களை முன்கூட்டியே அனுப்ப முடிந்தது.? அதும் எனக்கு ஏன் வரவேண்டும்..? செழியனை இழக்க அந்த மின்னஞ்சலை நான் கால தாமதமாக படித்ததே காரணமா..? நான் தான் செழியனை கொன்றுவிட்டேனா ? மனித பிறப்பின் ரகசியம் என்ன..? மரணத்திற்கு பின் புதைந்து கிடைக்கும் ரகசியம் என்ன..?

பூமியை போல பல கோடி கிரகங்களை கண்காணிக்கும் ஒரு மைய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உங்கள் சூரிய குடும்பத்திற்கு அருகே உங்கள் சூரிய குடும்ப கிரகங்களின் செயல்பாடுகளை கண்டறியும் கிரக தணிக்கை நிலையங்களின் முதன்மை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி அதுவும் இதுவும்.. 

உங்கள் கிரங்களின் ஒவ்வொரு அசைவுகளும், ஒவ்வொரு கிரங்களில் உள்ள அத்தனை கிரக வாசிகளின் அசைவுகளும் ஆதவனான சூரிய நட்சத்திரத்தை பொறுத்தே அமையும்.. 

பூமியில் உள்ள கிரகவாசிகளில் மனிதன் ஒரு ஆதிக்க உயிரினமாக பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு உருப்பெற்றான்.. ஒவ்வோர் கிரக வாசிகளின் கட்டுப்பாடுகள் எங்களால் வரையறுக்கப்படும்..  மனிதன் உருப்பெறும் முன் சுமார் 250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர் உயிரினங்கள் அந்த கால பொழுதின் ஆதிக்க உயிரினமாக கருதினோம்.. 

பூமியை உருவாக்கிய காலம் தொட்டு பூமியில் வெல்வேறு கால கட்டங்களில் உருப்பெற்று வாழும் ஒவ்வொரு உயிரினங்களையும் கண்காணித்து வருகிறோம். நாங்கள் கட்டமைத்த பூமியை அழிக்கும் சக்தி, அந்த கிரகவாசிகளின் செயல்பாடுகளே பொறுத்தே அமையும். இதில் தற்போது நாங்கள் கருதும் ஆதிக்க உயிரிகள் மனிதர்கள். அவர்களின் பங்கு இந்த பூமியை காப்பதிலும் அழிப்பதிலும் முதன்மையாய் இருக்கும்.. !

250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர் உயிரினங்கள் வாழ்வியல் முறைகளை தாண்டி மற்ற உயிரிகளிடத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி  மற்ற உயிரினங்களிடத்தில் மிக பெரிய இன அழிவையும், அது  சார்ந்த இயற்கை மாற்றத்தையும் பூமியில் கொண்ட வந்தன.. இதன் விளைவில் இருந்து பூமியை காப்பதற்க்காக நாங்கள் ஆதிக்க உயிரினத்திடம் பல முறை செய்திகளை அனுப்பியும் எந்த பலன்களும் இல்லை.. !

பூமியை இழக்க கூடாதென எங்கள் மைய செயலகத்திலிருந்து கிடைக்க பெற்ற ஆணையின் பேரில் ஆதிக்க உயிரினங்களை, மிகப்பெரிய விண்கற்களை பூமியில் செலுத்தியும், எரிமலை மற்றும் மின் அதிர்வுகளை உருவாக்கியும் ஒரு பெரிய இன பேரழிவிற்கு வித்திட்டோம்.. 

இந்த மிக பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் கால இடைவெளிகளில் மிக  பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.. அப்படி உருவாக்க பட்ட உயிரினங்களில் மனிதன் ஆதிக்க சக்திகளை கொண்டு விளங்கியதால் அவனை கூர்ந்து கவனித்து வந்தோம்... ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இறப்பும் முடிவு செய்வதை எங்கள் செயலகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.. 

பிறப்புக்கும் இறப்புக்கும் நடக்கும் வாழ்வியல் அவனின் மூளையின் செயல்பாட்டை பொறுத்து அமையுமாறு மனிதன் உருவாக்கப்பட்டான்..  ஒவ்வொரு மனித மூளைகளின் கட்டுப்பாடு அவரவரிடமும், எங்களது கட்டுப்பாட்டிலும் ஒரு நகல் இருக்கும்..

உன் (அகிலன்) நகல்களை கொண்டு, நாங்கள் அனுப்பும் செய்தியை படிக்கும் திறமை உள்ளவன் என்பதை அறிந்து கொண்டு உனக்கு அனுப்பப்பட்டது அந்த செய்தியும், விண்கல் மாதிரியான செயற்கைகோள் பாகமும்.. இந்த செய்தியை  உன்னை போல இன்னும் பல மனிதர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. மற்றவர்களின் நிராகரிப்பால் இந்த செய்தி ஒரு குப்பையாகவும் வெறும் விண்கல்களாகவும் ஒதுக்கப்பட்டது பல ஆண்டுகளாக... எல்லாம் அவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.. 

நீ அதை ஆராய்ந்து உனக்கு எங்கள் குறியீடுகளை படித்து உணரும் திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்பதை நிருபித்து விட்டாய்... அதன் அடிப்படையில் உனக்கு இந்த பதில் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.. 

உன்னுடைய கால தாமதத்தால் நீ செழியனை இழந்தாய்.. கால தாமதமும் உன் எண்ணங்களின் வெளிப்பாடே..  இழப்பும் வாழ்வின் ஒரு சாயல் என்பதை காலம் உனக்கும் உணர்த்தியிருக்கும்.. அது கொலை இல்லை.. இது கிரக வாசிகள் அறியா வகைப்பாடுகள்... செழியன் இறப்பு நிர்பந்திக்கப்பட்டது என்றோ.. உனக்கும் அந்த நிகழ்விற்கு  எவ்வித தொடர்பும் இல்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.